சரி மாயாஜால் போய் ரொம்ப நாள் ஆச்சேனு களவாணி படம்
பார்க்க வண்டியை மாயாஜால் பக்கம் திருப்பினேன். பெட்ரோல்
போடுவோம் என்று கொட்டிவாக்கம் பங்கில் வண்டியை
நிறுத்தினேன். அங்கே பார்த்தா எனக்கு முன்னாடி நின்ன ஆளுக்கு
மூப்பது ரூபாயில் இருந்து பெட்ரோல் போட ஆரம்பித்து நூறில்
நிறுத்தி அந்த ஆளிடம் நூறு ரூபாய் வாங்கி கொண்டு, கையில்
இன்னைக்கு ஆட்டையை போட்டதை நோட் பண்ணான் பெட்ரோல்
பங்க் களவாணி. சொன்ன நம்ப மாட்டிங்க அவன் கை புல்லா
கிறுக்கல் தான்....!!
பெட்ரோல் ரொப்பி கொண்டு ஈ.சி.ஆரில் வண்டியை விரட்டினேன்,
சோளிங்கநல்லூர் கட்டிங் தாண்டியவுடன் அங்கே ஒரு களவாணி
கூட்டம் வர போற வண்டியை மறிச்சு ஆட்டையை போட்டுட்டு இருந்தாங்க.....அதாங்க டிராபிக் போலீஸ்... ஒரு வழியா மாயாஜால்
அடைஞ்சு அங்கே 120 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து உள்ளே போய்
உட்கார்ந்தா எல்லாம் பழசு....இனிமே படம் மாயாஜால் படம் பார்க்க வந்தா ஸ்க்ரீன் 7 டு 10 இல் தான் போகணும் என்று முடிவெடுத்தேன்.
சற்குணம் இயக்கத்தில் ஓம்ப்ரகாஷ் ஒளிப்பதிவில் குமரன் இசையில்
வெளிவந்திருக்கும் படம் களவாணி. நம்ம பசங்க விமல் தான்
கதையின் நாயகன்.அவருக்கு அம்மாவாக சரண்யா அப்பாவாக
இளவரசு.புதுமுக நாயகி ஓவியா. கஞ்சாகருப்பு அப்புறம் வெண்ணிலா
படத்தில் பரோட்டா தின்பாரே அவர் என்று பெரிய கூட்டம் இருக்கிறது.
களவாணி டைட்டிலே சொல்லிடும் இது தான் கதையாக இருக்கும்
என்று. அது போல் தான் ஹீரோ சும்மா ஊர் சுற்றுகிறார். பக்கத்துக்கு
ஊருக்கும் இவுங்க ஊருக்கும் சண்டை. ஹீரோ பக்கத்துக்கு ஊரு
பொண்ணை லவ்வுகிறார் பின்னே என்ன நடக்காது என்பதே கதை
திரைக்கதை.
நான் கூட போஸ்டர் பார்த்தவுடன் திரும்பவும் கத்திய தூக்கிட்டு
ஹீரோ ஓட போறார் அப்படின்னு நினைச்சேன் ஆனா படம்
அப்படி இல்லை. விமல் நக்கல் கேரக்டர் பண்ணுவதில் கில்லாடியாக
தான் இருக்கிறார். அவர் சார் சிகரெட் கேட்டதும் முழு பாக்கெட்
தூக்கி போட்டுட்டு இல்லை என்று சொல்லி அவர் போனவுடன்
என் பணத்தை காலி பண்ணது பத்தாதா என்று சிகரெட் பாக்கெட்டை
மீண்டும் எடுப்பதில் இருந்தே ஆள் நக்கலை தொடங்கி விடுகிறார்.
ஓவியா..கதாநாயகி. நல்லா பண்ணியிருக்கு.ஆனா இந்த பொண்ணு
வர சீன் தான் கொஞ்சம் மொக்கையா இருக்கு. அதுவும் முதல்
சீன்லாம் ரொம்ப ஓவர்...ஏதோ மொட்டை உடைச்சு பார்த்தா
அவங்க 11 th பாஸ் ஆயிருமாம், அப்புறம் குளிச்ச பாவாடையோடு
ரோட் வரைக்கும் வரது எல்லாம் ரொம்ப குழந்தைதனம்.ஆனா
ரசிக்க முடியலை.
ஜோதிடம் மீது நம்பிக்கை வைத்து மகனுக்கு நேரம் சரியில்லை
அதனால் தான் இப்படி இருக்கான் என்று அளவுக்கு மீறி பாசம்
வைக்கும் அம்மாவாக சரண்யா. இவங்க வர்ற எல்லா காட்சியும்
நல்லா இருக்கு... குறிப்பா கடைசியில் விமல் கல்யாணம் பண்ணி
வீட்டுக்கு வரும் போது செம கலாட்டா பண்ணி இருப்பாங்க....
கண்டிக்கும் அப்பாவாக இளவரசு ஆனா பல சமயம் காமெடி
பீஸ் ஆகி விடுகிறார் மகனால். கஞ்சா கருப்பு பல இடங்களில்
சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் சில இடங்களில்
கண்டிப்பாக சிரிப்பு வருகிறது. வெண்ணிலா பரோட்டாவை
இன்னும் யூஸ் பண்ணி இருக்கலாம் முதலில் படத்தில்
தோன்றுபவர் பின்பு இடைவெளி பின்பு தான் வருகிறார்.
இன்னொரு கேரக்டர் ஒருத்தர் வரார் கதாநாயகி அண்ணனாக
அவரை வில்லன்னு சொல்ல முடியாது அவரும் நல்லா பண்ணி இருக்கார்.
ரைட்...நாம மேட்டர்க்கு வருவோம்...படம் எப்படி...
முதல் பாதி கொஞ்சம் கலகலப்பா கொஞ்சம் போர்ஆ போச்சி...
ரெண்டாவது பாதியும் அதே மாதிரி தான் இதில் கலகலப்பு
கொஞ்சம் அதிகம் அவ்வளவு தான். பாட்டு எல்லாம் சின்னது
தான் உடனே முடிஞ்சுடுது.... படம் சூப்பர்னு சொல்ல முடியாது.
ஆனா ஓகே...டைம் பாஸ் ஆகலைனா கண்டிப்பா போலாம்.
மற்றபடி படத்தில் செண்டிமெண்ட், காட்டு கத்தல் என்று எதுவும்
இல்லை...!!
களவாணி - பார்க்கலாம்...!!
தியேட்டர் நொறுக்ஸ்:
# படம் ஆரம்பிக்கும் போது மொத்தம் என்னையும் சேர்த்து 12 பேர்
தான் இருந்தோம் அதிலும் தியேட்டர் ஊழியர்கள் நாலு பேர்
என்பது குறிப்பிடதக்கது. இருபது நிமிடம் கழித்து அது இருபது
பேர் எண்ணிக்கையானது. அதில் தியேட்டர் ஊழியர்கள் ஆறு பேர்.
# ஒரு காட்சியில் விமல் நாயகியை சைக்கிள்இல் முன்னாடி
வைத்து அழைத்து கொண்டு போவார்...அதை பார்த்த பின்
இருக்கை நண்பர்...
" என்னடா அந்த பொண்ணு குழந்தை மாதிரி இருக்கு..."
உடனே அவர் நண்பர்...
" விமல் இப்பவே அதுக்கு குழந்தை கொடுக்க ரெடியா இருக்காரு..
நீ வேற குழந்தையாம்"...
# படத்தில் ஒரு சீன்ல கூட சீன் இல்லைங்க...ஏதோ ரெகார்ட்
டான்ஸ் காட்சி வரும். அதில் ஆடும் ரீட்டாவை பத்தி பெருமையாய்
பேசி கொள்வார்கள்...சரி குத்து பாட்டு ஒண்ணு வந்துடிச்சுனு
பார்த்தா....ரீட்டானு ஏதோ ஒரு கிழவியை கூட்டிட்டு வந்து
டான்ஸ் ஆட விட்டுடாங்க...கொடுமைடா சாமி...
(முமைத் கான் லாம் பாத்து எவ்ளோ நாள் ஆச்சு!!)
# படம் முடிந்ததும் வழக்கம் நம்ம ரேவதி ஹோட்டல் போய்
பரோட்டா சாப்பிட்டு கூடவே முட்டை லாபா ஒன்றையும்
டேஸ்ட் செய்தேன்....நீங்களும் மாயாஜால் போன ட்ரை
பண்ணி பாருங்க...
இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
வாக்கை போடுமாறு கேட்டுகொள்கிறேன்.
ஜெட்லி... (சரவணா...)
40 comments:
நான் first ?
ரெண்டு பாட்டு நல்லா இருக்குமே பாஸ்..
பாத்துடலாம். ட்ரீட் எல்லாம் கிடையாது ஓகே வா?
Thanks for the review.
with 8 people (8 * Rs.120), one show, How they are able to manage the cost of that 1 show.
Pentamedia becomes pitymedia.
அப்ப களவானி படம் நம்மை மனசை கொஞ்சமாதான் திருடுதுன்கிறீங்க!
பாஸ் உங்க விமர்சனத்தை விட அடிக்கடி கலந்து கட்டி ஊடால நடக்குற அக்குரமங்களையும் நகைச்சுவையாவே சொல்றீங்க.. நெம்ப நல்லாருக்கு பாஸ்...
தியேட்டர் கமெண்ட் சூப்பர். :)
படம் டைம் கிடைக்கும் போது பார்த்துடறேன்.நன்றி ஜெட்லி.
Yen boss kaathadura theatreku thaniyava padam paarkka povanga, thunaiku aal koopdu poganumnu theriyatha? (friends ah than solren! Vera ethuvum illai)
mokkaiyo sakkaiyo ella padamum paarka oru dill venum,intha materla "dillu dora" neer than!
mayajal pentamediakite irunthu kaimaari romba kaalam aachu,maaran brothers binami vasam ippo. Cricketer k.srikanth than nirvagam @ ramji
ஓ. இந்த படம் ரிலீஸ் ஆகிடுச்சா.. இப்பெல்லாம் உங்க விமர்சனம் படிச்சுத்தான் படம் ரிலீஸ் ஆனதே தெரியுது.
@ ராம்ஜி_யாஹூ
வேற என்ன பண்றது...
இந்த மாதிரி படத்துக்கு இவ்ளோ தான் பாஸ்
கூட்டம் வரும்... மூணு நாள் இல்ல ஒரு வாரத்தில்
எடுத்து விடுவான்.... சிங்கம் ராவணன் எல்லாம்
நல்ல கூட்டம் அதில் எடுத்து விடுவான்....
@ Mohan
சரியா...சொன்னீங்க அண்ணே...
@ப்ரியமுடன்...வசந்த்
நன்றி வஸந்த்...
@ILLUMINATI
நன்றி.... நல்ல முடிவு..
@ வவ்வால்
என்ன அண்ணே பண்றது....
பொங்கறது எல்லாம் பீர்னு நினைக்கிற
பச்சை புள்ளையாவே வளந்துட்டேன்....
@பின்னோக்கி
நல்ல விஷயம் தான்....
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா
//ட்ரீட் எல்லாம் கிடையாது ஓகே வா? //
என்னமோ பத்து தடவை ட்ரீட் கொடுத்த மாதிரி...
படத்தை பக்கான்னு இருந்தேன்.. உங்க விமர்சனம் பாத்ததும் காசு மிச்சம்
ரொம்ப பொறுமை வேணும் இந்த படத்தையும் பார்த்து அதுக்கு விமர்சனமும் போட! ஆனால் அந்த முட்டை லாப்பா பார்த்தாலே நாக்கு ஊறுதே!
இந்த திரைப்படத்துறையினர் இந்தப் புள்ளைக்கு ஒரு விழா எடுக்க மாட்டீங்கறாங்களே:))
வானம்பாடிகள் said...
இந்த திரைப்படத்துறையினர் இந்தப் புள்ளைக்கு ஒரு விழா எடுக்க மாட்டீங்கறாங்களே:))
........பதிவர்கள் சார்பாக நாம் தான் போராட்டம் நடத்தி, அவர்களை விழா எடுக்க வைக்கணும் போல.... ஹா,ஹா,ஹா,ஹா....
இன்னும் படம் பார்க்கவில்லை . உங்களின் விமர்சணமே சொல்கிறது படத்தின் தரத்தை . பகிர்வுக்கு நன்றி
//நம்ம ரேவதி ஹோட்டல்//
அதென்ன 'நம்ம' ரேவதி?.......சொல்லவேல்ல ;)))
ஹ்ம்ம் அப்போ நம்பி பார்க்கலாம் போல ..
So SAD,...
- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com
அப்ப இது டைம்பாஸ் படம்தானா?.. டைலர் கட்டிங்கை வச்சி இந்த படத்தை பார்த்தே ஆவனும்னு நினைச்சேன்..
@ஜாக்கி சேகர்
//அப்ப இது டைம்பாஸ் படம்தானா?.. டைலர் கட்டிங்கை வச்சி இந்த படத்தை பார்த்தே ஆவனும்னு நினைச்சேன்..
//
டைம்பாஸ் தவிர வேற என்னணே நமக்கு வேணும்...
கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும்...
@கே.ஆர்.பி.செந்தில் said...
//
படத்தை பக்கான்னு இருந்தேன்.. உங்க விமர்சனம் பாத்ததும் காசு மிச்சம்
//
படம் அந்தளவுக்கு மோசமில்லை அண்ணே....
டைம் கிடைச்சா பாருங்க..
@Software Engineer
நாக்கு ஊறுதா....வாங்க கிளம்பி போவோம் பாஸ்...
@வானம்பாடிகள்
@Chitra
ஏன்...??
@♥ ℛŐℳΣŐ
பாத்துட்டு சொல்லுங்க...
@ ரகு
ரேவதி ஹோட்டல்...மாயாஜால் முன்னாடி ரைட் சைட் இருக்கும்...
லோக்கல் ஹோட்டல் தான் என்றாலும் டேஸ்ட் நன்றாக இருக்கும்...
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி..
நீங்க சொல்றத பாத்தா, எங்க ஊர்ல போட்டா ஒரு தடவ பார்க்கலாம்னு சொல்லுங்க..
எப்படியும் நாங்க பார்ப்போம்ல :)
சார், ஓசில படம் பார்த்த உணர்வு. அத சரிகட்ட ஓட்டு போட்டுள்ளேன்.
கலக்குங்க பாஸ்.
அ ஆ
மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு அளிக்கும் / பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.
இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs ௨௦௦௯ என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:
வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா
உங்கள் விமர்சனம் தான் நான் முதலில் படித்தது!! அதே மிடுக்கில் படமும் பார்த்து பதிவும் போட்டாச்சு! நன்றி!!
nalla vimarsanam... padam pathuttu solren... nalla flow of writing...
வழக்கமான நச் பஞ்ச்ஸ்
Post a Comment