Monday, March 14, 2011

பவர் ஸ்டார் அழைக்கிறார் வாரீர்!! வாரீர்!! வாரீர்!!

பவர் ஸ்டார் அழைக்கிறார் வாரீர்!! வாரீர்!! வாரீர்!!


(முன்குறிப்பு :இந்த கட்டுரையில் இருக்கும் படங்களை பார்த்து உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் சத்தியமா நான் பொறுப்பல்ல....!!)வணக்கம்ங்க...ரொம்ப நாள் ஆச்சு ப்ளாக் பக்கம் வந்து...படம் பார்க்கறது கொஞ்சம்
குறைஞ்சு போச்சு... முன்னாடியெல்லாம் FDFS பாக்கும் போது படம் மொக்கையா
இருந்தா பிரச்சனை இல்லை, ஆனா இப்போ மொக்கை படம்னு தெரிஞ்ச பிறகு
எப்படி போறதுனு போறது இல்லைங்க."டேய் நீ மொக்கை படம்னு தெரிஞ்சா
போக மாட்டியா??" அப்படின்னு நீங்க கேட்கறது புரியுது...ப்ரீயா விடுங்க..
அது அப்போ இது இப்போ...வாடா படத்துக்கு அப்புறம் எந்த படத்துக்கும் ப்ளாக்ல விளம்பரம் பண்ணல...
அந்த அதிஷ்டம் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் நடிச்ச லத்திகா படத்துக்கு
கிடைச்சுருக்கு. இந்த படம் கண்டிப்பா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்
காரணம் அபிராமி ராமநாதன் ரீலீஸ் பண்றாரே...ஹீ ஹீ...

படத்துல நம்ம பவர் ஸ்டார் போலீஸ்காரரா வர்றார். சண்டை கட்சிகள்
எல்லாம் பயங்கரமா இருக்க வாய்ப்பிருக்கு. ச்சே என்ன கொடுமை பார்த்தீங்களா
படத்தோட ட்ரைலர் எங்கையுமே கிடைக்கில..கிடைச்சு இருந்தா இன்னும்
நல்லா இருந்து இருக்கும்....


நமக்காக கண்ணீர் விடுவது ரகுமான் தான், பாவம் படம் பார்க்க வரவங்க
கதி என்னனு நினைச்சு கண் கலங்குரரா இல்லை நம்ம பவர் ஸ்டார்
performance பாத்து ஆனந்த கண்ணீர் விடுரரானு படம் பார்த்தா தான்
தெரியும்...அதுக்காகவே நாம படத்துக்கு போறோம்.


இந்த படத்துக்கு வர்ற 18 அலை அலையா திரண்டு வாருங்கள்...மறக்காம
வீட்ல சொல்லிட்டு வந்துருங்க.பாக்கெட்ல வீட்டு அட்ரெஸ் எல்லாம் வச்சுக்குங்க...ஏன்னா பவர் ஸ்டார் performance பாத்துட்டு மயங்கிட்டீங்கனா உங்களை வீட்ல கொண்டு போய் விடனும்ல அதுக்கு தான்.


படம் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோனு பல நாட்டு ரசிகர்கள் தலையை
பிக்க வச்சதே லத்திகா படத்தோட வெற்றியை ஊறுதி செய்ஞ்சுஇருக்கு.
படத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய முகநூலை அடிக்கடி செக்
பண்ணவும்....!!


மாஸ் ஸ்டில்....
நம்ம ஊர்ல கிங் காங் படம் வரலேனு இருக்கிற ஏக்கத்தை தீர்த்து வைக்குமா
லத்திகா??
கரடிக்கு இணையாக....
செமையா இருக்கு ஹலோ நான் சொல்றது பவர் ஸ்டாரோட face expression பத்தி.விரைவில் அடுத்து ரீலீசாகும் ஆனந்ததொல்லை படத்துக்கு காத்திருக்கும்
கோடிகணக்கான ரசிகர்களில் ஒருவன்....


ஜெட்லி...(சரவணா...)


15 comments:

மோகன் குமார் said...

படம் பார்த்து விமர்சனம் எழுதாம என்ன இது சின்ன புள்ளதனமாள்ள இருக்கு!! நல்ல பிள்ளையா படத்த பார்த்துட்டு மறுபடி எழுதணும் ஆமா

rajatheking said...

Partha pin erupara? Ellayo athan epaway eazhuthetar.

சேட்டைக்காரன் said...

//ரொம்ப நாள் ஆச்சு ப்ளாக் பக்கம் வந்து...படம் பார்க்கறது கொஞ்சம் குறைஞ்சு போச்சு...//

அதுக்கும் ப்ளாக்-லே எழுதறதுக்கும் சம்பந்தமிருக்கா? யாரும் சொல்லவேயில்லை...? :-)

மாஸ் ஸ்டில் சூப்பருங்க! இம்புட்டுத்தான் கிடைச்சுதா?

எஸ்.கே said...

முன்னோட்டமே இப்படின்னா! படம் வந்த பிறகு..:-)))

பாலா said...

நான் கூட முதலில் நம்ம டிஆர்தான் ஷேவ் பண்ணிட்டு நடிக்க வந்துட்டாரோன்னு நினைச்சேன். இன்னும் எத்தனை பேர் கிளம்பி இருக்காங்களோ டிஆருக்கு போட்டியாக..

ஜெட்லி... said...

@மோகன் குமார்...வீட்ல படம் பார்க்க அனுமதி கிடைக்கில...
ஸாரி...ட்ரை பண்றேன் அண்ணே...

ஜெட்லி... said...

@rajatheking

அதுவும் சரி தான்...

ஜெட்லி... said...

@ சேட்டைக்காரன்சம்பந்தம் இருக்கு...
வேற நிறைய ஸ்டில் இருக்கு நெட்ல சர்ச் பண்ணுங்க...

ஜெட்லி... said...

@ எஸ்.கே ..

அதோ கதி தான்

ஜெட்லி... said...

@ பாலா ...

ஹ்ம்...ஆமாம்...

! சிவகுமார் ! said...

ஏங்க இப்படி பீதிய கெளப்பறீங்க. இருக்குற கரடி கூட்டம் பத்தாதா?

சிநேகிதன் அக்பர் said...

இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் :)

மோகன் குமார் said...

//வீட்ல படம் பார்க்க அனுமதி கிடைக்கில...//

எல்லாத்தையும் வீட்ல சொல்லிட்டு இருக்கீங்களா? சரி சரி இப்ப தானே கல்யாணம் ஆயிருக்கு போக போக சரி ஆகிடும்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

இவன் கருணாநிதியோட இன்னொரு வாரிசாகத்தான் இருக்கணும்.
இவன் மூஞ்சிய பாக்கும் போதே சுனாமி வருமோன்னு பயம் வருது

பின்னோக்கி said...

அப்பாடி.. படத்தோட வில்லன் டெரர் மாதிரி இருக்காரு. சரி யாரு படத்துல ஹீரோ.. ? அத சொல்லவே இல்லை