Tuesday, October 12, 2010

எந்திரன்.... கலீஜா....

எந்திரன், கலீஜா மற்றும் வாடா....


கம்ப்யூட்டர் கொஞ்ச நாளா வேலை செய்யலை ...நான் எந்திரன் படத்துக்கு
விமர்சனம் எழுத கூடாதுனு யாரோ செய்ஞ்ச வெளிகிரக சதினு நினைக்கிறேன். இதை கண்டிச்சு கூடிய விரைவில் நாமா ஏதாவது ஒரு முட்டு சந்தில் நின்னு ஒரு போராட்டம் நடத்துவோம்..நீங்களும் வருவீங்கனு நம்புறேன்...



எந்திரன் :


எந்திரன் படத்துக்கு எங்க ஏரியா தியேட்டரில் டிக்கெட் ரேட் 150,300,500 னு சொன்னாங்க...அதனால கொஞ்சம் ஒதுங்கி தான் இருந்தேன். அப்புறம் ஆல்பர்ட் தியேட்டரில் கவுன்டர் ரேட் விலையில் டிக்கெட் கிடைத்தது.எனக்கு படம் ஓகே. ஆனா ரெண்டாவது தடவை அபிராமியில் டிக்கெட் கிடைச்சும் நான் போகல...காரணம் ரெண்டாவது பாதி. சுவாரிசியம் இல்லாத ரெண்டாவது பாதியை ஷங்கரிடம் இருந்து நான் எதிர்ப்பார்க்கல...


ஆனா ரஜினி இந்த மாதிரி science fiction படத்தில் எந்த ஒரு ஹீரோ பில்ட்
அப் இல்லாமல் நடித்தது பெரிய விஷயம். ஐஸ்வர்யா ராய் அந்த சாரியில்
கொள்ளை அழகு...ரெண்டாவது தடவை பார்க்க வந்த என் நண்பன்
அந்த காட்சியை மட்டும் விழித்து கொண்டு பார்த்தான். அப்புறம் வில்லன்
டோனி, என்ன ஒரு பில்ட் அப் இவருக்கு....ஆனா புஸ் ஆக்கிட்டாங்க...
படத்தோட நீளமும் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!



எந்திரனாக வரும் ரஜினியின் வசனங்கள் நச்... மே மே...கத்துவாரே
உண்மையிலே செம...சந்தானத்தை மொக்கை பண்ணிட்டாங்க..
கடைசி கிராபிக்ஸ் காட்சிகள் பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை...


அப்புறம் இன்னொரு விஷயம் கவனிச்சிங்களா....மொதல்ல சன் டி.வி.யில்
ட்ரைலர் போடும் போது சூப்பர் ஸ்டார் ரஜினி பேர் தான் முதல்ல வரும்...
ஆனா இப்போ ரெண்டு நாளா சன் பிக்சர்ஸ் கலாநிதி பேர் தான் முதலில்
வருகிறது.... என்னனு தெரியல....??


kaleja :


எந்திரன் படம் வந்தாலும் வந்தது வேற எந்த தமிழ் படமும் ரீலீஸ் ஆகல...
சரி இன்னொரு science fiction படத்தோட விளம்பரம் பார்த்தேன்..அது உலக
படமும் கூட தான்...





ஆனா எனக்கு ஆலந்தூர் எஸ்.கே. தியேட்டர் எங்கே இருக்குனு சரியா தெரியல..அதனால அந்த ப்ளானை ட்ராப் பண்ணிட்டு நேரா நம்ம மகேஷ் பாபு நடிச்ச கலீஜா படத்தை பார்க்க காசினோ போய்ட்டேன்...படம் சுமார், இல்லை மொக்கைனும் தெரிஞ்சு தான் போனேன். ஏன் விஜய் இப்படி கெட்டு போனார்னு மகேஷ் பாபு படத்தை பார்த்தவுடன் தான் தெரிஞ்சுது. என்னா பில்ட் அப்... இருந்தாலும் ஓகே ஓரளவுக்கு டைம் பாஸ் ஆச்சு...ஆனா படத்தோட நீளம் ரொம்ப ஜாஸ்தி...வர வர படத்தோட நீளம் என்னை ரொம்ப யோசிக்க வைக்குது...



மகேஷ் பாபு அப்போ அப்போ ஒரு கிழிஞ்ச துணியை கழுத்தை சுத்திக்கிட்டு
வர்றார்...இந்த மாதிரி ஸ்டைலை எங்க சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி அவர்கள்
குரு சிஷ்யன் படத்திலே செய்ஞ்சிட்டார். லாஜிக் அப்படின்னு நீங்க பார்த்தீங்கனா சுத்தமா இல்லைன்னு தான் சொல்லணும்..



சரி கலீஜா அப்போ கலீஜ்ஆ??னு நீங்க கேட்டா அப்படின்னு சொல்ல முடியாது... காரணம் அனுஷ்கா... நல்லா வெளிப்படுத்தி இருக்காங்க திறமையை தான் சொல்றேன். பிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லனா வர்றார்... படம் எப்போ முடியும் எப்போ கிளம்பலாம்னு காத்துகிட்டு இருந்தேன்... ஏற்கனவே அனுஷ்கா நடித்த வேதம் படத்தை பார்த்து இருக்கிறேன்... இப்போது சிம்பு அதை வானமாக நடித்து கொண்டிருக்கிறார். எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில் வேதம் தெலுங்கு படத்தை போட்டிருந்தார்கள்...கிழே விளம்பரத்தை பாருங்க...



நான் ரெண்டாவது தடவை இந்த படத்தை பார்க்க முடியாதது ரொம்ப வருத்தமா இருந்தது....ஏரியா புல்லா தெரிஞ்சவங்க தான் இருக்காங்க...இந்த நாடு என்னை பத்தி என்ன நினைக்கும்...என்க்கிட்ட சொல்லாம வீட்டு பக்கத்தில் இருக்கிற கல்லூரி மாணவர் ஒருத்தர் தொப்பி எல்லாம் போட்டு போய் படத்துக்கு போயிட்டு வந்தார். பயங்கர கூட்டமாம்....முக்கா வாசி பேர் சீன் இல்லாமல் பாதியிலே போய்ட்டாங்களாம்... ஆனா அவன் ரோவில் பக்கத்தில் உட்கார்ந்த இருந்த ஒரு பொக்கை தாத்தா மட்டும் கடைசி வரைக்கும் பார்த்தாராம்...முதல்ல இந்த மாதிரி ஒரு நல்ல படத்துக்கு
இப்படி விளம்பரம் போடுறதை தடை செய்யணும்.... அப்புறம் எத்தனை பேரு பிட் போடுவாங்கன்னு ஆசையா வந்து இருப்பாங்க...ச்சே.....


பிட் படம் பார்க்குறவங்க மனுசு பிட் படம் பார்க்குரவனுக்கு தான்
புரியும்னு சொல்வாங்க......உங்களுக்கும் புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்....



வாடா....!! <--GET READY FOLKS -->


அதோ இதோ என்று நம்மை வாட வைத்த வாடா படம் மீண்டும் வருகிறது....
வரும் 15 ரெடி ஆகுங்க....முதல் காட்சி போவோம்...வீட்ல சொல்லிட்டு வந்துருங்க... நமது அண்ணன் சூப்பர் பாக்கு தல நடிக்கும் வாடா படத்தை வாடாமல் வதங்காமல் பார்க்க இப்போதே படை எடுங்கள்....
வாடா படத்தை ஏற்கனவே நாம முன்னோட்டம் கொடுத்து இருக்கோம்...
கிழே கிளிக் பண்ணி படிச்சு பார்த்துட்டு தெளிவா இருங்க...


வாடா - உலக சினிமாவுக்கு ஒரு சவால்!!



வாடா படம் ஏற்கனவே ரீலீஸ் தள்ளி போனதில் இருந்து அமெரிக்கா நாட்டு
அதிபர் ஒபாமா தினமும் நைட் ஆனா மிஸ்ட் கால் கொடுத்து படம் எப்போ ரீலீஸ் ஆகும்னு கேட்டு ஒரே தொல்லை கொடுக்கிறார். ஒரு வேளை இந்த தடவையும் ரீலீஸ் தள்ளி போனா நாம வாடா படம் மீட்பு குழுனு ஒண்ணு ஆரம்பிச்சு அதற்கான வேலையில் இறங்குவோம் நண்பர்களே....

வாடா வாடா னா வர மாட்டான்டா...
போட போட னா போக மாட்டான்டா...
அவன் தான்டா எம தர்மன்....
( பாடல் இடம் பெற்ற படம் கோல்மால்...)



நல்லதை நாலு பேருக்கு தெரிவிக்க நீங்க ஆசைப்பட்டா உங்க வாக்கை
போடுங்க....
ஜெட்லி...(சரவணா...)

11 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாமு உனக்கு ஆயிசு நூறு. இன்னிக்கு பேப்பர் ல வாட ரீலீஸ் Oct ௧௫ அப்டின்னு பாத்ததும் உங்க நியாபகம் வந்தது. ஆபீஸ் வந்து மெயில் அனுப்பலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே போஸ்ட் போட்டுடீங்க. ரொம்ப எதிர்பார்ப்புல இருக்கீங்களோ?

ஜெட்லி... said...

ஆமாம்பா.... நீ இன்னும் ட்ரைலர் பார்க்கலைன்னு நினைக்கிறேன்....
பார்த்தா நீயும் பார்க்க ஆசைப்படுவ...
அந்த பைக் மேல கன் ஷூட்டிங் சீன் நோ சான்ஸ்....

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the paavam. tv ya paakkamaatten

Anonymous said...

//இன்னொரு science fiction //
ஹி ஹி..

//அந்த ப்ளானை ட்ராப் பண்ணிட்டு//
தன்மானச் சிங்கத்துக்கு இது அழகா? ( சே.. மிஸ் ஆயிடுச்சே ;) )

செ.சரவணக்குமார் said...

வாடா படத்தோட விளம்பரத்தப் பார்த்தாலே உங்க ஞாபகம்தான் வருது நண்பா.

எஸ்.கே said...

எப்படிதான் தினமும் சன் டீவில ட்ரெய்லரை பார்த்து வித்தியாசமெல்லாம் கண்டுபிடிக்கிறீங்களோ! தினமும் பார்க்க கடுப்பாயில்ல?:-)

மேவி... said...

:)))

ஜெட்லி... said...

@ எஸ்.கே said...
எப்படிதான் தினமும் சன் டீவில ட்ரெய்லரை பார்த்து வித்தியாசமெல்லாம் கண்டுபிடிக்கிறீங்களோ! தினமும் பார்க்க கடுப்பாயில்ல?:-)




நான் என்ன பண்றது டி.வி போட்டாலே அதை தான் பார்க்க
வேண்டியிருக்கு.....

Anonymous said...

யோவ் வாடா படம் வந்து நாலு நாளாச்சு... எங்கய்யா உம் விமர்சனம்.....இன்னும் 24 மணித்தியலதுக்குள்ள போடலனா , உம்மை பான்பராக் மண்டையன் சுந்தர் c ரசிகர் மன்றத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

வாடா என்னாச்சு?சிரிப்புப்போலீஸ் போட்டு கிழிச்சிருக்காரே,சீக்கிரம் பதிவை போட்டு மானத்தை காப்பாத்திக்குங்க.

சி.பி.செந்தில்குமார் said...

வாடா பட விமர்சனம் என்னாச்சு என திருத்தி வாசிக்கவும் சாரி