வேதம் ஒகா அந்தமைனா மதுரமைனா அநுபூதி.. என்டுகன்டே
னா ஜீவிதம்லோ மொட்ட மொடடி சாரிக தெலுகு சித்ரம் சுசனு....!!
நண்பன் கிட்ட கிழே எழுதியுள்ளதை தெலுங்கில் எப்படி எழுதணும்னு கேட்டு கஷ்டப்பட்டு ட்ரை பண்ணேன்....தப்பா இருந்தா தெலுங்கு நண்பர்கள் மன்னிக்கவும்....!!
************************************
இதூ தெலுங்கிளு நேக்கு முதலு சித்ரம்!!
அகில உலக வரலாறில் முதல் முறையாக தியேட்டருக்கு சென்று முதல் தடவையா வாழ்க்கையில் ஒரு தெலுங்கு படம் பார்த்தேன். அதுவும் ஒரு நல்ல தெலுங்கு படம் பார்த்த திருப்தி கிடைத்தது. உனக்கு தெலுங்கு தெரியுமா?? அப்படின்னு நீங்க கேட்டா....சுத்தம்னு தான் சொல்லணும். ஆனா தெலுங்கில் என்ன படம் பண்றாங்க, யாரு டாப் ஹீரோ, என்ன ரீமேக் பண்றாங்க என்று ஓரளவுக்கு தெலுங்கு சினிமா அறிவு இருக்கிறது.ஆனா இந்த பாலகிருஷ்ணாவை பார்த்தால் தான் எனக்கு கொஞ்சம் பயம் அவரு தீடிர் தீடிர்னு கத்துவார் தொடையை தூக்கி சவால் விடுவார்....!
(எல்லா புகழும் ஜெமினி டி.வி.க்கே,,,)
திங்கள்க்கிழமை நான் ராவண் ஹிந்தியில் பார்க்கிற பிளான் தான் வெள்ளிக்கிழமை ரெண்டு மணி வரைக்கும் இருந்தது...அப்புறம்
தான் உங்களுக்கு தெரியுமே...!! பேப்பரை பராக்கு பார்க்குற
நேரத்தில் என் கண்ணில் சிக்கியது வேதம் படத்தின் விளம்பரம்.
அனுஷ்காவோட படத்தை பார்த்ததும் அவர் என்னை தியேட்டருக்கு
அழைப்பது போல் இருந்தது. சரி ஏற்கனவே இது ஒரு நல்ல படம்
அப்படின்னு சொல்லி இருக்காங்க...அப்படின்னு கிளம்பி போய்ட்டேன்.
மொழியே தெரியலனாலும் படம் போர் அடிக்காம போகுது...
நல்ல படங்களை அதுவும் உணர்வுபூர்வமான படங்களை
ரசிக்க மொழி ஒரு தடையில்லை....!!அவங்க என்ன சொல்றாங்கனு
ஓரளவுக்கு யூகிக்க முடியுது. ஆனா தெலுங்கு தெரிஞ்சு இருந்தா
இந்த படம் கண்டிப்பா ஒரு விருந்து தான்.
இது தான் வேதம்.
மொத்தம் அஞ்சு கிளை கதைங்க...அந்த அஞ்சு கதையயும் கடைசியில் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கிறார் இயக்குனர் க்ரிஷ்.அல்லு அர்ஜுன், மனோஜ், சரண்யா மற்றும் கிழவர், அனுஷ்கா,அப்புறம் மனோஜ் பாஜ்பய். உண்மையிலே செம திரைக்கதை.மொழி தெரியாமலேயே போர் அடிக்காம போகுதுங்க.
படத்தில் எந்த ஒரு ஹீரோயிசம் இல்லை, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
அல்லு அர்ஜுன் ஆந்திராவில் ஸ்டார் வால்யு உள்ளவர், அவர் இந்த படத்தில் அதுவும் இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பது நல்ல விஷயம். அதுவே நம்ம ஆளுங்க செய்வாங்களானு கேட்டா கஷ்டம் தான்... நேத்து வந்தவங்க கூட கையை காட்டி பஞ்ச் பேசி மக்களை டிஞ்சர் போட வைக்கவே விரும்புகிறார்கள். இந்த படத்தை பார்த்தாவது திருந்துவாங்களா
நம்ம ஊரு தளபதிகள்...?
மனோஜ், நம்ம மோகன்பாபு பையன்.இவரு நடிச்ச டப்பிங் படம் என்னை தெரியுமா?? என்ற படத்தை சாந்தியில் பார்த்து இருக்கிறேன். பார்க்க போன காரணம் சிம்பு பாடிய பாடலும் ரியா சென்னும் தான் என்றாலும் படம் பார்த்த பின் தான் தெரிந்தது ஏன் டைட்டில் என்னை தெரியுமானு வச்சி இருக்காங்கனு.... என்னை தெரியுமா இதுவரைக்கும் நான் நடிச்ச படம் எதுவுமே ஒடனதில்லைனு தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் சொல்ல வந்த படம் தான் அது என்று. ஆனால் இந்த படத்தில் நன்றாவே நடித்து நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறார். கூட வர நம்ம லேகா வாஷிங்டன் கொள்ளை அழகு!!
அனுஷ்கா...ஐயோ என்ன சொல்றதுனே தெரியலைங்க.அனுஷ்கா விபச்சாரியாக செம சீன் காட்டி இருக்காங்க அதாவது சீனா நடிச்சு இருக்காங்கனு சொல்றேன். அனுஷ்கா செம ரோல்...!! அனுஷ்கா ரசிகர்கள் கண்டிப்பா பார்க்கவேண்டிய படமிது. மிஸ் பண்ணிடாதிங்க மக்களே!!
நம்ம ஊரு சரண்யா பொன்வண்ணன் வழக்கம் போல் பிள்ளைக்கு
ஏங்கும் அம்மாவாக நடித்து இருக்கிறார். அப்புறம் இந்த மனோஜ்
பாஜ்பய்யை ஏன் இன்னும் நம்ம தமிழ் சினிமாகாரங்க இவரை யூஸ்
பண்ணலனு தெரியல. நல்ல நடிகர் அவரை தமிழ் சினிமா யூஸ் வேண்டும்.
வேதம் படத்தில் மூணு சீன்ல கண்ணு கலங்கிடுச்சுங்க...
குறிப்பா அல்லு அர்ஜுன் பணத்தை திருடி அதை வைக்கும் போது
நடக்கும் காட்சிகள், கடைசியில் இருவரும் இறக்கும் காட்சி, அதுக்கு அப்புறம் மொழியே தெரியாம பீல் பண்றியே ஜெட்லினு சொல்லிட்டு அதுக்கு ஒருக்கா நானே பீல் பண்ணிக்கிட்டேன்... என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன் யுவர் ஆனர்!!
இந்த படத்தை தமிழ் வசனத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ரீமேக் எல்லாம் பண்ண வேண்டாம்.டப்பிங் பண்ணி ரீலீஸ் பண்ணாலே போதும். இங்கே ரீமேக் பண்ண இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆகும். அதுக்குள்ள இதில் உள்ள சீனைஎல்லாம் குட்டி படம் போல் பல படத்தில் வந்து விடும் அபாயம் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
ஏன்டா...தமிழ் படத்தை மொக்கைனு சொல்லிட்டு தெலுங்கு
படத்தை பாராட்டுரியேனு நீயெல்லாம் தமிழனா நீங்க கேட்டா...
ஐயோ நான் தமிழன்ங்கோ...நான் தமிழன்...அய்யோயோ நான்
தமிழன்ங்கோ...!!
வேதம் - அந்தமைனா சித்ரம்!!
இந்த விமர்சனம் மாதிரி பிடித்து இருந்தால் ஓட்டு போட்டு உங்கள்
ஆதரவை தெரிவிக்கவும்...!! நன்றி...
ஜெட்லி...(சரவணா...)
23 comments:
JEDLI KANNA,UNAKKA ELLAVITTALUM THAMGA THALAIVI ANUSKA KAKA PADAM PARKA SELKIREN.(UNNA NAMBITHAN POREN)
ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம் பாத்துருப்பிங்க போல
//ஏன்டா...தமிழ் படத்தை மொக்கைனு சொல்லிட்டு தெலுங்கு
படத்தை பாராட்டுரியேனு நீயெல்லாம் தமிழனா நீங்க கேட்டா...
ஐயோ நான் தமிழன்ங்கோ...நான் தமிழன்...அய்யோயோ நான்
தமிழன்ங்கோ...!!
//
லைசன்ஸ் கீதா நைனா? :)
//நான் தமிழன்...அய்யோயோ நான்
தமிழன்ங்கோ...!!//
/இடுகையிட்டது ஜெட்லி //
ஏய் நீ சீனாக்காரந்தானே? :) மாட்டினியா?
// இந்த படத்தை பாராட்டி கலைஞருக்கு தந்தி அனுப்பலாமா? ராவணா பாத்தாச்சு மொக்கை. என் பதிவை படிக்கவும்
அனுஷ்காவை ரசிக்க மொழி எதுக்குனு கேக்குறீங்க???
ரைட்டு நடத்துங்க
வேதம் - அந்தமைனா சித்ரம்!!
..... வேதம் - அனுஷ்கா சித்ரம். ;-)
\\\இந்த படத்தை பார்த்தாவது திருந்துவாங்களா
நம்ம ஊரு தளபதிகள்...?\\
தளபதின்னா யாரு நம்ம கார்க்கி அண்ணனா?
jetli.. மூன்று கதைகள் தான். மொத்தத்தில் ஐந்து இல்லை.. மற்றகேரக்டர்கள் எல்லாம் மூன்று கதைக்குள் இருக்கும் பாத்திரங்கள்.. ஆல் த பெஸ்ட்..
:)). சாலா பாக ராஸாரண்டி!
டிவிடியிலயாவது கண்டிப்பா பார்த்துடுவேன் ஜெட்லி...நீங்க சொல்றீங்கன்னுதான் பார்க்கறேன். மத்தபடி அனுஷ்காவுக்காகல்லாம் இல்ல....
பின்(னூட்ட) குறிப்பு: நான் பொய்யேஏஏஏஏஏஏ பேசமாட்டேன்
Telugu movies always misuse heroines ,they don't give respect to females...so even they try to give good movies finally they choose a glamour route....this movie is example for that...after feeling this i avoid watching Telugu movies...
@soundar
அனுஷ்காவை நம்பியவர்கள் கைவிடப்படதில்லை....!
@ பேநா மூடி
ஹ்ம்...
@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
ஏன்...அண்ணே...நான் பச்சை தமிழன்...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ஏன்ப்பா வம்பு...
@கரிசல்காரன்
அது மட்டும் இல்ல பாஸ்..இது ஒரு நல்ல படம் கூட...
@Chitra
நடத்துங்க...
@Anbu
ஏன்ப்பா உனக்கு இந்த வேலை??
@Cable Sankar
ரைட்...
@வானம்பாடிகள்
சத்தியமா புரியல ஐயா...
@ரகு
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரகு..
@hasan
hasan u r rite... but vedam is different attempt...
try to watch... good movie...!!
//மொழியே தெரியாம பீல் பண்றியே ஜெட்லினு சொல்லிட்டு அதுக்கு ஒருக்கா நானே பீல் பண்ணிக்கிட்டேன்... என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன் யுவர் ஆனர்!!//
ஹி ஹி... எப்படி பா... முடியலை... சம கலாய்... :)
>>வேதம் ஒகா அந்தமைனா மதுரமைனா அநுபூதி.. என்டுகன்டே
னா ஜீவிதம்லோ மொட்ட மொடடி சாரிக தெலுகு சித்ரம் சுசனு....!!
வேதம் ஒக அந்தமைன மதுரமைன அநுபூதி... எந்துகன்ட்டே நா ஜீவிதம்லோ மொட்ட மொதட்டி ஸாரிகா தெலுகு சித்ரம் சூஸானு!
அருமையான விமர்சனம்...குமுதத்துக்கு கடிதம் போட்ருங்க...
I DhanusuRaasi, Strongly condemn the act of not posting "Theatre Noruks"...
Post a Comment