Friday, August 19, 2011

மேற்கு மலை தொடர்ச்சியில் -- பயண கலாட்டா அனுபவங்கள்.

மேற்கு மலை தொடர்ச்சியில்...!!
இப்படி ஒரு வாய்ப்பு இன்னொரு தடவை எனக்கு வருமான்னு தெரியல... கல்யாணத்துக்கு அப்புறம் கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா என்பது ஒரு வரம் தான். கண்டிப்பா இந்த பயணம் எனக்கு மட்டுமில்ல என் கூட வந்த மற்ற பதிமூணு நண்பர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். GHATIKALLU அப்படின்னு கர்நாடகா மாநிலத்தில் ஹொரநாடு போற வழியில் இருக்கிறது. கடந்த வருடத்தில் இந்தியாவில் அதிக மழை அளவு பதிவான இடம். எந்த வித செயற்கை சத்தமில்லாமல் இயற்கை சத்தத்தை மட்டுமே ரெண்டு நாளும் சுவாசித்தோம் அனைவரும்.அது தவிர இங்குள்ள அனைத்து இடங்களும் அருவி உள்ப்பட தனியாருக்கு சொந்தமானதாம்.சரியா சனிக்கிழமை 13.8.11 அன்று 11.30 மணிக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டியில் அமர்ந்தோம். ட்ரெயின்லேயே எங்க ஆட்டம் கல கட்ட ஆரம்பிச்சுருச்சு.ஒரு பக்கம் சீட்டாட்டம் மறுபக்கம் போட்டோ செச்சன் என்று போய் கொண்டு இருந்தது.சேலம் வந்ததும் எங்கள் jason.... bourn(சாரதா பிரசாத்) வீட்டில் இருந்து பழங்கள் வந்து குவிந்தது. நண்பர் நிர்மல் வீட்டில் இருந்து ஜவ்வரசி உப்புமா வந்தது..செம சூப்பர்.அப்புறம் எங்கள் அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படும் பிரசன்னாவின் நண்பர்கள் திருப்பூரில் சிக்கன் பகோடா கொடுத்தது ரொம்ப உதவியா இருந்தது.இரவு கோவையிலிருந்து நண்பர் ரங்கா வீட்டில் இருந்து புளியோதரை வந்தது...மிக அருமை...!!
ட்ரெயின்லேயே பல சம்பவங்கள் நடந்தது....எங்கள் சீட்டில் உட்கார்ந்து வந்த
அஞ்சு பேரில் ஒருவர் தீடிர் என்று என்னிடம் வந்து தோள் மீது கை வைத்து.
தம்பி நீங்க எல்லாம் ஏதோ காலேஜ் இல்ல ஆபிஸ்ல இருந்து ஒன்னா வந்து
இருக்கீங்க நான் உங்க சுதந்திரத்தை தடுக்க விரும்பல...சீட்டு ஆடறது
ஆபன்ஸ்..நாங்க எல்லாம் போலீஸ் அக்யுஸ்ட்ட கூட்டிட்டு போறோம் அதனால வெளி ஆள உள்ள சேர்க்காதீங்க...அப்படின்னு சொல்லிட்டு போனாரு...அப்படியே நாங்க எல்லாரும் பயந்துடுவோம் அப்படின்னு நினைச்சாரு போல... இன்னும் சவுண்ட் தான் ஓவர்ஆ போச்சு... ஒரு வேளை அவரு போலீஸ்ஆ இருந்தா இந்த உலகத்திலே அக்யுஸ்ட்டுக்கு கொய்யா வாங்கி கொடுத்த மொதல் ஆள் அவரா தான் இருப்பார்..!!னு காலாசிட்டே போனோம்.
குதிரை மூக்கு


நண்பன் 'காரசேவ்' தனா மற்றும் 'புத்தர்' சாய் அவர்கள் கூட நான் அடித்த லூட்டி கொஞ்சம் நஞ்சமல்ல.. ட்ரெயின் அதிகாலை 4.20 க்கு எல்லாம் மங்களூர் அடைந்தது.அங்கிருந்து மினி பஸ்ஸில் காடிக்கல்லுவுக்கு பயணம். நாலு மணி நேரம் ஆகும்னு சொன்னார். ஆனா நாங்க போய் சேர்ந்தது 10 மணிக்கு மேல் தான். ரோட் எல்லாம் பயங்கரமா இருந்தது. நடுவுல ரெண்டு மூணு இடத்தில் இறங்கி ஏறி போனதும் லேட் ஆனதுக்கு காரணம். அப்புறம் பஸ்ஸில் ஒரு தெலுங்கு படம் ரவிதேஜா நடிச்சது மிரப்பகாய் என்ற படம் பார்த்து கொண்டே போனோம். அதில் வரும் ஆன்டி சொல்லும் அப்பா...என்ற டயலாக் ரெண்டு நாள் எங்களுக்குள் ஓடியது. குதிரை மூக்கு னு ஒரு இடம்..அட அட... அங்கேயே ஹோட்டல் இருந்தா கூட தங்கி இருந்து இருக்கலாம். அந்த இடமே அவ்வளவு குளுமை.நாங்க போக வேண்டிய இடம் அங்கிருந்து நாப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.

நாங்கள் ஏற்கனவே புக் பண்ணிருந்த ஹோம் ஸ்டேக்கு போனவுடன் காலை உணவை சாப்பிட ஆரம்பித்தோம். கடு என்ற இட்லி மாதிரி உருண்டையாக கொடுத்தார்கள். செம டேஸ்ட். அதை விட அவங்க கொடுத்த சட்னி சூப்பர்ஒ சூப்பர். மொழி தெரியாதது எங்களுக்கு பெரிய பிரச்சனையா தெரியல.. நண்பர் பிராணேஷ் கன்னடத்தில் நல்லாவே மாடி கட்டினார். சாப்பிட்டு முடித்து அங்கிருந்து அருவிக்கு கிளம்பினோம். மொத்தம் ரெண்டு அருவி இருக்குனு சொன்னாங்க. 300 அடி அருவிக்கு அரை மணி நேரம் நடக்கனும்
அட்டை நிறைய இருக்கும்னு குளிக்கவும் முடியாதுனு சொன்னார். அதனால இன்னொரு அருவிக்கு போனோம் அங்கே இருபது நிமிஷம் நடக்கனும். அங்கே அருவி பக்கத்தில் விட்ட ஜீப் டிரைவர் செம பாஸ்டாக வண்டி ஓட்டினார். பிராணேஷ், ஏன் இவ்வளவு வேகமா ஓட்டுறீங்க என்று கேட்டதற்கு அந்த டிரைவர் தன் எட்டு வருஷ சர்வீஸ்ல் வந்த முதல் கம்ப்ளைன்ட் என்றார்.


அங்கே போற வழியில் தான் ' காரசேவ் கூட சண்டை போட்ட எங்கள் உரசல் நாயகன்' அரவிந்த் அவர்கள் மீது ஒரு சின்ன அட்டை சாக்ஸ்ல ஏறிடுச்சு. கத்தியால அதை சிதைசிட்டாறு. அருவியை கண்டதும் செம குஷி. ஆனா பெரிய சின்ன பாறை எல்லாம் காலை பதம் பார்த்தது. நல்லா குளியல் போட்டோம். திரும்பவும் ரிட்டன் வரும் போது ஷார்ட் ரூட் கொஞ்சம் டேஞ்சர்ஆக தான் இருந்தது.3 மணி வாக்கில் திரும்பவும் ரூம் வந்தோம். நல்ல சாப்பாடு.மொத நாள் ரசம் தான் கொஞ்சம் நல்லா இல்லை. அப்புறம் ரெஸ்ட் எடுக்காம கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சோம்.நான் எப்பவும் போல டக் தான். பாலை தூக்கி அடிச்சா அவுட்னு சொல்றாங்க நான் என்னங்க பண்றது. அப்புறம் நைட் கேம்ப் பைர்.. பாட்டு பாடி செம கலாட்டா. அன்னைக்கு நைட் சுதந்திர தினத்தை கொண்டாட என்று நிர்மல் போட்டு வந்த இங்கிலாந்து டி.ஷர்ட்டை எரிப்பதில் பிரசன்னா மற்றும் அவரது குழு மிகவும் ஆர்வமாக இருந்தது. அப்புறம் சுதந்திரம் பத்தி ரெண்டு ரவுண்ட் பேசினதில் இருந்து யாருமே கொண்டாடவில்லை. 'காரசேவ்' தனா சைட் டிஷ்சை தொடவே இல்லை என்பதை இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.


இரண்டாவது நாள்:

("காராசேவ் வீரன்" அரவிந்த், காட்டு சாரதா, காமேஷ்)அனைவராலும் வெள்ளை மற்றும் வைட்டி என்று அழைக்கப்படும் அருண் அவர்களை முதல் நாள் மாலையே அட்டை கடித்து இருந்தது. அருணுக்கு ரத்தம் நிக்கவே இல்லை.நள்ளிரவு மூணு மணிக்கு தான் நின்னதாம். காலையில் ட்ரெக்கிங்க்கு கிளம்பினோம்.அங்கே தான் எங்களுக்கு காட்டிகல்லு மலையை காட்டினார்கள். செம செம...!!

நாங்கள் தங்கும் இடத்தில் இருந்து ஜீப்பில் போவாதே மிக பெரிய ஆனந்தம். ஏதோ ரோலர் கோஸ்டரில் செல்வது போல் இருக்கும். நண்பர் காட்டு சாரதா அவர்கள் அந்த ஜீப்பில் ஓட்டு கேட்டு, கமாண்டர் ஆபரேஷன் செய்தது, வழியில் பார்ப்பவை அனைத்தையும் காட்டு பைக், காட்டு ஆயானு சொல்லிட்டு வந்தான்.
ட்ரெக்கிங் என்றதும் கொஞ்சம் அட்டை பயம் இருந்தது. 8 கிலோ மீட்டர் ட்ரெக்கிங் தேர்ந்து எடுத்தோம். பள்ளலர்யா கோட்டையை பார்க்க மலை ஏறி செல்ல வேண்டும்.என் பின்னாடி நைரோபி மணி அவர்கள் துணையாக வந்தார். நண்பன் காமேஷ் உதவியோடு மலையேறி சேர்ந்தேன். தனாவுக்கு என்னைவிட நாக்கு கொஞ்சம் அதிகமாவே தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனா இந்த மாதிரி இயற்கை அழகை ரசிக்க எவ்வளவு தூரம் வேணும்னாலும் நடக்கலாம். தீடிர்னு லைட்ஆ வெயில் அடிக்கும் அப்புறம் மேகமூட்டம் இருக்கும். நாங்கள் கோட்டையை அடைந்த கொஞ்ச நேரத்தில் மழை பெய்து எங்கள் வியர்வையை நினைத்தது.
சைக்கோ சாமியார் சாய் அவர்கள் மலை மீது மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பார்த்தவுடன் குஷி ஆகி கத்த ஆரம்பித்து விட்டார் நானும் வைட்டியும் டென்ஷன் ஆகிட்டோம். எங்கே மாடு மிரண்டுற போதுன்னு. கொஞ்ச நேரம் கோட்டையில் (வெறும் சிதைந்த மதில் சுவர் தான்) ஓய்வு எடுத்து மீண்டும் மலையை விட்டு இறங்க ஆயுத்தமானோம். மலை இறங்கவுது கொஞ்சம் ஈஸி தான். நடுவில் ஒரு இடத்தில் வந்த தண்ணீர் மிகவும் அருமை.திரும்பவும் வந்து மதிய உணவு உண்டோம். ஏதோ அக்கி ரொட்டினு சொன்னாங்க நானும் மூணு வாங்கிட்டேன் பார்த்தா ஒண்ணு தின்னாலே வயிறு புல் ஆகிடுச்சு.அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு ரசம் விட்டு சாதம் சாப்பிட்டேன். மீண்டும் கொஞ்ச நேரம் ரெஸ்ட். அப்புறம் சன்செட் பாயிண்ட் போனோம்..உண்மையிலே செம... அங்கே எந்த விதமான அட்டை பூச்சியும் இல்லை. சாயங்காலம் விடுதிக்கு வந்ததும் நண்பர் சேர்மன் வினோத்துக்கும் ராஜேஷ்க்கும் பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் சமரசத்துக்கு வந்ததாக கூறினார்கள். வினோத் பேச்சு வார்த்தையின் போது குண்டு வெடித்ததாக பிராணேஷ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. (எதுவும் புரியலையா..?? அவங்க அவங்களுக்கு தான் புரியும்...)
இரவு டின்னர் முடித்து அங்கிருந்து ஜீப்பில் பஸ் ஏற ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். அங்கே மீண்டும் என்னையும், நிர்மல் மற்றும் நைரோபி மணியையும் கலாய்க்க ஆரம்பித்தனர். அந்த ஸ்பாட் செம காமெடி.மாத்தி மாத்தி கலாய்ச்சு வயிறு வலி வந்திருச்சு. அங்கிருந்து பஸ்ஸில் பெங்களூர் கிளம்பினோம். காலை ஆறு மணிக்கெல்லாம் பெங்களூர் வந்தடைந்து லால் பாக் எக்ஸ்பிரஸ் புடிச்சு சென்னை வந்து சேர்ந்தோம்...ரொம்ப பீல் பண்ண இடம்னா அது லால் பாக் எக்ஸ்பிரஸ் சீட் எல்லாருக்கும் ஒண்ணா கிடைக்கல. இருந்தும் கொஞ்சம் கலாய். அரவிந்த் கண்டிப்பா இந்த ட்ரெயின் பயணத்தை மறக்க மாட்டான்னு நினைக்கிறேன். அனைவரும் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம்.நீங்களும் இந்த இடத்துக்கு செல்ல வேண்டுமானால் காண்டக்ட் செய்யவும்....
GURUDEV B.N. GOWDA (08263216660)


நன்றி
ஜெட்லி...(சரவணா...)
14 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mm enjoy

Dhanavenkatesh said...

Aarumai nanbare..... Miga vum Aarumai ah ka namathu payanatthai varalaru(History) aah ki ullir.. E ni varum santhathi E nar therinthu purinthu magila yemathu vazhtukkal

துபாய் ராஜா said...

நண்பர்களோடு சென்று பார்க்க வேண்டிய இடம்தான். பயணத்தின் போது நடந்த சம்பவங்களை தொகுத்திருப்பது நன்றாக உள்ளது.

Prasanna said...

மனதில் இருந்து அழிக்க முடியாத பயணம் இது. நமது அனுபவங்களை மிக்க அருமையாக தொகுத்த சரவணா (கம்போத்ஸ்) க்கு நன்றி.

Manivel said...

சூப்பரா சொல்லி இருக்கர மச்சி..

Siva's said...

interesting....

sarada prasad said...

Great macha. Very good description . It took half an hour to complete reading this blog. Very happy to get remembered all these thing. these two days are sweet memories in my life. Guys be ready for one more trip soon

Aravind said...

Really a very good trip. Thanks machan for a wonderful blog. Keep up your good work.

Dinesh said...

arumai..neenga sonna vidham romba nalla irunduchu..ipove anda edathuku poganum pola iruku..season lam iruka illa any time pogalama?

ஜெட்லி... said...

nandri...nandri...

@dinesh

april may angae peak nanbarae....

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம். இன்னும் கொஞ்சம் படங்கள் சேர்த்திருக்கலாமோ...!

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு ஜெட்லி.

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

இந்த வாரம் குதிரமுக் - ஹொரநாடு காரில் போகிறேன் அதற்காக கூகுள் பண்ணபோது இந்த பதிவு கிடைத்தது.

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

இந்த வாரம் குதிரமுக் - ஹொரநாடு காரில் போகிறேன் அதற்காக கூகுள் பண்ணபோது இந்த பதிவு கிடைத்தது.