Wednesday, August 31, 2011

மங்காத்தா...டா..!!

மங்காத்தா...டா..!!

அஜித் படத்துக்கு ஓபனிங் எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும்.. நம்ம அடையார் ஐநாக்ஸ் தியேட்டர்லேயே டிக்கெட் கிடைக்கல. அதனால ரெண்டு நாள் காத்திருந்து அப்படி இப்படினு நம்ம வில்லிவாக்கம் நாதமுனியில் காலையில் அஞ்சு மணிக்கு படம் பார்த்துட்டு வந்துட்டேன். அட அஞ்சு மணிக்கு படம் பார்க்குற அளவுக்கு வெறியானு நினைச்சா அது உங்க தப்பு, எனக்கு தேவை புது புது அனுபவங்கள்...அதனால தான்
காலையில் அஞ்சு மணிக்கு அண்ணா ஆர்ச் பக்கத்தில் இருக்குற டீக்கடையில் டீ குடிச்சு...அது ஒரு சுகம் தான்....!!


சரி சரி... படத்துக்கு வரேன்... கிரிக்கெட் சூதாட்ட பணத்தை தன் முதலாளி செட்டியார் (ஜெயபிரகாஸ்)யிடம் இருந்து வைபவ் மற்றும் மூன்று நண்பர்கள் கொள்ளை அடிக்க திட்டம் போடுறாங்க. அஜித் தனியா திட்டம் போடும் போது இந்த நாலு பேரை பத்தி தெரிய வருது. அப்புறம் என்ன அந்த கொள்ளை கூட்டத்துக்கு அஜித் தான் பாஸு... கொள்ளை அடிச்சா 500 கோடி பணத்தை எப்படி பிரிச்சாங்க, என்ன ஆச்சு என்பதே மங்காத்தா.... அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக வந்து சூதாட்ட கும்பலை வேட்டை ஆடுகிறார். த்ரிஷா ஜெயப்ரகாஷ் பொண்ணு, அஞ்சலி வைபவின் மனைவி, சண்முக சுந்தரம் அஞ்சலியின் அப்பா , அம்பிகா புருஷன் செட்டியாரின் அடியாள்,
அரவிந்த்தும் செட்டியாரின் அடியாள், பஞ்சு அருணாச்சலம் பையன்...என்னது
போதுமா...ரைட் விடுங்க....!!


அஜித் அஜித் அஜித்... தல இல்லனா மங்காத்தா இல்ல... படத்தை தாங்கி
நிற்கும் தூண் அஜித் தான். வழக்கமான வசனம் இல்லாம நல்லாவே இருக்கு.
ஆட்டம் பாட்டம் என்று மனிதர் கலக்கி அடித்து இருக்கிறார். அதெல்லாம் இருந்தா மட்டும் போதுமா...??. அர்ஜுன் கூட நல்லாவே பண்ணி இருக்கிறார். அஜித் அர்ஜுனை அக்சன் கிங் என்று அழைக்கும் போது தியேட்டரில் பயங்கர விசில். அதே போல் அர்ஜுனும் தல என்று சொல்வார்...அட அட என்னா விசில்... விசில் கூட ஒரு படத்தின் வெற்றியை முடிவு பண்ணும். காரணம் முதல் பாதியில் அஜித், அர்ஜுன் இன்ட்ரோ தவிர விசில் சத்தம் இல்லை.


வைபவ், அரவிந்த். பிரேம்ஜி......அட டைப் அடிக்க கை வலிக்குதுங்க..... இப்படின்னு வழக்கமான வெங்கட் பிரபு ஆட்கள் படம் முழுவதும் வருகிறார்கள்.விடுங்கடா சாமி எத்தனை படத்தில இவனுங்க மூஞ்சை பார்க்கறதுனு தான் தோணுது. நல்ல வேளை அந்த ரெண்டு பசங்களையாவது புதுசா போட்டார்..லட்சுமி ராய் எதுக்கோ வருகிறார் எதுக்கோ போறார். த்ரிஷாவும் தான்.

வாடா பின்லேடா பாட்டு மேகிங் நல்லா இருந்தது. அதே மாதிரி சில சில டைமிங் காமெடிகள் அதுவும் அஜித் சொல்ற... பசங்க : என்னணே காமெடி பண்றீங்க?? அஜித்: நான் என்னா சந்தானமாட... என்று டென்சன் ஆகும்போது. வஸந்த் & கோ விஜய் வைன் ஷாப்பில் அடிக்கும் லூட்டி. என்று சொல்லலாம். சாம் அண்டர்சன் கூட விட்டு வைக்கவில்லை வசனத்தில்.


படத்தில போதை பாடமே நடத்துறார் வெங்கட் பிரபு...ஒரே போதை மயம் தான். பிரேம்ஜி கொஞ்சம் ஓவர் தான் இதிலும். இன்டெர்வல் முன்னாடி வர்ற கற்பனை காட்சிகள் சூப்பர். அப்புறம் கிளைமாக்ஸ் நல்லா இருக்கு. இது தான் மங்காத்தா. வெங்கட் பிரபு அப்போ அப்போ நம்மளை குஷி ஏற்படுத்துகிறார் தவிர வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. முன்னாடி எல்லாம் பன்ச் டயலாக் சொன்னால் விசில் அடிப்பார்கள் இப்போ அஜித் அந்த பையன் இந்த பையன் திட்டறதுக்கு விசில் பறக்கிறது. இந்த வசனம் எல்லாம் கேட்டவுடன் கௌதம் மேனன் ஐயா நினைவு தான் வந்தது.


படத்தோட நீளம் எனக்கு ஆகாது சாமி. இன்டெர்வல் சேர்த்து மூணு மணி நேரம் ஓடுது. படத்தில சில காட்சிகள் ஏற்கனவே நம்ம சன் அண்ணாச்சி கட் பண்ணிட்டாங்கனு தெளிவா தெரியுது. அவங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்...தயவு செய்து நல்ல கத்திரிக்கோல் யூஸ் பண்ணுங்க ஜி... பாதி வசனத்தில் கட் பண்றது நியாயம் இல்லை.

நான் ரெண்டாவது தடவை மங்காத்தா திரும்பவும் திங்கக்கிழமை போறேன்... அட படம் அவ்வளவு சூப்பர்ஆ னு நீங்க தப்பு கணக்கு போட்டுறாதீங்க... அதுக்கு நான் பொறுப்பில்ல.. கல்யாணம் ஆனா இது ஒரு பிரச்சனை... படம் எப்படி இருந்தாலும் ரெண்டாவது தடவை பார்த்து தான் ஆகணும்...இதுக்கு தான் நான் பல படங்களை இப்போதெல்லாம் முதல் நாள் பார்ப்பது இல்லை...!!

படம் எப்படி நச்சுனு சொல்லு அப்படின்னு கேட்கறவங்களுக்கு....கண்டிப்பா படத்தை பார்க்கலாம்..டைம் பாஸ் தான். ஆனா என்ன பல காட்சியில் கொட்டாவியும் கண்ணை கட்டுவதையும் நிறுத்த முடியலை. இப்படி அப்படி பண்ணிட்டு கடைசியில் குஷியா வெளியே அனுப்புகிறார் இயக்குனர். அதை முதலில் இருந்தே செய்ஞ்சு இருந்தால் மங்காத்தா ஆட்டம் களை கட்டி இருக்கும்...!!

மங்காத்தா - கட்டுல சீட்டு கம்மி ..!!

தியேட்டர் நொறுக்ஸ்:
# இது தான் நாதமுனியில் முதல் படம்... தியேட்டர் ஓகே...ஆனா தலை தான் மறைக்கிற மாதிரி சீட் இருக்கு.

# படம் ஆரம்பிக்கறது முன்னாடியே களை கட்ட ஆரம்பிச்சாச்சு...செம கூட்டம்... ரெண்டு பேர் விசில் அடித்து வெளியே சென்றதுக்கு போலிஸ் அடித்து அவர்கள் கையை பிடித்து...ஒரே கலாட்டா....

# இப்ப பல தியேட்டர்ல டிக்கெட் கூட ஈஸியா கிடைச்சுடுது ஆனா பைக் பார்க்கிங் டோக்கன் வாங்கறதுக்கு தான் லேட் ஆகுது... இங்கயும் அந்த அனுபவம் தான்.


# த்ரிஷாவை கண்டவுடன் படம் பார்த்த பின் சீட்டுக்காரர் இருந்து வாயில் இருந்து பன்னீராக கொட்டியது வார்த்தைகள். காலையிலே இந்த கொடுமையெல்லாம் கேட்க வேண்டியது இருந்தது.

# இன்டெர்வல் அப்ப எழுந்து போகும் போது முன் சீட்டுக்காரர் முதல் பாதியிலே தூங்கி போய் இருந்தார் என்று அவர்கள் நண்பர்கள் கலாய்த்து கொண்டு இருந்தனர்.

உங்கள்...
ஜெட்லி... (சரவணா...)









21 comments:

சேலம் தேவா said...

//ஆனா என்ன பல காட்சியில் கொட்டாவியும் கண்ணை கட்டுவதையும் நிறுத்த முடியலை//

காலையில அஞ்சு மணிக்கு படம் பாக்கப்போனா கொட்டாவி வராம வேற என்ன வரும்..?! :))

மரா said...

Super thala. Thanks for your commitment and hardwork :)

ஜெட்லி... said...

ஹோ...நன்றி... :))

ஜெட்லி... said...

@ மரா ...

enna hardwork... ungalai vidava annae...??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் விமர்சனம் எழுதுரதுக்காகவே முதல் ஷோ போனியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படி அப்படி பண்ணிட்டு கடைசியில் குஷியா வெளியே அனுப்புகிறார் இயக்குனர்//

ஏன் வெளில வரும்போது கிச்சு கிச்சு மூட்டி அனுப்புறாங்களா?

கும்மாச்சி said...

ஜெட்லி முதல் நாள் முதல் ஷோ பார்த்திட்டிங்க, ஐயோ இன்னொரு முறைய, வாழ்த்துகள். என்ன நம்ம கடை பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு?.

Raju said...

படத்துக்கு, தல ஒருத்தரே போதும் பாஸ்!
மூனு மணி நேரமென்ன, ஒரு நாள் முழுசும் கூட பார்ப்போம்.
எங்க தல போல வருமா..?

rajamelaiyur said...

Movie hit or not

மாணவன் said...

//Movie hit or not///

Movie hit but not Super hit... :))


விமர்சனம் நல்லாருக்கு நண்பரே

N.H. Narasimma Prasad said...

நண்பா, நம்ம ஏரியா தியேட்டர்'ல படத்தை பார்த்திருக்கிங்க. படம் நல்லாவும் இருக்குன்னு சொல்லியிருக்கிங்க. அது சரி, நாதமுனியில மூட்டை பூச்சி ஜாஸ்தியா இருக்குமே, எப்படி சமாளிச்சிங்க?

ஜெட்லி... said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


அப்படிலாம் இல்ல மாமே.... சும்மா தான்...

ஜெட்லி... said...

@ கும்மாச்சி

நன்றி...வரேன்...


@"என் ராஜபாட்டை"- ராஜா

average

ஜெட்லி... said...

@ ♠ ராஜு ♠ ...

கண்டிப்பா தல போல வராது தான்....
இல்லனா இவ்ளோ பெரிய ஓபனிங் கிடைக்குமா....

ஜெட்லி... said...

@ மாணவன்...

nandri manavan....

ஜெட்லி... said...

@ N.H.பிரசாத்...

அப்படி ஒண்ணும் இருந்தா மாதிரி தெரியல ஜி....
ஏ.சி தான் அவ்வளவா போடல...

Ashok D said...

//அட அஞ்சு மணிக்கு படம் பார்க்குற அளவுக்கு வெறியானு நினைச்சா அது உங்க தப்பு, எனக்கு தேவை புது புது அனுபவங்கள்...அதனால தான் //

நல்லாயிருக்கே இந்த பஞ்சு... :)

நானும் ஒரு 35 வருஷமா 5 மணிக்கு எழுந்தக்கலாம்ன்னு try பண்ணறன் முடியல :(

ஜெட்லி... said...

55 தானே அது... டைபிங் மிஸ்டேக் மாதிரி தெரியுது....

Ashok D said...

உண்மையை உலகிற்கு உணர்த்திய ஜெட்லி.. நீர் வாழ்க... :))

Philosophy Prabhakaran said...

ஒரு வெளம்பர ஸ்லைடு போட்டுக்குறேன்...

மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW
http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/this-is-my-fcking-review.html

Dinesh said...

ada ponga jetli.padam nallave illa..second half la fulla suttukite irukaanga..