Monday, May 9, 2011

இதுதான்டா எங்க பவரு ....!!

இதுதான்டா எங்க பவரு ....!!


வெளியீடு : பவர் ஸ்டார் அகில கெரகம் ரசிகர் மன்றம்.






வெற்றி வெற்றி...லத்திகா வெற்றிகரமாக அம்பதாவது நாள் ஓடி அதையும் தாண்டி எப்படியாவது காசு கொடுத்து நூறு நாள் கூட வெற்றிகரமாக கண்டிப்பா ஓடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... நம்ம பவரு ஸ்டார்க்கு கிடைத்த வெற்றி தமிழனுக்கு கிடைத்த வெற்றி.... இந்த படத்தை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன அனைத்து பவர் ரசிகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகிறோம்.....

ஆனந்த தொல்லை....





அடுத்து நமக்கு தொல்லை கொடுக்க மன்னிக்கவும் தூக்கத்தை கெடுக்க வரபோகும் படம் தான் ஆனந்த தொல்லை நம்ம பவர் நடித்தது....நம்ம அண்ணன் பவர் ஸ்டார்க்கு ஏத்த மாதிரி நாயகி, முன்னால் அழகி இந்நாள் கிழவி வாணி விஸ்வநாத் நடித்து இருக்கிறார். கூடவே கவர்ச்சி அணுகுண்டு பாபிலோனா கூட பவர் கூத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தை அனைவரும் பார்த்து தங்கள் வாழ்நாள் பாக்கியத்தை கிட்ட வேண்டும்
என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


மன்னவன்:


ரஜினி மூன்று முகம், சூர்யாக்கு காக்க காக்க,விஜய்க்கு போக்கிரி மாதிரி நம்ம தல பவருக்கு மன்னவன்.இந்த படமும் கூடிய விரைவில் வெளி வந்து மக்களை மகிழ்விக்க வேண்டும்...!!


.
ஜெட்லி...(சரவணா...)




8 comments:

Chitra said...

எங்களையெல்லாம் மிரட்டுரதுக்கு ஒரு அளவே இல்லையா? :-(

Unknown said...

யாருப்பா அது பின்னாடி வட்டத்த சுத்தி விட்டது ஹிஹி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐயோ கொல்றாங்களே
ஐயோ கொல்றாங்களே
ஐயோ கொல்றாங்களே
ஐயோ கொல்றாங்களே

Unknown said...

யோவ் தம்பி கடையை ஒழுங்கா கவனிய்யா!!!

Ashok D said...

பாடத பொருளை பற்றி பாடினேன்... என்பதுபோல பார்க்காத படங்கள் பற்றி தம்பி ஜெட்லி வாழ்வு கொடுப்பதை கண்டு கண்ணீர் மல்கி டரியலாகிறேன்..

படம் பார்த்து விமர்சனம் எழுதவும் :)

பாலா said...

எங்களயும் மன்றத்துல சேத்துக்கொங்க.. பவர் ஸ்டார் வாழ்க !!

சிநேகிதன் அக்பர் said...

இப்படி ஒரு ஸ்டைல இதுவரைக்கும் பார்த்ததே இல்லை.

பிள்ளைங்க சாப்பிடலைன்னா இவரு படத்த காட்டுனா போதும்.

Sivakumar said...

நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டர் வழியா தெரியாம போயிட்டேன். இசைவெளியீடு பேனர்ல நீக்கமற நிறைஞ்சி இருந்தார் பவரு. தொல்.திருமா அண்ணனோட. ஐ ஆம் தி மோஸ்ட் LUCKIEST மேன்!!