Wednesday, December 22, 2010

ஈசன் - லேட்டான பார்வை!!

ஈசன் --- கடைசி பார்வை...!!





நிறைய பேரு மொக்கை, டப்பா மற்றும் சசிகுமார் கிட்ட இருந்து இப்படி
ஒரு படத்தை எதிர்ப்பார்க்கலனு சொன்னதுக்கு அப்புறம் நான் மட்டும் பெருசா என்னத்த எதிர்ப்பார்த்து தியேட்டர்க்கு போய்ட போறேன். சும்மா போனதுனாலே என்னவோ படம் ஓரளவுக்கு நல்லா தான் போச்சு...

பதிவுலகை பொருத்த வரைக்கும் நாம தனி தன்மையா தெரியறதுக்கு இல்ல ஒரு வித ஈகோனு கூட சொல்லலாம் அதாவது ஊரே மொக்கைனு சொல்லும் அதை சூப்பர்னு சொல்லணும்...ஊரே சூப்பர்னு சொல்லும் அதை நாம மொக்கைனு சொல்லணும்....ஆனா நான் அப்படி எதுவும் இங்க சொல்ல வரலை...இது வரைக்கும் மொக்கை படம்னு ஈசன் படத்தை பார்க்காதவங்க சும்மா எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் கண்டிப்பா பிடிக்கும்...தாரளமா ஒரு தடவை பார்க்கலாம்...குறிப்பு : 'தியேட்டர்'ல ஓடுனா...


என்னடா இவன் ஈசன்க்கு சப்போட் பண்ணி பேசுறான்னு பீல் பண்ணாதீங்க....அப்படி எல்லாம் பேச மாட்டேன்...படத்துல எனக்கும் பிடிக்காத சில விசயங்கள் இருக்கு... முதல்ல படத்தோட நீளம்....அப்புறம் அழகப்பன்...அவுருக்கு தான் ரியாக்சனே சரியா வரலையே எப்படி சசி தேர்ந்து எடுத்தார்னு தெரியலை...பல இடங்களில் அவர் பண்ணவுது தான் காமெடியாக இருந்தது எனக்கு....பிளாஷ்பேக் காட்சி ரொம்ப நீளம்...அதே போல் அபிநயா உடனே மாடர்ன் ஆறது எல்லாம் மனதில் ஒட்டவில்லை...அதே போல் கிளைமாக்ஸ்ல மினிஸ்டரை சுட்ட சமுத்ரகனி மேல என்ன அக்சன் எடுத்தாங்கனு காட்டவே இல்லை?? ஒரு வேளை நம்ம இருபது வருஷம் தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி இவன் என்னை சுட்டான் அவன் அவனை சுட்டான்னு மக்கள் புரிஞ்சப்பாங்கனு விட்டுட்டாரோ சசி ??


சரி நல்ல விசயத்துக்கு வருவோம்...அப்படின்னு படத்துல பார்த்தா வெறும்
சங்கையா கேரக்டர்ல வரும் சமுத்ரகனி மட்டுமே...செமையா பண்ணி இருக்கார் மனுஷன்...அப்புறம் சொல்லணும்னா சில வசனங்கள் நல்ல இருந்தது...பாட்டு கொஞ்சம் ஓகே... படம் ரொம்ப மொக்கைனு சொல்ல முடியாது...


தியேட்டர் நொறுக்ஸ் :

# அடையார் கணபதிராமில் தான் இரவு காட்சி படம் பார்த்தேன்....படம்
விட்டுட்டு வெளியே வந்தா ஈசன் போஸ்டர்ஏ காணோம் எல்லாம் மன்மத
அம்பு போஸ்டர் ஆகி போச்சு...அதனால தான் சொன்னேன் பார்க்குறவங்க
இன்னிக்கு தியேட்டர்க்கு போனா தான் உண்டு....ஈசன் ஒரு வாரம் சாரி ஆறு
நாள் படமாகும்னு நான் நினைச்சு பார்க்கல...


உங்கள்...

ஜெட்லி...(சரவணா...)

12 comments:

Anonymous said...

ம்.. சிடில பார்த்துக்கலாம் :)

priyamudanprabu said...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாட்டுனியா?
மாட்டுனியா?
மாட்டுனியா?
மாட்டுனியா?
மாட்டுனியா?
மாட்டுனியா?
மாட்டுனியா?
மாட்டுனியா?
மாட்டுனியா?

கிருபாநந்தினி said...

\\பதிவுலகை பொருத்த வரைக்கும் நாம தனி தன்மையா தெரியறதுக்கு இல்ல ஒரு வித ஈகோனு கூட சொல்லலாம் அதாவது ஊரே மொக்கைனு சொல்லும் அதை சூப்பர்னு சொல்லணும்...ஊரே சூப்பர்னு சொல்லும் அதை நாம மொக்கைனு சொல்லணும்// ஏங்ணா... இப்படியெல்லாமா ரகசியங்களைப் போட்டு உடைக்கிறது! :)

தேவன் மாயம் said...

ஓகே! ஓகே!

பாலா said...

நண்பரே அந்த கிளைமாக்ஸ் காட்சியில் என்னுடைய யூகம்.

அமைச்சரின் கையாள் சுயநலத்துக்காக அவர் மகனை கடத்த, அமைச்சருக்கும் கையாளுக்கும் நடந்த சண்டையில் அமைச்சர் அவனை போட்டுத்தள்ள, இடையில் தாக்கப்பட்ட சமுத்திரக்கனி தற்காப்புக்காக அமைச்சரை சுட்டார் என்று கேசை முடித்திருப்பாரோ?

ஜெட்லி... said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாட்டுனியா?//


என்ன ஒரு சந்தோசம்

ஜெட்லி... said...

@ கிருபாநந்தினி ...


அட அது எல்லாருக்கும் தெரியும்ங்க ....

ஜெட்லி... said...

@ பாலா



உங்க யுகம் சரிதான் என்று நினைக்கிறேன்....
இப்படியே பல காட்சிகளை சசி வைத்து இருந்தால் படத்தின் நீளம்
குறைஞ்சு இருக்கும்(அக்காவை இடித்தவனை வெளுக்கும் காட்சி,
ரேப் சீன்)...நான் சீக்கரம் வீட்டுக்கு போய் இருப்பேன்...!!

Best Online Jobs said...

100% Genuine & Guarantee Money Making System.(WithOut Investment Online Jobs).

Visit Here For More Details :

http://bestaffiliatejobs.blogspot.com/2010/12/read-articles-to-earn-money.html

பாலா said...

எங்கள் ஊர் ஆபரேட்டர் மிக திறமையான எடிட்டர். திரும்ப ஒரு தடவை பார்த்தபோது(என்னே தைரியம்)நீங்கள் சொன்ன காட்சி உள்பட பல காட்சிகள் இல்லை.படம் இரண்டரை மணி நேரம் ஆனது.

Jana said...

Happy New Year 2011