Wednesday, August 4, 2010

கனகதுர்காவுடன் நான்....!!

கனகதுர்காவுடன் நான்....!!


கனகதுர்கா... இப்போ என் கூட தான் இருக்கா .ரெண்டு மாசம் முன்னாடி அவளை கே.கே.நகரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்தவுடனேயே புறட்டனும் போல இருந்தது, ரேட் கேட்டேன், 250 ரூபாய் என்றார்கள்... வாங்கி வந்துவிட்டேன்.ஹலோ ஒரு நிமிஷம்,நான் பேசிட்டு இருக்கிறது நம்ம பாஸ்கர் சக்தி அண்ணன் எழுதின கனதுர்கா என்ற சிறுகதை தொகுப்பு புத்தகத்தை பத்தி மட்டும்னு சொல்லிக்க விரும்புறேன்....!! வம்சி புக்ஸ்வெளியீட்டு உள்ளார்கள்.

கனதுர்கா என்று ஒரு சிறுகதை தொகுப்பு இருக்கிறது என்று அண்ணன் தண்டோரா மணிஜி அவர்கள் ஒரு தடவை எழுதி இருந்தார். மேலும் அதில் வர்ற அழகர்சாமியின் குதிரைசிறுகதையை தான் 'வெண்ணிலா கபடி குழு' சுசீந்திரன் அடுத்த படமாக எடுக்க போகிறார் என்றும் கூறியிருந்தார். இதுக்கு அப்புறமும் புக்கை வாங்காம விட்ட எப்படினு...நேரா நம்மடிஸ்கவரி புக் பேலஸ் சென்று கனகதுர்கா மற்றும் மேலும் சில புத்தகங்களை வாங்கி வந்தேன்.பதிவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் உண்டு.

சத்தியமா இந்த பதிவு புத்தக விமர்சனம் இல்லங்க....இந்த புத்தகத்தில் மொத்தம் 31 சிறுகதைகள் இருக்கு. இதில் நான் படிச்சு ரசிச்ச சில சிறுகதைகள்னு சொன்னா எல்லாத்தையும்சொல்லணும்...அதனால ரொம்ப பிடிச்ச....பாதித்த கதைகள்பத்தி மட்டும் சொல்றேன்...பாஸ்கர் சக்தி அவர்கள் தேனிபக்கம் என்பதால் இந்த தொகுப்பில் பல கதைகள் அங்கே நடப்பது போல் இருக்கும்... சில கதைகளில் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தான் தொகுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
*******************
அழகர்சாமியின் குதிரை:
எனக்கு எப்பவுமே ஒரு ஆர்வம் உண்டு அது ஒரு நாவல் அல்லது சிறுகதையை எப்படி படமாக எடுப்பார்கள் என்று பார்க்க ஆசை. அதனால இந்த கதையை தான் முதலில் வாசித்தேன். இந்த கதையில் பல கேரக்டர் வரும், நையாண்டி நக்கல் என்று குறைவில்லாமல் சுவாரசியமாக சென்றது.
நாமும் இந்த கதைக்குள் சென்றது போன்ற உணர்வு கண்டிப்பாக
ஏற்படும்.
ஊரில் இருக்கும் அழகர்சாமியின் வாகனமான உயிரில்லா குதிரை
காணாமல் போனதால் நடக்கும் சம்பவங்களே கதை. இந்த கதையில்
நாயகனாக நடிக்க போறவர் அப்புக்குட்டி என்று படித்தேன். நல்ல
தேர்வு தான். கண்டிப்பா படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது..
கதையை படித்தாலே பல இடங்களில் சிரிப்பு வரும்...அதுவும்
அந்த டைமிங் காமெடிகள் செம...!!
மகன் :
இந்த கதையில் வரும் பையன் தன் அப்பாவை பற்றி பேசுவதே
கரு. ஆனால் அப்பாவை பாராட்டி பேச மாட்டான்..மட்டம் தட்டுவது
போல் கதை செல்லும்... தன் அப்பாவை விட தன்னை உயர்வாக
நினைப்பான். தன் அப்பாவின் நினைவற்றால் நினைத்து கடைசியில்
அவன் கண்ணீர் சிந்தும் போது...உண்மையிலே எனக்கு தலையில்
சூர்னு ஏறிச்சு...பீலிங்க்ஸ்.... இந்த கதையை படிக்கும் போது மறைந்த என் அப்பாவின் நினைவும் வந்தது...!!சுஜாதாவோட பீட்டர் கதைக்கு அப்புறம் இந்த கதையை நிறைய பேர் கிட்ட இப்போ சொல்லிக்கிட்டு இருக்கேன்......
ஏழுநாள் சூரியன் ஏழுநாள் சந்திரன் :
இந்த கதை ஒரு சிறு பையனுக்கும் அவனது சித்தப்பாவுக்கும்
இடையே உள்ள உறவை மிக இயல்பாக காட்டுகிறது. இந்த
கதையை படிச்சு முடிச்சவுடன்...ச்சே.. நமக்கு இப்படி ஒரு
சித்தப்பா இல்லாமா போயிட்டாரே என்று வருத்த படவைக்கும்.
தன் அண்ணனுக்கு நேர்மாறான ஒரு கேரக்டர், எதிலும்
கோபப்படாமல் மனிதநேயத்துடன் இருப்பவராக அந்த
பையனுக்கும் காட்பாதர் ஆக வரும் சித்தப்பா கேரக்டர் சூப்பர்....!!


வேலப்பர் மலை :

தனது மாமாவுக்கும் தனக்கும் சிறு வயதில் நடந்த நிகழ்ச்சிகள்
மற்றும் தான் வலம் வந்த தென்ன மரதோப்பை ஏன் மாமா
தீடிர் என் விற்க போகிறார் என்று கதை ஒரு டச்சிங்காவே
சென்றது. நானும் அந்த பச்சை பசேல் கிராமத்துக்கு போன
உணர்வு கிடைத்தது.



நட்சத்திர கடை நொண்டன்:

செம நக்கல் நையாண்டி இந்த கதையில் உண்டு. அதே போல்
பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத கதை. நொண்டன் பேர் காரணம்
'நொண்டப்பய' என்பதே. ஜோசியகாரரை நொண்டன் நோண்டுவது
அதனால் அவர் சாபம் விடுவது.... கடைசியில் என்ன நடக்கும்
என்ற ஒரு ஆர்வம் கண்டிப்பாக படித்து கொண்டிருக்கும் போதே
வரும்..... அப்படியே மனகண்ணில் குறும்படம் பார்த்த திருப்தி..


வாட்டர் லூ :

இப்போதைக்கு நம்ம ஊரில் பல பேர் செய்து கொண்டிருக்கும்
வேலை தான் இது. அதான்ங்க ஏமாத்து வேலை, பிராடு பண்றது...
இதில் வரும் நாயகன் நெகடிவ் கேரக்டர்..அவர் செய்த பிராடு
வேலைகளை பட்டியிலிட்டு தன் மருமகனிடம் சொல்வார்,..
அவனையும் அப்படியே இருக்க சொல்வார்..கடைசியில் அவரே
ஏமாந்தும் போய்டுவார்....


உதயாவுக்கு திலகா சொன்ன கதை :

கண்டிப்பா இந்த கதையோட கிளைமாக்ஸ் இப்படி இருக்கும்னு
யூகிக்கவே முடியலை. காதல் தோல்வி பற்றி திலகா சொல்லும்
காரணங்கள் நன்றாக இருந்தது.


நாகம் :

நாகையா என்பவரை பற்றி கதை பேசுகிறது. பாம்பு விஷம்
முறிப்பவராக அந்த கிராமத்தில் இருக்கிறார். அனைவரும்
மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கின்றனர். தீடிர் என்று
ஊரில் ஒருவரது குடிசையை காலி செய்து அதை நாக கோவிலாக
மாற்றி விடுகிறார் இந்த நாகையா. கடைசியில் பாம்பு கடித்தே
நாகையா இறந்து போவது...கண்டிப்பா நமக்குள் பல கேள்வி
எழுப்பும்....

வீராசாமி பி.காம்.

இந்த கதையின் நாயகன் போல் நம்மூரில் இன்னும் சில பேர்
சுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.கண்டிப்பாக நாம்
அனைவரும் இந்த கேரக்டரை நம் வாழ்நாளில் சந்தித்து
இருப்போம். தான் தான் இந்த ஊரில் அதிகம் படித்தவன்
அடுத்தவன் பேச்சை கேட்ககூடாது என்று நினைத்து நினைத்து
மனம் முற்றியவன் பற்றி கதை...


விரியன் பாம்பு குட்டிகள் :

ஊர் ஒதுக்கு புரத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்த கருப்பு
நாயின் சோக வடுவே இந்த கதை. அந்த நாயை நினைத்தால்
ரொம்ப பாவமாக இருக்கிறது. ஆனா இங்கே மேல அந்த
நாயை காப்பாற்றுகிறேன் என்று அதை சாக அடிக்க முயற்சி
செய்வார்கள். கடைசி ஐடியாவில் அந்த நாய் செத்தும் விடும்...
இந்த கதையை படித்து முடித்ததும்...இது தான் நாய் படும்
பாடா...என்று யோசிக்க வைத்தது....!!



இன்னும் நிறைய பிடித்த கதைகள் இருக்கு...பதிவு ரொம்ப
பெருசா போற மாதிரி இருக்கு...அதனால் இப்போதைக்கு அப்பீட்டு...
உங்களுக்கு பதிவு பிடிச்சு இருந்தா ஓட்டு போடுங்கள்....



நன்றி

ஜெட்லி...(சரவணா...)

16 comments:

KUTTI said...

ஹலோ ஜெட்லி,

எப்டிங்க..இப்படி TITLE பிடிக்கீறீங்க..

புத்தக விமர்சனம் அருமை.

மனோ

vasu balaji said...

பகிர்வுக்கு நன்றி:)

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி ஜெட்லி.

பிரபாகர் said...

சரண்,

புத்தக விமர்சனம் உங்களின் பார்வையில் மிக அருமை. இதுபோல் படித்ததை பகிர்ந்துகொள்ளுங்கள்...

வாங்கும் எண்ணத்தை தூண்டியிருக்கிறீர்கள்...

பிரபாகர்...

Sadhiq said...
This comment has been removed by the author.
Busy said...

How is it Jet li

Convert frm Mokkai

Good one !!!

கார்த்திகைப் பாண்டியன் said...

புதிய முயற்சி.. அறிமுகத்துக்கு நன்றி சரவணா:-)))

க ரா said...

நல்ல பகிர்வு. நன்றி :)

Chitra said...

நல்ல பகிர்வு! நன்றி. Looks like a good book!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பகிர்விற்கு நன்றி ஜெட்லி.

ஜெட்லி... said...

அனைவருக்கும் நன்றிகள் பல....

CS. Mohan Kumar said...

ஆமா எங்க சங்கரை ரொம்ப நாளா காணும்

ஜெட்லி... said...

அவரு பிஸி ஆயிட்டார் அண்ணே...

R. Gopi said...

//புத்தக விமர்சனம் உங்களின் பார்வையில் மிக அருமை. இதுபோல் படித்ததை பகிர்ந்துகொள்ளுங்கள்...

வாங்கும் எண்ணத்தை தூண்டியிருக்கிறீர்கள்...//

நான் ​சொல்ல வந்ததும் அதே தான்.

DRACULA said...

nalla story anna

சிநேகிதன் அக்பர் said...

விமர்சனம் நல்லாயிருக்கு ஜெட்லி.