Saturday, April 2, 2011

நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை....!!


நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை....!!




நஞ்சுபுரம் நான் ஏன் போனேன் அப்படின்னு பார்த்தீங்கனா படத்துக்கு போய் ரொம்ப நாள் ஆச்சே ஏதாவது படத்துக்கு போவோம்னு போனோம். உண்மையிலே செம படம். இது வரைக்கும் தமிழ் சினிமால இல்ல இந்தியா சினிமால இல்ல இல்ல உலக சினிமால கூட இப்படி ஒரு படம் வந்தது இல்ல..அப்படி என்ன படத்துல ஸ்பெஷல்னு கேட்குறீங்களா??
படத்தோட தயாரிப்பாளர் ப்ரீத்த.எஸ்(ஹீரோவின் மனைவி) அவங்களுக்கே OUR SINCERE
THANKS னு படம் ஆரம்பிக்கர முன்னாடி சொல்லிகீறாங்க...ரெண்டு மணி நேர
படத்துக்குள்ள தேங்க்ஸ் சொல்றதே பத்து நிமிஷம் ஓடுதுனா பாருங்க...அப்படியே
என் கூட பால்கனியில் படம் பார்த்த பதிமூணு பேருக்கும் தேங்க்ஸ் சொல்லிருந்தா
சந்தோசமா இருந்து இருக்கும்...!!


என்ன கதை...


நஞ்சுபுரம்னு ஒரு ஊர்.... அங்க பண்ணையார் பையனா ராகவ் படத்தின் இசை அமைப்பாளரும் இவரே... மோனிக்கா தாழ்ந்த ஜாதி பெண்... அப்புறம் என்ன லவ்.... மேட்டர்னு படம் போகுது...மோனிக்கா குளிக்கிறத ராகவ் எட்டி பார்த்துட்டு சாரி ரசிச்சு பார்த்துட்டு இருக்கும் போது ஒரு நல்ல பாம்பு மோனிகாவை மட்டும் எதுக்கோ சேஸ் பண்ணுது அங்க வந்து ராகவ் பாம்பை மிதிச்சி ஹீரோயிசம் பண்றனு பாம்பை தப்பிக்க விட்டுறார்.... அடிச்ச பாம்பு பழி வாங்க வரும்னு நாப்பது நாள் ராகவை ஒரு பரண் போட்டு ஏத்தி விட்டுறாங்க....அப்புறம் என்னாச்சுனு நீங்க எங்கே வேணும்னாலும் பார்த்துக்குங்க... பார்ப்பீங்க..??


இந்த படத்தோட சில காட்சிகள் டி.வி.யில் பார்த்தப்ப இந்த படத்துக்கு போகனுமானு
யோசிச்சேன்....ஒளிப்பதிவு எல்லாம் ஒரு மாதிரி இருந்தது...ஏதோ தனியா ஒட்டி வச்ச
மாதிரி...ஆர்.ஆர்ல ராகவ் கொஞ்சம் வித்தியாசமா பண்ணி இருந்தாலும் காட்சிக்கும்
இடத்துக்கும் ஒத்து வரல...ஒரு பாட்டு நல்லா இருந்தது அவர் அந்த பரண் மேல ஏறும்
போது வரும் பாட்டு...



படத்தோட சில வசனங்கள் ரொம்ப கேவலமா இருந்தது...சில காட்சிகளும் கூட...நாம
தின்க் பண்றது ஸ்க்ரீன்ல வரும்...ராகவ் நடிகரா நல்லா பண்ணி இருக்கார்..கடைசியில்
பாம்பை பார்த்து பயப்படும் காட்சிகள் எல்லாம் சூப்பர்.அப்புறம் அந்த பாம்பு கடி
வைத்தியர் சொல்லும் ராஜா கதை எல்லாம் கொஞ்சம் இண்டரஸ்ட்ஆ இருந்தது...
படம் பார்க்கும் போது நிறைய கேள்வி வந்துக்கிட்டே இருக்கு...அதுக்கெல்லாம் இடம்
கொடுக்காம இன்னும் சுவாரசியமா பண்ணி இருந்தா நல்லா இருந்து இருக்கலாம்...



படத்துல பாம்பை காட்டறேன்னு சொல்லி என்னை மாதிரி சின்ன பசங்களை ஏமாத்தி
புட்டாங்க மக்கா... நானும் பரிசல்ல ஏறும் போது அப்ப பாம்பு இப்ப பாம்பு கூட்டம் வரும்னு பார்த்தா ஒரு புண்ணாக்கும் வரல...போஸ்டர்ல பண்ண கிராபிக்ஸ் வேலையே படத்திலும் பண்ணிருந்தா தான் என்ன......


நஞ்சுபுரம் - நஞ்சபுரம்.



தியேட்டர் நொறுக்ஸ் :

# கணபதிராம் தியேட்டர்ல தான் இந்த படத்தை பார்த்தேன்....பால்கனியில் ஒரு பதிமூணு பேர் இருந்து இருப்போம் ...கிழே ஓரளவுக்கு கூட்டம் இருந்தது...

# படத்தில ஒரு மியூசிக் அப்போ அப்போ பாம்பு போது வரும் ஏதோ சமோசா...சமோசானு பயங்கரமா...அந்த மியூசிக் இன்டர்வல் விடும் போது போட்டப்ப தான் லைட்டா கண்ணு கட்டனது முழிப்பு தட்டிச்சு !!

# கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இருந்தா FAMILY AUDIENCE கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு இருந்தாங்க...

பாம்பு கடிக்க வரும்னு சொல்ற நாப்பது நாள் வேற ஊருக்கு போக வேண்டியது தானே..??

ஏன் அவங்க வீட்டாண்ட பரண் கட்ட வேண்டியது தானே எதுக்கு காட்டு பக்கத்தில் கட்டுறாங்க..??னு

சரமாரி கேள்வி...


# படம் முடிச்சுட்டு வரும் போது ..." ஒரு வாரம் சீரியல்க்கு எடுத்ததை மொத்தமா படமா ரீலீஸ் பண்ணிட்டாங்க" னு பொலம்பிட்டு போனார்....



மேலும் பல பேருக்கு இந்த விழிப்புணர்வு சென்று அடைய உங்கள் பொன்னான வாக்கை அளிக்குமாறு

தாறு மாறாக கேட்டு கொள்கிறேன்....


உங்கள்

ஜெட்லி...(சரவணா...)


16 comments:

Chitra said...

அப்புறம் என்னாச்சுனு நீங்க எங்கே வேணும்னாலும் பார்த்துக்குங்க... பார்ப்பீங்க..??

......ம்ஹூம்... அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ண மாட்டோம்.

Chitra said...

# படம் முடிச்சுட்டு வரும் போது ..." ஒரு வாரம் சீரியல்க்கு எடுத்ததை மொத்தமா படமா ரீலீஸ் பண்ணிட்டாங்க" னு பொலம்பிட்டு போனார்....


......நொந்தபுரம் ?????? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

Chitra said...

ரொம்ப நாள் கழிச்சு பதிவு/விமர்சனம் எழுதுறீங்க...... அடிக்கடி எழுதுங்க.....
Welcome back! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன மாமூ நான் நேத்தே சொன்னேனே பவர் ஸ்டார் நடித்த லத்திகா போன்னு. கேட்டியா?

Speed Master said...

// படம் முடிச்சுட்டு வரும் போது ..." ஒரு வாரம் சீரியல்க்கு எடுத்ததை மொத்தமா படமா ரீலீஸ் பண்ணிட்டாங்க" னு பொலம்பிட்டு போனார்....


ஹி ஹி

ஒரு சந்தேகம்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post.html

hasan said...

ha ha ha (நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை....!!) ha ha ha ha.............

Harish Kumar said...

Boss Namakku en intha risk ellam ?? Anways Good Mokkai !!! Expect frequent posts from you..

ஜெட்லி... said...

ஆதரவுக்கு நன்றி....

சிநேகிதன் அக்பர் said...

செம விமர்சனம்.


ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருப்பாங்க போல.

DRACULA said...

hello boss enna blog pakkam kanom apparam neenga mattum thaniya poneengala illa annium kootithu poneengala

ஜெட்லி... said...

இப்போலாம் தனியா எங்கையும் போகிறது இல்ல...

Unknown said...

என்ன பண்றது.... நாய்க்கு வாக்கப்பட்டா குரைச்சு தான ஆகணும்.... உன்ன கல்யாணம் பண்ணின பாவத்துக்கு இந்த கொடுமையெல்லாம் அந்த புள்ள பாக்கணும்னு தலை எழுத்து.... என்ன கொடுமை சரவணன் இது...

ஜெட்லி... said...

ரைட் அண்ணே

Unknown said...

apparam evalo adi vanganeega 10 or 20 illana innum jastia boss enna nanum koodia seekiram uncle aga poren veetula ponnu pakkuranga so boss ungalluku experience illa adhan

Unknown said...

boos naan than dracula idhu teriyama vandhuchu

ஜெட்லி... said...

அதெல்லாம் வெளியே சொல்ல கூடாது யுவனேஷ்.....
வாழ்த்துக்கள்....நீங்க தான் டிராகுலானு தெரியும்..