இது வழக்கமான தமிழ் சினிமா இல்லை....பாட்டு இல்லை கமர்சியலா எதுவுமே இல்லை. கணபதிராம் தியேட்டர் புல்லா என்னை மாதிரி இளைஞர்கள் படை
எடுத்து வந்து இருந்தாங்க.இந்த படத்தோட விளம்பரத்தை ரெண்டு வருஷம்
முன்னாடி பார்த்ததா நினைவு.... ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷரப் நடிக்கிறார்னு
சொன்னாங்க... அவரை நான் சின்ன வயசில ரங்கீலா படத்தில ஊர்மிளாவை
மோப்பம் பிடிக்கும் போது பார்த்ததா நினைவு...இதுலயும் கிழட்டு சிங்கம்பெருமாள் ஆக நல்லாவே மோப்பமும் பிடிக்கிறார் நடிப்பிலும் அசத்துறார்.
அடுத்து பசுபதியாக சம்பத்....எனக்கு என்னவோ இவர் தான் படத்தோட ஹீரோ
மாதிரி தெரியிறார். காரணம் நான் பார்த்த இருபது வருஷ சினிமாலா கடைசில ஜெய்ச்சவங்க தானே ஹீரோ. சப்பையாக ரவிகிருஷ்ணா...அல்வா மாதிரி
சாப்டுறார்..யாரைன்னு படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்க...யாஸ்மின் மற்றும்
ரவி கிருஷ்ணா வரும் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்குது...சீக்கரம் சீனை
முடிச்சுட்டு அடுத்ததை போடுங்கனு சில பேர் கத்தவும் செய்ஞ்சாங்க.
ஒரு வேளை அதுக்கு காரணம் ரவிகிருஷ்ணாவோட இனிமையான குரலா
இருக்குமோ....??
கதை ஒரு நாள்ல நடக்குது. படத்தில ஸ்பெஷல் என்னனு பார்த்தா தெளிவான
வேகமான திரைக்கதை தான். முக்கியமானது யுவனின் பின்னணி இசை.
அப்புறம் வசனம் ரொம்ப இயல்பா இருக்கு...சம்பத்தும் கஜபதியும் நடக்கும் போது வரும் பின்னணி இசையும் காட்சியும் என்னை கவர்ந்தது. வெயில் படத்தில் நடித்த அந்த பையனும் அவன் அப்பாவுக்கும் ஆனா காட்சிகள் நல்லா இருந்தது... பையன் பேசும் வசனம் ஒவ்வொன்றும் நச்...அஜய்ராஜ் அவர் பங்குக்கு நன்றாக பண்ணி இருக்கிறார்.
காமெடிக்குனு தனி ஆள் இல்லை அவங்க பேசுற சில வசனங்களே காமெடிஆ
இருக்கும். சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போகும் செக்போஸ்டில் போலீஸ் செக் பண்ணும் காட்சியும் வசனமும் உதாரணம். குறி சொல்பவராக ஒரே காட்சியில் வரும் பைவ் ஸ்டார் கிருஷ்ணா காமெடி நன்றாக இருந்தது.ஜாக்கி மனேரிசம்னு பேர்ல அப்ப அப்ப இளிக்கிறார்.
ஆரண்ய காண்டம் கண்டிப்பா டைம்பாஸ் படம் தான். ஆனா குடும்பத்தோட போறதுக்கு ஏத்த படமில்லை. காரணம் ரத்தம், அசிங்க வார்த்தைகள். தியேட்டர் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் மிக்சிங்ஆ தான் இருந்தது. எனக்கு படம் பிடிச்சுருக்கு ஒரு சில சீன்கள் தவிர. வித்தியாசமான மேகிங் மூலம் நம் மனதை கொள்ளை அடிக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.
தியேட்டர் நொறுக்ஸ்:
# ஒரு காட்சியில் ரவிகிருஷ்ணாவும் யாஸ்மினும் கொஞ்சம் நேரம் படுக்கையில் உட்கார்ந்து அமைதியாக இருப்பார்கள்....இங்கே பொறுமை தாங்க முடியாத நம்ம ஆள்..."ஏதாவது பண்ணுங்க இல்லை கதையாவது சொல்லுங்க..."னு டென்சன் ஆயிட்டாரு.....
உங்கள்
ஜெட்லி...(சரவணா...)
5 comments:
நல்ல விமர்சனம்... நன்றி
"என்னை மாதிரி இளைஞர்கள் படை
எடுத்து வந்து இருந்தாங்க"
ha ha ha Good Joke... Anyways good review Jetli..
//நான் சின்ன வயசில ரங்கீலா படத்தில ஊர்மிளாவை
மோப்பம் பிடிக்கும் போது பார்த்ததா நினைவு//
Good memory power !!
:-)
அப்ப பாத்துடலாம்
Post a Comment