Friday, June 11, 2010

தி கராத்தே கிட் (தி குங்க்பூ கிட்)!!

ஜாக்கியின் புதிய முகம்!!





"ஒடுங்க ஒடுங்க அது நம்மள தாக்க வருது....."

" தாக்குங்க...தாக்குங்க...அவங்களை விடாதிங்க ..."

இது மாதிரி வசனம் இல்லாமல் வந்திருக்கும் படம் தான்
தி கராத்தே கிட். பெயர் போடும் போதே ஜேடன் ஸ்மித்
பெயர் தான் முதலில் போடுவார்கள் பின் தான் ஜாக்கி சான்
பெயர் வரும். ஜாக்கி கிட்ட தட்ட இதில் ஒரு குணசித்திர
ரோல் மாதிரி தான் வருகிறார். ஒரே ஒரே சண்டை தான்
ஜாக்கிக்கு அதுவும் சின்ன பசங்களுடன்... நன்றாக கொஞ்சம்
வித்தியாசமாக தான் இருந்தது....!!



ஜாக்கிசான் மாஸ்ஸை இன்று பைலட் தியேட்டரில் கண்டேன்.
நல்ல கூட்டம், படம் ஹவுஸ்புல். ஜாக்கி அவர்களின் அறிமுக
காட்சிக்கு விசில் மேல் விசில் பறந்து காதை கிழித்தது.....
நாம இதுவரைக்கும் ஜாக்கியை ஒரு சிஷ்யனாக பார்த்து இருக்கிறோம் fearless hyena, drunken master 1 and 2, young master இப்படி பல படம் சொல்லலாம்.... ஆனா இப்போ அவரு குருவா என்ன பண்ண போறார் என்பதில் ஜாக்கி ரசிகர்களுக்கு ஏக எதிர்ப்பார்ப்பு என்றே சொல்லவேண்டும்.


"நினைத்துபார்க்காத சவால்!

எதிர்ப்பார்க்காத குரு!"

இந்த இருவரியே படத்தின் கதையை சொல்லி விடும். ஆமாம்
ஜேடன் மற்றும் அவரது அம்மாவும் சீனா வருகிறார்கள். அங்கே
ஜேடன் உடன் சீனா பையன் ஒருவன் மோதுகிறான். ஜாக்கி
ஒரு தடவை ஜேடனை அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார்.
பின் ஒரு சாவல் அப்புறம் குருவாகிறார் ஜாக்கி...


சின்ன பசங்கள் சண்டை தானே என்று சாதரணமாக சொல்லிட
முடியாது. ஜேடன் முதலில் செம அடி வாங்குவார், பார்க்கவே
பாவமாக இருக்கும். அதே போல் அடிகொடுக்கும் சீனா பையனும்
செம பாடி லாங்வேஜ். இவங்க ரெண்டு பேர் சண்டைக்கும் காரணம்
ஒரு பெண். படத்தில் போர் அடிக்கும் காட்சினா அது ஜேடனும்
அந்த பொண்ணும் வர்ற காட்சிகள் தான். புள்ளைங்க பன்னண்டு
வயசிலயே லிப் கிஸ் அடிக்குதுங்க....!!


ஒரு காட்சியில்....
ஜாக்கி அவர்கள் குங்க்பூவை சண்டையை நிறுத்த தான் பயன்ப்படுத்த வேண்டும் என்று ஜேடனிடம் சொல்வார்.


உடனே ஜேடன் "அப்போ சண்டையே போட கூடாதுனா..?"


"பேச்சை குறைக்கணும்" என்று ஜாக்கி சொல்லும் சீனுக்கு செம
ரெஸ்பான்ஸ்....

அதே போல்...

"வாழ்க்கை சில சமயம் நம்மளை அடைச்சு வைச்சுடும்....
அதிலுருந்து வெளியில் வர்றதும் வராததும் நம்ம கைல தான்
இருக்கு..." என்று ஜாக்கி ஊருகி பேசும் காட்சி செம....

தமிழ் டப்பிங் பேசுகிறவர்கள் மற்றும் வசனம் எழுதுபவர்களை
கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர்களது பெயரை திரையில்
போட்டு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது என் கருத்து.
இந்த படத்தில் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை
பட்டும் படாமலும் சொல்லி இருக்காங்க....அதே போல் ஜாக்கி
ஜேடனுக்கு அவனது ஜாக்கெட் மூலமாகவே குங்க்பூ கற்று தரும்
காட்சி சூப்பர்.

படம் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஒடிச்சு...டைம் பாஸ் ஆனதே தெரியவில்லை. கடைசி குங்க்பூ டோர்னமென்ட் சீன் பார்க்கும் போது எனக்கு ஏனோ வெண்ணிலா கபடி குழு நினைவு வந்து போனது..... ஜாக்கிக்கு வித்தியாசமான ரோல் தான். என்ன அவர் அந்த எதிர் குங்க்பூ மாஸ்டர் கிட்ட ஒரு சண்டை போட்டிருக்கலாம் என்பது என் போன்ற ஜாக்கி ரசிகர்களின்
எதிர்ப்பார்ப்பு. படத்தை குடும்பத்துடன் ரசிக்கலாம்...

தியேட்டர் நொறுக்ஸ்:

# இன்டெர்வல்க்கு முன் ஜாக்கி ஜேடனுக்கு குங்க்பூ சொல்லிதர
அவன் போட்டு வரும் ஜாக்கெட்டை கழட்டி, கிழே போட்டு, மாட்ட
சொல்வார் இதை பல முறை செய்ய சொல்வார்...

இன்டெர்வெலில் நம்ம ஆளுங்க அவுங்க நண்பர்களை கலாய்க்க
"மச்சான் ஜாக்கெட்டை கழட்டு..."
"டேய் ஜாக்கெட்டை கழட்டு..." என்று ரவுசு விட ஆரம்பித்தனர்
.

# ஜாக்கி ஒரு உருக்கமான காட்சியில் தன் மனைவி பிள்ளைகள்
இறந்து விட்டார்கள் என்றும் அது இதே ஜூன் 8 இல் என்பார்....

கிழே இருந்து நம்மாளு " இன்னைக்கு ஜூன் 11 தல..." என்றவுடன்..

பக்கத்துக்கு இருக்கும் நண்பர் "அகராதி புடிச்ச பயபுள்ள...அவரே
பீல் பண்ணிட்டு இருக்காரு...இவன் வேற..."

# படம் முடித்து மயிலாப்பூர் தாண்டி மந்தைவெளி முழுவதும் செம
டிராபிக் சரி அப்படியே சாய்பாபா கோவில் வழியா அடையார் போய்டுலாம்னு போனேன்..... மேரிஸ் ரோட்டில் இருக்கும் ஒன்வேயில் தெரியாமல் போய்ட்டேன்..காரணம் அது ஒன் வே மாதிரியே இருக்காது...தீடிரென்று டீக்கடையில் இருந்த நபர் ரைட்
எடு ரைட் எடு என்றார்....பார்த்தால் கடைசியில் போலீஸ் வண்டி...
"அந்த நபருக்கு என் நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.."!


# என்ன கொடுமை சார் இது...!! போஸ்டர் அடிச்சு ஓட்டு
கேட்குறாங்களே....நாமும் ட்ரை பண்ணுவோமா....











இந்த விமர்சனத்துக்கு?? உங்கள் ஆதரவை அள்ளி தருமாறு
கேட்டு கொள்கிறேன்.....

நன்றி

ஜெட்லி...(சரவணா...)


38 comments:

Porkodi (பொற்கொடி) said...

கராத்தேக்கும் எனக்கும் ரொம்ப தூரம். இருந்தாலும் வடை குடுங்க.

Porkodi (பொற்கொடி) said...

//அவர்களது பெயரை திரையில்
போட்டு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது என் கருத்து.//

என்னுடையதும் கூட :)

என்னது பாட்டு போட்டிக்கா போஸ்டர் ஒட்டி வோட்டு கேக்கறாங்க??? கஷ்ட காலம். :( இந்த 1 அல்லது 1.5 வருஷம் இந்த பசங்க படிப்பெல்லாம் அதோகதி தான் போலருக்கு..

Unknown said...

Nenga adutha super singerla kalandhukonga.. Nanga poster otturom..

சிநேகிதன் அக்பர் said...

விமர்சனம் அருமை.

அகல்விளக்கு said...

குங்பூவா....

டைட்டில்ல கராத்தேன்றாங்க...

குழப்பமா இருக்கு தல...

ப்ரியமுடன் வசந்த் said...

தியேட்டர்ப் நொறுக்ஸ் வழக்கம்போல கலகல...

G.D.Aswin said...

thanks for your review ana..mass marana mass..

Yeah jackie chan role is kind of supporting role..

but jackie chan ilama indha padam famous aga chance ah ila,it wunt even cross american borders

Ashok D said...

நானும் ஜாக்கிச்சான் ரசிகன் தாம்ப்பா... அதான் ஒரு 50 வயசுல அண்ணன் சுறுசுறுப்பா இருக்கறது ;)

விமர்சனம்.. அங்கிகாரம்.. fearless hyena.. ட்ராபிக்லமாம்ஸ்கிட்ட தப்பிச்சது எல்லாம் சூப்பர்...

நல்ல காலம் பொறந்துடுச்சுபோல :)

சரவணகுமரன் said...

சூப்பர் ஜெட்லீ

செ.சரவணக்குமார் said...

//தமிழ் டப்பிங் பேசுகிறவர்கள் மற்றும் வசனம் எழுதுபவர்களை
கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர்களது பெயரை திரையில்
போட்டு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது என் கருத்து.//

அருமையான கருத்து நண்பரே..

வழிமொழிகிறேன்.

Jackiesekar said...

தம்பி நீ பைலட்டா? நானும் அங்கதான் வந்து இருக்கனும் ... மோட்சம் போயிட்டேன்...

அதே போல பதிவு புல்லா என் பேரையே எழுதி என்னை புல்லரிக்க வ்ச்சிட்டியேபா...

ஜெட்லி... said...

@Porkodi (பொற்கொடி)

நீங்க சொல்றது சரிதான்....


@பேநா மூடி

நான் சொன்னது ப்ளாக் விளம்பரத்துக்கு போஸ்டர் ஓட்டலாமானு...


@அக்பர்

நன்றி

ஜெட்லி... said...

@ அகல்விளக்கு


டைட்டில் அது கராத்தே தான்...
ஆனா ஜாக்கி குங்க்பூ தான் கத்து கொடுப்பார்...


@ப்ரியமுடன்...வசந்த்

நன்றி வஸந்த்

ஜெட்லி... said...

@ G.D.Aswin

ரைட்..


@D.R.Ashok

//நல்ல காலம் பொறந்துடுச்சுபோல //

யாருக்கு...??

ஜெட்லி... said...

@ சரவணகுமரன்

@ செ.சரவணக்குமார்

நன்றி

ஜெட்லி... said...

@ சரவணகுமரன்

@ செ.சரவணக்குமார்

நன்றி

ஜெட்லி... said...

@ ஜாக்கி சேகர்


எல்லாம் உங்க மேல உள்ள அன்பு தான் அண்ணே...

Raghu said...

12 வ‌ய‌சுலேவா? ஹும்ம்ம்ம்...ப‌ல் இருக்க‌ற‌வ‌ன் ப‌க்கோடா சாப்புட‌றான்

Chitra said...

உங்கள் விமர்சனம் செம..... அடுத்த வாரம் இந்த படம் இங்கு பார்க்க இருக்கிறோம்....
Tamil version miss பண்ணுவேன்......


......
# என்ன கொடுமை சார் இது...!! போஸ்டர் அடிச்சு ஓட்டு
கேட்குறாங்களே....நாமும் ட்ரை பண்ணுவோமா....


......
இதுக்கும் பிளாஸ்டிக் குடம், பிரியாணி பொட்டலம் எல்லாம் தருவாங்களா?

தமிழ் உதயம் said...

தி கராத்தே கிட

அப்படின்னு ஒரு படம் வந்திருக்கா. தகவலுக்கு நன்றி.

Raghu said...

'ஜாக்கி'யின்
ர‌சிக‌ர்
'ஜெட்லி'

மூணு வ‌ரியில‌ எண்ட‌ர் த‌ட்டியிருக்கேனே இத‌ க‌விதைன்னு சொல்லிக்க‌லாமா ஜெட்லி?...;))

பாஸிட்டிவ்வான‌ விம‌ர்ச‌ன‌ம்...சூப்ப‌ரா எழுதியிருக்கீங்க‌

puduvaisiva said...

Thanks Jetலி

Unknown said...

இன்று நானும் கேபிளும் ஓர் இரவு படம் பார்க்க போனோம் அந்தப் படத்தின் குழவினர் உங்களை விசாரித்தனர்..
அப்புறம் கராத்தே கிட் நாளைக்கு போகணும்..
நல்ல விமர்சனம்..பைலட் தியட்டரில் சீன் கட் பண்ணுவாங்களே தல, அங்கயா போனீங்க..

AkashSankar said...

நல்ல இருந்தது விமர்சனம்... நானும் ஜாக்கி ரசிகன் தாங்க...

வவ்வால் said...

Jetlee,
short and sweeta mudichtinga. Erkanave karate kid enra peyaril padam vanthiruku,hollywoodlayum title recycle undu pola.starmovies la making of nu potta prog la old karate kid director kooda pesinar. But padathukaga chinna paiyan 4 month traininglam eduthanam namma kollywood hero's kavaningappa.

Willsmith son vachu padam edutha pola vijay seyvaronu thonuthu.

ஜெட்லி... said...

@ ர‌கு

ஹ்ம்... என்டர் கவிதையா?? ஆளை விடுங்க ரகு..
நன்றி..


@Chitra

வரும் காலங்களில் கொடுத்தாலும் கொடுப்பார்கள்....

ஜெட்லி... said...

@தமிழ் உதயம்
@♠புதுவை சிவா♠

நன்றி.

ஜெட்லி... said...

@கே.ஆர்.பி.செந்தில்

முதல் காட்சினு எதுவும் கட் பண்ணல அண்ணே....
படம் ரெண்டு ஹவர்க்கு மேலையே ஒடிச்சு..
ஆனா இன்னைக்கு கட் பண்ணிடுவாங்க....!!

ஓர்இரவு படம் எப்படி இருந்தது....??
இன்னைக்கு நைட் ஷோ போறதுக்கு வாய்ப்பு
அதிகம்.....

ஜெட்லி... said...

@ ராசராசசோழன்

நன்றி சோழரே...


@ வவ்வால்


நீங்க imdb யில் இந்த படத்தின் இன்னொரு டைட்டில் பார்த்தால்
குங்க்பூ கிட் என்று தான் இருக்கும்.....பழைய படத்தின் கருவை
மட்டும் எடுத்துள்ளனர்.....

விஜய் பையன் நடிக்கிறது பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல
தலைவா....

அத்திரி said...

நல்ல விமர்சனம்..........

//புள்ளைங்க பன்னண்டு
வயசிலயே லிப் கிஸ் அடிக்குதுங்க....!!
//

அப்ப என்ன மாதிரி சின்ன பசங்க இந்த படத்த பாக்க் கூடாதில்ல ஜெட்லி அண்ணே

creativemani said...

Good.. படம் பார்த்துடறேன்..

//மேரிஸ் ரோட்டில் இருக்கும் ஒன்வேயில் தெரியாமல் போய்ட்டேன்..காரணம் அது ஒன் வே மாதிரியே இருக்காது..//

இத்தினி வருஷமா மைலாப்பூரில் இருந்த எங்களுக்கே இன்னும் அது ஒன்வே'யா'ன்ற டவுட் இருக்கு.. ;)
ஒரு போர்டும் இருக்காது.. திடீர்னு எப்பவாச்சும் போலீஸ் நிக்கும் போது தான் தெரியும்..

//தீடிரென்று டீக்கடையில் இருந்த நபர் ரைட் எடு ரைட் எடு என்றார்....பார்த்தால் கடைசியில் போலீஸ் வண்டி...//

அந்த டீக்கடை இது மாதிரி நெறைய பேர காப்பாத்தியிருக்குங்க.... :)

Saravanan MASS said...

/// # என்ன கொடுமை சார் இது...!! போஸ்டர் அடிச்சு ஓட்டு
கேட்குறாங்களே....நாமும் ட்ரை பண்ணுவோமா....
இதுக்கும் பிளாஸ்டிக் குடம், பிரியாணி பொட்டலம் எல்லாம் தருவாங்களா? ///

அதுல ஜெயிச்சா 25 லட்சம்னு சொல்றாங்க எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா அந்த பசங்க பாடுறதுல்ல இருக்கும் திறமைக்காக தருகிறார்களா அல்லது என்னை போல இசை அறிவு இல்லாதவர்கள் த‌னக்கு பிடித்த பசங்களுக்கு அதிக எண்ணிகைக்காக ஒட்டு போடுவதாலா

பரிசு திறமைக்காகவா இல்ல ஓட்டுக்காகவா

தெரிந்தவங்க சொல்லுங்க....

Cable சங்கர் said...

ithee கதையுடன் வேறு ஒரு நடிகர் நடித்து ஒரு படம் வந்திருக்கிறது. என்ன அதில் வேறு சைனீஸ் தாத்தா..இதில் ஜாக்கி அவ்வளவுதான்.

இதயும் பாருங்க said...

http://jyovramsundar.blogspot.com/2010/06/blog-post_12.html

உண்மைத்தமிழன் said...

தம்பி..

நீயும் எங்களை மாதிரியே வெட்டி ஆபீஸர்தானா..?

நல்லாயிரு..!

DREAMER said...

நண்பா,
நல்ல விமர்சனம்! ஜாக்கியிடமிருந்து இதுபோலவும் ஒரு படத்தை பெறுவதில் மகிழ்ச்சி...

//தமிழ் டப்பிங் பேசுகிறவர்கள் மற்றும் வசனம் எழுதுபவர்களை
கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர்களது பெயரை திரையில்
போட்டு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது என் கருத்து//

உண்மையிலேயே மிகவும் அருமையான ஐடியாங்க..!

-
DREAMER

பின்னோக்கி said...

படம் முடியும் முன்பே, விமர்சனம் எழுதும் வேகம் ஜெட்லிக்கே.. வாழ்க.. வளர்க..

Rajarajan said...

thala apdiye ennoda review vayum konjam paarunga....

http://therajarajanultimatum.blogspot.com/2010/06/karate-kid-review.html