Friday, June 18, 2010

ராவணன் - சைடு பார்வை.

ராவணன்....


ரெண்டு நாள் முன்னாடி ஆன்லைன்ல உட்கார்ந்து எந்த தியேட்டர்
புக் பண்ணலாம்னு பார்த்தப்போ நமக்கு சாந்தி தாங்க மாட்டிச்சு.
அறுபது ரூபாய் டிக்கெட்டை 150 க்கும் எண்பது ரூபாய் டிக்கெட்டை
இருநூறுக்கும் விற்று கொண்டிருந்தார்கள்.

ராவணன் படத்தில் என்ன இருக்கு??

ராவணன் படம் ராமாயண கதை தான் அப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். எனக்கும் ராமாயணம் கதை தெரியும் ஆனா இது அந்த காண்டம் இது இந்த காண்டம்னு எல்லாம் தெரியாது....அதனால நான் இங்க ராமயணத்தை பத்தி பேச போறது இல்லை...!!

நாம இங்க சென்னையில் காஞ்சி கருவாட இருக்கோம் ஆனா படத்தில் லோகேசன் ஒண்ணும் ஒண்ணும் செம...கடைசியில் அந்த பாலம் காட்சி செம.அப்புறம் அந்த தூம்பி மூலம் அனைவரையும் காட்டுவது...எல்லாம் செம...சந்தோஷ் சிவனும் மணிகண்டனும் நம்மை வேறு உலகுக்கு அழைத்து போக முயற்சித்தாலும் ஆனா கதை ஓட்டம் போக விட மாட்டேன் என்கிறது என்பது தான் உண்மை.



விக்ரம், சூப்பர்ஆ பண்ணி இருக்காரு...ஆனா சில சமயம் இவரு
செய்யும் சேஷ்டைகள் வேறு மாதிரி எண்ண வைக்கிறது.
ப்ரிதிவ்ராஜ், ஓகே...கம்பீரமா இருக்கிறார். பிரபு, சில காட்சிகளில்
சிரிப்பு மூட்டுகிறார். கார்த்திக், இவர் தான் அனுமார் கேரக்டர்னு
சொல்லி மரத்துக்கு மரம் தாவி காட்டுகிறார்...வேற ஒண்ணும்
செய்யல்லை....ப்ரியாமணிக்கு பருத்திவீரன்க்கு பிறகு மீண்டும்
கேங் ரேப் அமைஞ்சுருக்கு... ரஞ்சிதாக்கு இருந்த வசன காட்சிகளை கட் செய்து விட்டார்கள் என்று புரிகிறது.முன்னா, சமாதானம்
செய்ய போகும் காட்சியில் மிளிர்கிறார்..



அப்புறம் ஒண்ணு நான் மணி ரத்னம் எதிர்ப்பாளன் அல்ல
என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன். ராவணன் படத்தில்
மணி மற்றும் விக்ரம் இன்னும் பல பேரின் உழைப்பு தெரிந்தாலும்
படம் பார்க்கும் போது எந்த ஒரு பீலிங்க்ஸும் எனக்கு வரவில்லை,
சில காட்சிகள் தவிர. அதாவது படத்தில் ஒரு உயிரோட்டம், சுவாரசியம், அடுத்தது என்ன நடக்கும் அப்படின்னு ஒரு எதிர்ப்பார்ப்பு
இல்லாமலே படம் போகிறது என்பது என் பீலிங்க்ஸ்.இங்க நான்
ஒண்ணும் சொல்லி கொள்ள விரும்பிகிறேன்...

"ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்"....

மணி ரத்னம் மேல எனக்கு ரொம்ப கோபம்ங்க....அட அது ஒண்ணும் இல்லைங்க. ஐஸ்வர்யா கண்ணு பத்தி நான் என்ன சொல்றது...
ஆனா கொஞ்சம் கெழடு தட்டிடுச்சுனு தான் சொல்லணும்.எனக்கு ஒரு கேள்வி மட்டும் தான் " எந்த இந்தியா குடும்ப பெண்ணாவது மூன்றாம் மனிதர்(ஜான் விஜய்) வீட்டுக்கு வரும் போது லோவில் டிரஸ் போட்டு மார்பை காட்டி கொண்டி இருப்பாளா??..." எதுக்கு இந்த மாதிரி ஒரு காட்சி வைக்கணும்.....(ஏன்ப்பா சீன் இல்லைனாலும் கேள்வி கேக்குற.. இருந்தாலும் கேள்வி கேக்குற...அப்படின்னு நினைக்கிறிங்களா...ரைட் ப்ரீயா விடுங்க...!!)



படத்தில் எனக்கு சரியா சில வசனங்கள் புரியலை...ஆனா சுஹாசினி
வசனம் ஒண்ணும் அவ்வளவோ சொல்றது ஒண்ணும் இல்லை.
முதல் பாதி ஒரு எதிர்ப்பார்ப்பில் வேகமா போன மாதிரி இருந்தது...
ரெண்டாவது பாதியும் அப்படியே இருந்தது...ஆனா படம் ஓடுன
டைம் ரெண்டு மணி நேரம் பத்து நிமிடம் என்றாலும் படம்
அலுப்பை கொடுக்கிறது என்பது தான் உண்மை.தமிழில் பார்த்துட்டு ஹிந்தியில் பார்க்கணும்னு நினைச்சேன்...இப்போ அந்த எண்ணத்தை கை விட்டுடேன்....

இது உலக படம் இல்ல மணி படம், உன்னை மாதிரி மசாலா படம் பாக்குறவனுக்கு என்ன தெரியும் அப்படினு சொல்றவங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு!!!

நாம தியேட்டரில் என்ன நடந்ததுனு பார்ப்போம்.....


தியேட்டர் நொறுக்ஸ்:


# சத்யம் தியேட்டரில் பொதுமக்களுக்கு முதல் மூணு நாளைக்கு டிக்கெட் ஓபன் பண்ணவே இல்லை..பல்க் புக்கிங் அப்படின்னு கம்பெனிக்கும் F.M. க்கும் கொடுத்து அவங்க ஒரு அட்டு கேள்வியே கேட்டு, பல எஸ்.எம்.எஸ் மூலம் சம்பாதித்து.... டிக்கெட் கொடுக்குறாங்க....இதுக்கும் பிளாக் டிக்கெட்க்கும் என்ன வித்தியாசம்??சத்யம் மட்டும் இல்ல பல தியேட்டர்கள் இதை தான் செய்கிறார்கள்.... யார் இதை கேட்கிறது??

# ரஞ்சிதா லைட்ஆ தலை காட்டினாலே தியேட்டரில் செம சவுண்ட்..
நல்ல வேளை வசனம் எதுவும் பேசவில்லை....

# படம் திருநெல்வேலி பாஷை என்பதால்..லே லே,,என்று வரும்..
ஒரு காட்சியில் இவனை எங்கே சுடுறதுலே என்று கேட்பார்...
இங்கே நம்ம ஆளு "அவனை #$#$#$ சுடுலே....." என்றவுடன்
தியேட்டரில் அதிர்வலை கிளம்பியது....

# இன்டெர்வேல் அப்போ..பல பேர்...படம் புரியல....என்று பேசி கொண்டிருந்தனர்.... ஒருவர் 150 ரூபாய் தண்டம் என்று
புலம்பியப்படி சென்றார்....

# படத்தில் கடைசி காட்சியில் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்...
அட நீங்க வேற...கடைசி கட்ட காட்சியில் ஐஸ்வர்யாவின் தரிசனத்துக்கு தான் அந்த கத்தல்... ரெண்டு பேர் கடைசி சீன் சூப்பர் என்று பேசிகொண்டே வந்தனர்....

# பார்க்கிங்கில் வண்டி எடுக்கும் போது ஒருவரிடம் படம்
எப்படி என்று கேட்டதற்கு...நானுறு ரூபாய் சார்...ஒரே புல்
வாங்கிட்டு வீட்ல தூங்கிருப்பேன்... என்றார்.

# சரி..நடுவயது நபரிடம் படம் எப்படி இருக்குனு கேட்போம் என்று
சும்மா கேட்டேன்....அவரு சொன்ன பதில்ல எனக்கு குபுக்னு சிரிப்பு
வந்திருச்சு..... "உசுரே போகுதே...."னு சொன்னார். சத்தியமா அந்த மனுஷன் இவ்ளோ பீல் பண்ணி இருப்பாருனு நான் நினைச்சு பார்க்கலாங்க...

இந்த விமர்சனம் மாதிரி பல பேரை சென்று அடைய பண்ண
வேண்டியதை பண்ணுங்க.....

ஜெட்லி....(சரவணா....)

58 comments:

KUTTI said...

படத்தை விட்டு தள்ளூங்கள். உங்க விமர்சனம் படு காமெடி.


மனோ

Pepe444 said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

AkashSankar said...

முதல் உண்மையான விமர்சனம்...எல்லாம் புகழ்ந்து தள்ளினாங்க...

Ram said...

படம் எப்படி இருக்கு ன்னு தெரியல ஜெட்லி, ஆனா உங்க விமர்சரனத்த சிரிச்சிட்டே (வி.பு.சி தான்) படித்து முடித்தேன், சூப்பர் சார்.,
டவுட்: ஒரு வேளை பிரியா மணி க்கு இந்த படத்துலயும் அவரது கிடைக்குமோ?

CS. Mohan Kumar said...

என்ன ஜெட்லி இன்னிக்கு பலரும் படம் ஆஹோ ஓஹோன்னு எழுதிட்டு இருக்காங்க... நீங்க இப்படி சொல்றீங்க..

VISA said...

//பருத்திவீரன்க்கு பிறகு மீண்டும்
கேங் ரேப் அமைஞ்சுருக்கு... //

அய்...ஜாலி

Prathap Kumar S. said...

என்னப்பா இப்படி சொல்லிட்ட....

VISA said...

//என்ன ஜெட்லி இன்னிக்கு பலரும் படம் ஆஹோ ஓஹோன்னு எழுதிட்டு இருக்காங்க... நீங்க இப்படி சொல்றீங்க.. //

என் கணிப்புப்படி மணிரத்னம் படங்களை ஆகா ஓகோன்னு சொல்றவன் 90% பேரு இப்படித் தான்.

1. அவனுக்கு படம் சத்தியமா புரியல.
2. அறிவாளிகள் இன்டலெக்சுவல்ஸ் என்று தன்னை காட்டிக்கொள்ள முனைகிறான்.
3. மணிரத்னம் படம் நல்லா இல்லேன்னு விமர்சனம் பண்ணா நம்மள ஒரு மாதிரி பாப்பானோன்னு ஒரு பயத்துலயே நல்ல இருக்கு நல்ல இருக்குன்னு சொல்லிடுறானுவ.

எனக்கு தெரிஞ்சு மணியை இந்த முறை சாரு கிழித்து தொங்கவிடுவார் என்று தோன்றுகிறது. அவர் ஒருத்தர்தான் இதுக்கு கரெக்ட். மத்தவன் எல்லாம் எந்த பக்கம் கூட்டம் கூடுதோ அங்க போய் ஆகா ஓகோன்னு கூவுவானுவ.

இதுக்கு ஜெட்லியின் வெளிப்படையான விமர்சனம் தேவலை.

Unknown said...

manirathainam padathai rasika theriyatavargal neingal yanbathu ungal vimarsanathil terigirathu.. neingalal sura padathirku poga vendi tane

VISA said...

//manirathainam padathai rasika theriyatavargal neingal yanbathu ungal vimarsanathil terigirathu.. neingalal sura padathirku poga vendi tane//


மணிரத்னத்தை ரசித்த மகராசா. மணிரத்னத்தின் பிலிம் மேக்கிங் ஸ்டைல் பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா?

மற்ற இயக்குனர்களின் படத்திற்கும் மணியின் படத்திற்கும் என்ன வேறுபாடு. குறைந்த பட்சம் சுறாவுக்கும் ராவணனின் மேக்கிங்கிற்கும் என்ன வேறுபாடு என்றாவது உயித்து உணர்ந்து எழுதுவீரா?

geethappriyan said...

அருமையா சொல்லியிருக்கீங்க
எப்படியும் பாக்க போறதில்ல,இதுக்கு அப்புறம்!!!:(

அந்த FMரேடியோ செய்யும் அட்டகாசம் அநியாயம்,பல பேர் இந்த மொக்க கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டே கார் ஓட்டுவதாய் படிச்சேன்.

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

என்னலே இப்படி சொல்லிபுட்டே.. கஷ்டமா இருக்குலே... இது தெரியாம நான் ஆன்லைன் -லில் புக் பன்னேட்டேலே .........

Romeoboy said...

ஹ்ம்ம் விமர்சம் ஓகே ..

கருந்தேள் கண்ணாயிரம் said...

பாஸு... இத ஹிந்திலயும் இப்புடியே தான் சொல்றாங்க..

பார்த்துட்டு, இதப்பத்தி எளுதுறேன்.. இந்தப் பதிவு அருமை..

ஓவரால் ரெஸ்பான்ஸ், படம் மொக்கைன்னு தான் வருது...

வவ்வால் said...

Jetli,
peyarai vaithu mathipidamal enna feeling varutho athukku vimarsanam seytha unga nermai pudichirukku.

Balachandar,bharathiraja, bhagyaraj ponravarkalin film making style makkaluku pazhakam aanathum pulithu ponathu, athe nilai than ippo manikum. Retirement stage ithu!

Menaga Sathia said...

என்ன ஜெட்லி படம் நல்லாயில்லையா???

hasan said...

ரஞ்சிதா லைட்ஆ தலை காட்டினாலே தியேட்டரில் செம சவுண்ட்..

same happen here...vikramku kuda sound kami than and

"உசுரே போகுதே" song-ku kum here செம சவுண்ட்..



{ஒரு காட்சியில் இவனை எங்கே சுடுறதுலே என்று கேட்பார்...
இங்கே நம்ம ஆளு "அவனை #$#$#$ சுடுலே} ha ha ha ha ha very funny...

i expected more but i hope it was average..

KATHIR = RAY said...

Padam Puriyala apdina

Mani Padam Hit Super hit thamla

Rendu Thadava Paakonom.

Idhilayum Hindhila oruvaaati
Tamila Oruvaati

Hats of Mani Ratnam, ARR

Chitra said...

இது உலக படம் இல்ல மணி படம், உன்னை மாதிரி மசாலா படம் பாக்குறவனுக்கு என்ன தெரியும் அப்படினு சொல்றவங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு!!!


......ha,ha,ha,ha,ha... ரொம்பவே எதிர்பார்த்து படத்துக்கு போயிட்டீங்க போல.

சிநேகிதன் அக்பர் said...

உங்க மேல நம்பிக்கை இருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் படம் பார்த்துட்டு உன்னை கவனிச்சிக்கிறேன்

ILLUMINATI said...

நண்பா!இதை நான் முன்னமே எதிர்பார்த்தேன்.படம் தமிழ்,ஹிந்தி இரண்டிலும் மொக்கை தான்னு கேள்விப்பட்டேன்.ஆனா,தமிழுக்கு ஹிந்தி பரவாயில்லையாம்.

Unknown said...

///என்ன ஜெட்லி இன்னிக்கு பலரும் படம் ஆஹோ ஓஹோன்னு எழுதிட்டு இருக்காங்க... நீங்க இப்படி சொல்றீங்க.///////

பிக்காசோ, வான் கோ, ரெம்பிராண்ட் போன்ற ஓவியர்கள் எது வரைந்தாலும் சிலர் பாராட்டுவானுக. அது நல்லா இல்லைன்னு சொல்லிட்டால், எங்கே சமுதாயம் நமக்கு ரசனையே இல்லைன்னு சொல்லிடுமோ என்று பயந்து கொண்டு. அது மாதிரி தான் இந்த மேட்டுக் குடி மணி ரத்னம் ரசிகனுக படம் நல்லா இல்லைங்கிறதை ஒத்துக்க மாட்டேன்னுகிறானுக

Paleo God said...

அப்பாடி.

என்னை கூட்டிட்டுப் போகாத சாபம் சும்மா விடுமா??!! :))

ஜெட்லி... said...

@MANO

@ Siva Ranjan

@|கீதப்ப்ரியன்|Geethappriyan

@~~Romeo~~

@கருந்தேள் கண்ணாயிரம்

@hasan




நன்றி நண்பர்களே....

ஜெட்லி... said...

@ ராசராசசோழன்

@ Ram

@ மோகன் குமார்

@நாஞ்சில் பிரதாப்

படத்தில் சுவாரசியம் ரொம்ப கம்மிணே.....
நீங்க பார்த்துட்டு சொல்லுங்க...

ஜெட்லி... said...

@ VISA

//அய்...ஜாலி
//

அந்த சீனை காட்ட மாட்டாங்க தலைவா...


ப்ரீயா விடுங்க...சுறாவையும் இதையும் சேர்த்து
வைத்து பேசுபவனிடம்
என்ன சொல்வது....

ஜெட்லி... said...

@உங்கள் நண்பன் பாலசந்தர்

ஏலே படம் பார்க்க கூடாத படம்லாம் இல்லேலே....
போய் பார்த்துட்டு வந்து சொல்லும்...

ஜெட்லி... said...

@வவ்வால்

அதான் எனக்கும் தெரியல....


@Mrs.Menagasathia

எனக்கு புடிக்கல....

ஜெட்லி... said...

@அக்பர்

நம்பிக்கைக்கு நன்றி அக்பர்...

ஜெட்லி... said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


//யோவ் படம் பார்த்துட்டு உன்னை கவனிச்சிக்கிறேன்

//

படம் பார்த்துட்டு... நல்ல ஹோட்டல் கூட்டிட்டு போய்
கவனிப்பா......chola , park , taj எதுனாலும் ஓகே....

ஜெட்லி... said...

@Chitra

மணி படம்னா சும்மாவா....

ஜெட்லி... said...

@KATHIR = RAY


?????

ஜெட்லி... said...

@ILLUMINATI

@subramanian


ஹ்ம்ம்....

ஜெட்லி... said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║


நீங்கதானா அது....
இப்போ நான் உங்களுக்கு டிக்கெட் வாங்கி தரேன்....

Ashok D said...

mani தேசியமயக்கப்பட்ட பின்னர் வரும் பின்விளைவுகள் இது.. இந்தியை, மலையாளத்தை, தமிழை adjust பண்ணனும்.

படம் சொதப்பல் என்று நண்பர்கள் கூறிவிட்டனர்... இருந்தாலும் நம்ப மணி.. சந்தோஷ்சிவனுக்காக.. ஒரு தடவை தியெட்டர்ல்ல பாக்கலாம்ன்னு இருக்கேன்,,, ஜெட்லி

Rajarajan said...

valakkaamana ragalaayana vimarsanam thala....

read mine too

http://therajarajanultimatum.blogspot.com/2010/06/raavanan-manirathanam-not-at-his-best.html

same feelings!!!

வெண்ணிற இரவுகள்....! said...

good review

THE UFO said...

வழக்கம்போல் ராவணனிலும் மணிரத்னம் சொதப்பிட்டார்...

ராமாயணத்தின் பெரிய சருக்கலே ராமன் சீதையின் மேலிட்ட அக்நிப்பரிட்சைதான். இதற்கு இன்றும் நடந்து கொண்டிருக்கும் பட்டிமன்ற விவாதங்களே சாட்சி.

தன் கற்பின் மேல் சந்தேகப்பட்ட ப்ரிதிவியை விட, விரல் நகம் கூட படாமல் தன் கற்பைகாத்த ராவணனே மேல் என்று பிருத்விய விட்டுவிட்டு ஒரேயடியாய் விக்ரமுடன் செட்டிலாகி இருந்து இருக்கணும் ஐஸ்... ...இருந்திருந்தால், சீதாவை ஒரு நவீன புரட்சி பெண்ணுரிமை பாத்திரமாய் காட்டியிருக்க முடிந்த நல்ல வாய்ப்பை கோட்டைவிட்டுவிட்டு, மீண்டும் ஆணாதிக்க குட்டையில் விழுந்து விட்டார் மணிரத்னம்.

இந்த முடிவை குடுக்க தைரியம் இல்லை என்றாலோ, அல்லது இந்த முடிவு தவறு என்று நம்பினாலோ அல்லது இதை 'குடும்பப்பெண்கள்', 'சராசரி ஆணாதிக்க கணவன்மார்கள்' ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பயந்தால், இராவணனை கதாநாயகனாக்கி இருந்திருக்கக்கூடாது. இராமனே கதாநாயனாக இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டிருக்கலாம். அந்த அளவுக்கெல்லாம் உண்மையை உடைத்து சொல்ல மணிரத்னம் தைரியமானவர் கிடையாது என்பதையும், வரலாற்று பிரச்சினைகளில் எப்போதுமே நுனிப்புல் மேய்பவர் என்பதையும் ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு என்று வரிசையாய் பார்த்து வருகிறோமே...

Anonymous said...

//என் கணிப்புப்படி மணிரத்னம் படங்களை ஆகா ஓகோன்னு சொல்றவன் 90% பேரு இப்படித் தான்.

1. அவனுக்கு படம் சத்தியமா புரியல.
2. அறிவாளிகள் இன்டலெக்சுவல்ஸ் என்று தன்னை காட்டிக்கொள்ள முனைகிறான்.
3. மணிரத்னம் படம் நல்லா இல்லேன்னு விமர்சனம் பண்ணா நம்மள ஒரு மாதிரி பாப்பானோன்னு ஒரு பயத்துலயே நல்ல இருக்கு நல்ல இருக்குன்னு சொல்லிடுறானுவ.//

WELL SAID.

I only liked Anjali and Mouna Raagam.

//அந்த அளவுக்கெல்லாம் உண்மையை உடைத்து சொல்ல மணிரத்னம் தைரியமானவர் கிடையாது என்பதையும், வரலாற்று பிரச்சினைகளில் எப்போதுமே நுனிப்புல் மேய்பவர் என்பதையும் ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு என்று வரிசையாய் பார்த்து வருகிறோமே//
இந்த படங்களை நான் ட்ராக் பண்ணி ட்ராக் பண்ணித் தான் பார்த்தேன். அவ்ளோ போஓஓஓஓஓஓஒர். ஸப்பா.

Bala De BOSS said...
This comment has been removed by the author.
Bala De BOSS said...
This comment has been removed by the author.
Bala De BOSS said...

நான் மணியின் தீவிர ரசிகன். என்னை ஏமாற்றி விட்டார்.

ரோஜா படத்துக்கும், ராவணன் படத்துக்கும் எனக்கு தெரிந்த 3 வித்தியாசங்கள்.
1 ) ரோஜாவில் கதாநாயகனை (அரவிந்த்சாமி) கடத்துவார்கள், ராவணனில் கதாநாயகி.
2 ) ரோஜாவில் தீவிரவாதிகள், ராவணனில் கிராமத்து மக்கள்.
3 ) காஷ்மீர் - சாலக்குடி., ஒகேனக்கல்

கொஞ்சம் வீரப்பனையும் ஞாபகப் படுத்துகிறார்.

Bala De BOSS said...

நடு நிலையான விமர்சனம் நண்பா. வாழ்த்துக்கள்...

சித்து said...

டம் டம் டம் ராவணன் ஊ ஊ , மாப்ள சாச்சுபுட்டாண்ட. ஒரு வேலை இது விக்ரமோட ராசியா இருக்குமோ??

பின்னோக்கி said...

மணிரத்தினம் டையர்டா இருக்கார். படம் பார்க்கும் நமக்கும் அந்த டயர்ட். சுகாசினி டயலாக்ஸ் ???. சுஜாதாவா இருந்தா நல்லாயிருந்திருக்கும் :(. யாருக்கும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தாத திராபையான படம். எதோ உங்க விமர்சனம் ஜாலியா இருக்கு.

Unknown said...

super padam, super vimarsanam

pavbalane said...

# இன்டெர்வேல் அப்போ..பல பேர்...படம் புரியல....என்று பேசி கொண்டிருந்தனர்.... ஒருவர் 150 ரூபாய் தண்டம் என்று
புலம்பியப்படி சென்றார்....


# பார்க்கிங்கில் வண்டி எடுக்கும் போது ஒருவரிடம் படம்
எப்படி என்று கேட்டதற்கு...நானுறு ரூபாய் சார்...ஒரே புல்
வாங்கிட்டு வீட்ல தூங்கிருப்பேன்... என்றார்.

# சரி..நடுவயது நபரிடம் படம் எப்படி இருக்குனு கேட்போம் என்று
சும்மா கேட்டேன்....அவரு சொன்ன பதில்ல எனக்கு குபுக்னு சிரிப்பு
வந்திருச்சு..... "உசுரே போகுதே...."னு சொன்னார். சத்தியமா அந்த மனுஷன் இவ்ளோ பீல் பண்ணி இருப்பாருனு நான் நினைச்சு பார்க்கலாங்க...


விமர்சனம் படு....... SUPER

Suriya said...

படம் பத்தி நெறைய கேட்டாச்சி நண்பா! பாடல்களுக்கு Response எப்படி இருக்கு. ஹிந்தி ல இத விட மோசம்னு கேள்வி பட்டேன். But Makingகாக ஒரு முறை கண்டிப்பா படம் பாக்கணும். சரியா ?

ஜெட்லி... said...

@Suriya

சரிதான்....

Prasanna Ramachandran - PXR said...

still people believe in manirathnam....too bad

http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/quG_1aefB24/blog-post_4176.html

Unknown said...

யோவ் படம் பார்க்க போனா ஸ்க்ரீன் பாருய்யா...
என்னையா நீ சைடு பார்வை எல்லாம் பாத்துட்டு வந்த எப்படி...

Unknown said...

**********அந்த அளவுக்கெல்லாம் உண்மையை உடைத்து சொல்ல மணிரத்னம் தைரியமானவர் கிடையாது என்பதையும், வரலாற்று பிரச்சினைகளில் எப்போதுமே நுனிப்புல் மேய்பவர் என்பதையும் ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு என்று வரிசையாய் பார்த்து வருகிறோமே...**********

நுனிப்புல் மேய்வதற்கு கூட பலருக்கு தைரியம் இல்லை.... உண்மையை சொல்வதற்கு முற்படும் முயற்சிகள் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய விஷயம்....
உண்மைகளை உடைத்து சொல்லும் சுதந்திரம் படைத்த சமுதாயத்தில் நாம் இல்லை என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.... உண்மைகளை மேலோட்டமாக சொல்வதற்கு கூட தைரியம் வேண்டும்...
மசாலா படங்களுடன் ஒப்பிடும் போது நிச்சயமாக இத்தகைய முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை....

Unknown said...

நான் மணியின் தீவிர ஆதரவாளனும் இல்ல, மசாலா படங்களின் எதிராளியும் இல்ல..

G3 said...

Valaicharam moolama came to ur blog .. Thatre norkuks super :)

nallavela.. naanga woodlandsla verum 60 rs.la paathuttom :)

enga theatrela aiswarya raiya thannila thallivittutu konja nerathula innoruthan avala kaapatha thannila kuthichappa.. pinnadi rowla irundha oruthar enakku indha oththaa role kudunthirundhaa kalakki iruppaenaennu solla.. kooda vandha nanbar dei unakku neechal theriyumngara thimirla pesaadhadannu feel pannitirundhaaru :)

Sathya said...

SUPER REVIEW

riddlemaniac said...

padam enaku rombavum pidichirundudu time irunda ennoda review va padinga

http://riddlemaniac.blogspot.com/

அன்புடன் நான் said...

அப்படியா இருக்கு ..... இராவணன்?.
பகிர்வுக்கு நன்றிங்க.