Friday, March 20, 2009

அருந்ததீ பட விமர்சனம்





அருந்ததீ தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த படம். தெலுங்கில் செம ஹிட் அதையே சூட்டோட சுட தமிழுக்கு நம்ம ராமநாராயணன் அவர்கள் டப் செய்து ரிலீஸ் பண்ணியாச்சு. சரி படத்துக்கு வருவோம், அருந்ததீ படம் வழக்கமான தெலுங்கு மசாலா படமானு கேட்டா? ம்ம் கண்டிப்பா இருக்கு. ஆனா அருந்ததீ வந்து கொஞ்சம் மாயா மந்திர கதை பிளஸ் இது ஹீரோயின் சார்ந்த கதை. படம் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருந்தது கொஞ்சம் த்ரில்ல கொஞ்சம் சஸ்பென்ஸ். ஆனா போக போக அந்த த்ரில் இல்ல. நம்ம யாவரும் நலம் படதுகிட்ட அருந்ததீ படம் எடுபடல. அதுவும் முக்கியமான எடத்துல அந்த மொக்கை தெலுங்கு டப்பிங் பாட்டை போற்றுரனுங்க. மற்றபடி அனுஷ்கா, சாயாஜி, சோனம் அனைவரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள். படத்தில் வரும் அந்த கந்தர்வ கோட்டையின் பிரமாண்ட மாளிகை நம்மை வியக்க வைக்கிறது அதுவே சில நேரங்களில் நம்மை சலிப்படைய செய்கிறது.



அனுஷ்கா இளைய தளபதி விஜயின் அடுத்த படத்தின் நாயகி, அருந்ததீயாக செம கலக்கு கலக்கிறார் படத்தில் முதன் முதலில் அந்த கோட்டையில் அனுஷ்கா செல்லும் காட்சியில் நமக்கு பயம் வருகிறது. ராணியாக வரும் அனுஷ்கா அழகும் வீரமும் ஆகா காட்சி தருகிறார். வில்லன் சோனு தன் வேலையை கச்சிதமாக செய்திரிகிறார்.


சாயாஜி நம்ம அனுஷ்கவ வில்லன் கிட்ட இருந்து காப்பத்த உதவி செய்கிறார், ஒரு தடவை இரண்டு தடவை இல்ல பல தடவை உதவி பண்றார் நம்ம சாயாஜி.வில்லன் அனுஷ்காவை நெருங்கும் போதல்லாம் படம் பார்ப்பவர்கள் நினைப்பார்கள் "எங்கட சாயாஜி காணோம் " என்று கேட்கும் அளவுக்கு உதவி செய்து உயிர் விடுகிறார் சாயாஜி. படம் சுமார்.








4 comments:

சித்து said...

anushka ponnu nalla nadichirukka?? :P

ஜெட்லி... said...

anushka nadippu miga arumai...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கு மச்சியோவ்

Sri said...

Anushka is awesome...pretty hot..