Monday, September 6, 2010

சிந்து சமவெளி - ஏதோ ஒரு பார்வை.

சந்துல சிந்து....!!


சரியா சொல்லனும்னா எனக்கு இந்த படத்தை பார்க்குற ஐடியா நேத்து
நைட் ஒன்பது மணி வரைக்கும் இல்லை. இந்த படத்துக்கு நான்
போனதுக்கு ஒரே காரணம் ஆற்காடு வீராசாமி அவர்கள் மட்டுமே.
மழை வேற...பலே பாண்டியா போலாம்னு தான் எனக்கு வெள்ளிக்கிழமை
ப்ளான்...ஆனா படத்தை பத்தி மாறுதாறு ரிப்போர்ட் வந்ததனால் அப்படியே
விட்டுடேன்...முன்னாடி எல்லாம் முதல் ஆள போய் படத்தை பார்த்து
மொக்கையா இருந்தா கூட அவ்வளவா பீல் பண்ணதில்லை...ஆனா இப்போ
முதல் நாள் நைட் ஷோ போலாம்னு ப்ளான் போட்டா மதியமே படம்
மொக்கைனு சொல்லி ஆப் பண்ணிடறாங்க நண்பர்கள்.... இப்படியே விட்டா
படமே பார்க்க முடியாதுனு முடிவு பண்ணிட்டு சிந்து சமவெளி கிளம்பிட்டேன்.



வெள்ளிக்கிழமையில் இருந்தே எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில்
இந்த படத்துக்கு ஓரளவுக்கு கூட்டம் இருந்து கொண்டே தான் இருந்தது.
ஆனா இந்த மழையிலும் ஜெயந்தியில் நல்ல கூட்டம். எல்லாம் 'A ' சான்றிதழ்
மகிமை. ஏன் நூப்பது ருபாய் கொடுத்து கட்டை சீட்டில் உட்கார்ந்து கொசு
கடி, மூட்டை பூச்சி கடி வாங்கனும்னு நேரா வண்டியை ஈஞ்சம்பாக்கம்
ஆராதனாவில் நிறுத்தினேன். செம கூட்டம் அநேகமா நான் தான் உள்ள
என்டர் ஆன இருபதாவது ஆளாக இருப்பேன்!! அப்புறம் படம் ஆரம்பிச்ச
கொஞ்ச நேரத்தில் ஒரு பத்து பேர் சேர்ந்து இருப்பாங்க...அதில் ரெண்டு
ஜோடி. ஒதுங்க வந்திருப்பாங்கனு நினைக்கிறேன்...மழைக்கு பயந்துனு
சொன்னேன்ங்க....

அதே கைகள்...



ஹில்ஸ் ஹேவ் கண்கள் படத்தின் விளம்பர படம்....


நம்ம சிந்து சமவெளி விளம்பர படம்... பொண்ணு மட்டும் வேற..கை அதே தான்....




சுறா படத்தில் முதல் காட்சியில் எப்படி விஜய் கடலில் இருந்து வருவரோ
அதே போல் இதிலும் நாயகன் ஹரிஷ் கடலில் இருந்து வருகிறார்.
படத்தோட நாயகி அனாகா அழகா இருக்காங்க.... எனக்கு அப்போ அப்போ
டவுட் வந்திருச்சு... ஏன்னா வரிசையா எல்லா மிருகத்தையும் காட்டுவாங்க..
ஒரே வேளை டிஸ்கவரி சேனல் எதையும் போட்டுடாங்கலோனு. இங்க
தான் சாமியோட நுண் மற்றும் பன் அரசியலை பத்தி நீங்க கண்டிப்பா
தெரிஞ்சே ஆகணும்.... ஒரு காட்சியில் நாயகனும் நாயகியும் படத்தில்
தியேட்டரில் பார்க்கிற படம் சாமியின் முந்திய படம் மிருகம்.


அதோ அந்த ஓரமா ஒரு ஈ பறக்குது தெரியுதா....??




இந்நேரம் உங்களுக்கு படத்தோட கதை திரைக்கதை எல்லாம் தெரிஞ்சு
இருக்கும்னு நினைக்கிறேன்.நான் இதுக்கு முன்னாடி சாமி எடுத்த ரெண்டு படத்தையும் பார்த்ததில்லை.படம் ரீலீஸ் ஆகும் போதே நண்பன் சொன்னான்
சாமி படம் டெர்ரர்ஆ இருக்கும்...ஆன சீனே இருக்காதுனு....அது உண்மை தான்.இது விழிப்புணர்வு படம்னு சொன்னாங்க, அது உண்மைங்க முதல் பாதி தூக்கம் தள்ளுனாலும் இன்டெர்வல் டைமில் இருந்து இயக்குனர் சாமி நம்மை எழுப்பி உட்கார வச்சிடுறாரு.(என் முன்னாடி ரோவில் இருந்த ஆசாமி கடைசி வரை கண் முழிக்கவில்லை...). மற்றபடி படம் எப்ப முடியும் எப்ப எஸ் ஆகலாம்னு காத்துகிட்டு இருந்தேன்.


எனக்கு சாமி மேல ரொம்ப கோபம்ங்க....முக்கியமான சீனில் எல்லாம்
அந்த வீட்டை ரெண்டு ரவுண்ட் அடிச்சு காட்டி எங்களை மாதிரி விடலை
பசங்களை ஏமாத்திடாரு. கஞ்சா கருப்பு காமெடி பண்றேன்னு சொல்லி
செம மொக்கை போட்டாரு. ரொம்ப பாராட்டப்பட விஷயம்னா அது
ஆராதானா தியேட்டரில் இருந்த புல் ஏ.சி.தாங்க. அப்புறம் இது வரைக்கும்
என் வாழ்க்கை வரலாறுல ஆராதானாவில் படத்தை அப்போ அப்போ
நிறுத்தாம பார்த்த ஒரே படம் இது தாங்க.


தியேட்டர் நொறுக்ஸ் :


# டிக்கெட் எடுக்க போகும் போதே நண்பர்கள் குழுவில் கேட்ட டயலாக்...

"என்ன படம் மச்சான்??"

" சிந்து சமவெளி டா.."

"என்னது...??"

"சிந்து நடிச்ச படம்டா..."


# நாயகனின் அப்பா வேறு ஊருக்கு படிக்க செல்லும் மகனிடம்

" ஆச்சியை(நாயகியை) நான் பார்த்துக்கிறேன்..."

இங்கே நம்ம ஆள்...

"நீ தானே பார்க்க போற..."


# படத்தில் இன்டெர்வல் அப்புறம் தான் கொஞ்சம் ஏடாகூடமா கதை
போகும்....அந்த டைமில் வந்திருந்த ரெண்டு ஜோடிகளும் ஒண்ணு
ஒண்ணா கிளம்பி போய்ட்டாங்க..என் டவுட் என்னனா படத்தோட
கதை போக்கு பிடிக்காம போனாங்களா...?? இல்லை அவங்க வந்த
வேலை முடிஞ்சவுடனே கிளம்பிட்டாங்களா??னு தான்.....சரி அதெல்லாம்
நமக்கு எதுக்கு...!!


இது விமர்சனமா இல்லையானு நீங்களே முடிவு பண்ணி...
உங்கள் வாக்கை போட்டு பல பேரை படிக்க செய்யுங்க...

நன்றி

ஜெட்லி...(சரவணா...)

11 comments:

ஜெட்லி... said...

கரன்ட் மறுபடியும் கட்...யாராவது இன்ட்லியில் சேர்த்து விடுங்கள்...

Anbu said...

சிந்து சமவெளி-சந்துல சிந்து....!!

என்னது நானு யாரா? said...

படத்தை விமர்சனம் செய்யாம விட்டீங்களே தல!

கதை என்னான்னு சொல்லுவீங்கன்னு ஆவலா பார்த்தா இப்படி அம்போன்னு விட்டு போட்டீங்களே!!! சரிவிடுங்க ஏதோ ஏடாகூடமான படம்னு நினைக்கிறேன்.

-----------------------------------

நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

நீங்களும் வந்து பாருங்க தல!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு நீங்க வசந்த் டிவி ல சனிக்கிழமை நைட் நல்ல ஷகிலா படம் பாத்திருக்கலாம்..

பின்னோக்கி said...

ஆற்காடு வீராசாமி
பலே பாண்டியா
ன்னு ஏன் இல்லாத காரணத்தை தேடுறீங்க ? :). படம் *நல்லா* யிருக்கும்னு நம்பி போய்ட்டேன்னு *உண்மைய* ஒத்துக்க வேண்டியது தானே..

அந்த ஈய மட்டும் பார்க்கவே முடியலை. அவுட் ஆப் போகஸ். நெக்ஸ்ட் டைம் ஒழுங்கா போட்டோ எடுங்க.. :)

ஜெட்லி... said...

படத்துக்கு தான் கூட்டம் வரலனு பார்த்தா...
பின்னூட்டம் போட கூட டெர்ரர் ஆவுறாங்கலே....
நான் ஒண்ணும் டீடேல்லா எழுதலையே...

சிநேகிதன் அக்பர் said...

உங்க பார்வையே வித்தியாசமா இருந்துருக்கு போல :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

விமர்சனம் அருமை..

hasan said...

BALE PANDIYA...IS NOT EXCELLENT BUT ITS GOOD TO WATCH....VERY HUMOROUS...DON'T HESITATE ...PLZ WATCH SURELY YOU WILL ENJOY...

ஜெட்லி... said...

அடுத்த வாரம் ஓடினா போய் பார்க்குறேன் ஹசன்...

Raghu said...

நேத்துதான் குமுத‌த்துல‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌டிச்சேன். ஜெட்லி...ம்ம்ம்ம்ம்ம் ;))))