Friday, September 17, 2010

நல்லா கேட்காரங்கயா டீடெயிலு.....!!

ஓசி இப்போ இல்லை ஈசி....!!

நாமும் எத்தனை நாள் தான் பழைய செல் நம்பர் வச்சிக்கிட்டே அலையறது
புதுசா செல் நம்பர் மாத்தலாம்னு பார்த்தா துபாயில் இருந்து எப்போதாவது
சென்னை வரும் நண்பன் "நீ மட்டும் தான்டா நம்ம குரூப்ல இன்னும் நம்பர் மாத்தாம இருக்க...உன் செல் நம்பர் என் மனசில் அப்படியே இருக்குனு..." பிட் போட்டவுடன் நானும் நம்பர் மாத்தும் எண்ணத்தை கைவிட்டுவிடுவேன்...


ஆனா இந்த தடவை அப்படி ப்ரீயா விடறதா இல்லை காரணம் எங்க வீட்டு
பக்கத்தில் இருக்கும் பையன் ஒருவன் அடையாரில் ஒரு கடையில் ப்ரீ
சிம் கார்டும் கூடவே நூப்பது ரூபாய் டாக் டைமும் தருகிறார்கள்,உங்க லைசன்ஸ் ஜெராக்ஸ் ரெண்டு போட்டோ போதும்னு சொன்னான்...
அதுவும் இல்லாம நாங்கெல்லாம் வாரம் வாரம் ஒண்ணு வாங்கி
டாக் டைம் பேசிட்டு தூக்கி போட்டிருவோம் என்று எக்ஸ்ட்ரா ஐடியா
வேறு கொடுத்தான். ரைட் நமக்கு தூக்கி போடுற ஐடியா இல்லனாலும்
சும்மா தானே தரான் நாமும் ட்ரை பண்ணுவோம் என்று நப்பாசையில்
லைசன்ஸ் ஜெராக்ஸ் எடுத்து கிளம்பினேன்.

அந்த கடையிலே போய் குறிப்பிட்ட நிறுவனத்தின் கார்டு கேட்டேன்...
உங்க லைசன்ஸ் ஜெராக்ஸ் கொடுங்க என்று வாங்கினான் கடைக்கார
பையன். "ஒரிஜினல் லைசன்ஸ் கொடுங்க" என்று கேட்டான். கொடுத்தென்.
"ஜெராக்ஸ்ல உங்க மூஞ்சு கொஞ்சம் கருப்பா விழுந்துருக்கு சரியா
தெரியலை..." என்று இழுத்தான். "நான் என்ன அஜித்குமார் கலரா..
இருக்கறது தானே விழும்" என்று மனசுக்குள் நினைத்து கொண்டேன்.
"போட்டோல இருக்கறது நீங்க தானா??" என்று ஒரு கேள்வி கேட்டான்...
"நான்தான்ப்பா.." என்றேன் ஒரு வித எரிச்சலில். "நீங்க பக்கத்து பில்டிங்ல போய் ஜெராக்ஸ் எடுங்க தெளிவா விழும்.."என்றான். "அப்படியா என்
போட்டோவை கொடுங்க..." என்று வாங்கி கொண்டு கிளம்ப ரெடி
ஆனேன்..இனிமே ஒ.சி.ல தரான்னு மட்டும் எங்கையும் போய்ற
கூடாதுனு ஒரு முடிவு எடுத்தேன். அப்போ என் பக்கத்தில் ஒரு
நாப்பது ப்ளஸ் வழுக்கை ஆசாமியும் லைசன்ஸ் ஜெராக்ஸ் எடுத்து
வந்திருந்தார். அந்த போட்டோவை பார்த்த பையன் "போட்டோவில்
யாருங்க... போட்டோல 'முடி'லாம் இருக்கு...." என்று அந்த மனிதரிடம்
பேச்சுவார்த்தை தொடங்கியது.....


இதை தான் சொல்வாங்க அப்பாவி கிட்ட ஆயிரம் கேள்வி கேப்பாங்க...
ஆனா தீவிரவாதி பக்காவா வந்து வாங்கிட்டு போவான் அவனை விட்ருவாங்க...


கண்டிஷன் அப்ளை.....(CONDITION APPLY )


பேப்பர், புக்னு எதை திறந்தாலும் கலர் கலரா விளம்பரம்...ஒரு போன்
வாங்கினா ரெண்டு போன் ப்ரீ, ஒரு சட்டை வாங்கினா நாலு சட்டை
ப்ரீ, போன வாரம் கல்லூரி பசங்களுக்கு இனிது இனிது படத்துக்கு ஒரு
டிக்கெட் எடுத்தா இன்னொரு டிக்கெட் ப்ரீ...அப்படின்னு ஏகப்பட்ட
ப்ரீ....சில இலவச விளம்பரங்கள் உண்மையானத இருக்கலாம்...
(எ.கா) நம்ம இனிது இனிது படத்துக்கு ஒண்ணு வாங்கினா இன்னொரு
டிக்கெட் ப்ரீ வேணும்னா கண்டிப்பா கொடுத்து இருப்பாங்க...ஏன்னா படம்
அப்படி... ஆனா எல்லா விளம்பரங்களும் உண்மையா இருக்கறது
இல்லை என்பது தான் உண்மை.


வேவ்டேல்னு ஒரு செல் கடை...இப்போ கை மாறி நிறைய இடத்தில்
மூடிட்டாங்க என்பது வேறு விஷயம். ஆனால் அவர்கள் ரெண்டு வருடம்
முன்பு வரை செம பீக்கில் இருந்தார்கள் என்பது மட்டும் உண்மை. அதுக்கு
காரணம் விளம்பரம் மட்டுமே. நான் போன வருஷம் செல் வாங்க ஆறு
மாசமா தேடும் போது அவர்களின் ஒரு விளம்பரம் பார்த்து அடையாரில்
உள்ள கடையில் சென்று விசாரித்தேன். அந்த விளம்பரம் என்னன்னா
"செல் போன் வாங்கினா மூணு நாள் டூர் இலவசம்" என்பதே.

கடைக்கு போய் முதலில் ஒரு சோனி செல் பற்றி விசாரித்தேன்...
நான் வாங்க ரெடியாக இருந்தேன். சரி ஆபர் என்னனு கேட்டேன்..
அதற்கு கடைக்காரன் இந்த செல்க்கு ஒன்னுமில்லைன்னு சொன்னான்.
சரி விலை அதிகமான செல்போன் கேட்டேன். அதற்கு என்ன ஆபர் என்று கேட்டேன்...அவன் இதுக்கும் இல்லை என்றான்... உடனே நான் " சரி அப்ப
அரை பக்கம் விளம்பரம் போட்டு டூர் விளம்பரம் போட்டு இருக்கீங்களே..
எதுக்கு தான் அதை தருவீங்க" னு கேட்டேன்...."அந்த ஆபர் செல்
இப்போதைக்கு ஸ்டாக் இல்லை" என்றான்.சரி என்ன மாடல் செல்னு
கேட்டேன் அதற்கு அவன் ஒரு ஈத்து போன செல் மாடலை கூறினான்.
அப்படியே நன்றி சொல்லி திரும்பி வந்து விட்டேன்.கண்டிஷன்
அப்ளைனாலே அங்கே ஏதோ ஒரு தந்திரம் இருக்கும் என்பது
மட்டும் உண்மை.


மேரி பிரவுன் :

பொதுவாக எனக்கு இந்த பிசா, பர்கர் ஐட்டம் மேல அவ்வளவு விருப்பம்
இல்லனாலும்...எப்பயாவது சாப்பிடுவது உண்டு...ஆனா ஆபர் இருக்குதா
இல்லையான்னு எல்லாம் பார்த்துட்டு போறதில்லை...சமீபத்தில் நீலாங்கரை
மேரி ப்ரௌனில் நானும் நண்பரும் லைட்ஆ சாப்பிட சென்றோம்...ஹாட்
டச் பர்கர் தான் எங்களது விருப்பம் அதே போல் ஆளுக்கு சிக்கன் தொடை
கறியும் ஆர்டர் செய்தோம்..... அப்போது தான் அவர்களுது விளம்பரம் கண்ணில்ப்பட்டது..அது 350 மேல் சாப்பிட்டால் 54 ரூபாய் மதிப்புள்ள ஹோர்லிக்ஸ் பூட்ள்ஸ்(FOODLES) இலவசம் என்று.....

கஸ்டமர் இஸ் கிங்?? எங்கே??

நாங்க கணக்கு பண்ணி எல்லாம் சாப்பிடல...அப்புறம் ஒரு சிக்கன்
பாப் ஆர்டர் பண்ணோம்....அதெல்லாம் நான் சின்ன வயசில் சாப்பிட்டது
அழகா சின்ன சின்ன உருண்டையாக நன்றாக இருக்கும்..ஆனால் இவர்கள் கொண்டு வந்ததோ போண்டா சைஸ்சில்...ஒரு ஒரு பாப்க்கும் ஒற்றுமை
கூட இல்லை...பில் வந்தது 354 ரூபாய் நண்பன் பே பண்ணி விட்டு வந்தான்..வெளியே கிளம்ப தயாரான போது நண்பனிடம் ஆபரை சுட்டி காட்டினேன்... அவனும் போய் கவுன்டரில் கேட்டான் அதற்கு அவர்களின்
பதில் நாங்கள் சாப்பிட்டது 338 தான்..மீதி வரியாம்...அதனால் உங்களுக்கு
கொடுக்க முடியாது என்று காரணம் சொன்னார்கள்...!!

ஒரு தடவை ஈஞ்சம்பாக்கம் MARRY BROWN இல் சாப்பிட்ட போது
அவர்கள் 220 சாப்பிட்டதுக்கே எதோ ஒரு இங்கிலீஷ் படத்தின்
மொக்கை டிவிடியை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு FOODLES ஒ.சி.யில் கிடைக்கலன்னு கூட வருத்தம் இல்லங்க...
அந்த FRANCHISE MANAGER எப்படி இப்படி ஒரு தெளிவான பதிலை
சொல்வார்னு நான் எதிரிப்பார்க்கல....ஒன்னாவது படிக்கறவனுக்கு
கூட தெரியும் 338 க்கு சாப்பிட்டவன் 350 க்கு சாப்பிட முடியாதா??
அன்னைக்கே நான் முடிவு பண்ணேன் இனிமே MARRY பிரவுன்
பக்கம் கூட பெட், பாய் விரிச்சி படுக்க கூடாதுனு.... அந்த மேனேஜர் கிட்ட
ஒரு கேள்வி தான் கேட்க ஆசைப்படுறேன்... அன்னைக்கு எங்களுக்கு
தர வேண்டிய FOODLES செய்ஞ்சு சாப்பிட்டாங்களா சார்....??..


ஒரு நிமிஷம் இருங்க போன் வருது....

ராஜா : என்ன தம்பி என்ன பண்றீங்க??

ஜெட்லி : சும்மா தான் மச்சி..சிஸ்டம் முன்னாடி இருக்கேன்...

ராஜா : என்ன ப்ளாகா...?

ஜெட்லி : கண்டிப்பா...

ராஜா : சரி நாளைக்கு என் பர்த்டே ட்ரீட்...வந்துடு... பசங்க எல்லாம் வராங்க..

ஜெட்லி : கண்டிப்பா...நீயே அதிசியமா ட்ரீட் வைக்கிற...எங்கேடா??

ராஜா : அடையார் marry brown மச்சி...

ஜெட்லி : ஹ்ம்ம்...நான் marry brown போறது இல்லன்னு முடிவு பண்ணினேன்...நீ கம்பல் பண்றதாலே வரேன்டா...!!

மனதுக்குள்...

சிக்கிட்டான்டா ஒரு அடிமை....!!


உங்களுக்கும் எதுவும் இந்த மாதிரி ஒ.சி.யில் கிடைக்க இருந்தது
கிடைக்காம போய் இருந்தா தாராளமா ஷேர் பண்ணுங்க....
அட...நாம எதாவது பண்ணுவோம் பாஸ்...

ஜெட்லி...(சரவணா...)

26 comments:

Romeoboy said...

இந்த வேவ்டேல் கடைல தங்கமணிக்கு ஒரு போன் வாங்கினேன். 4000 ரூபாய்க்கு மொபைல் வாங்கினா ஒரு பேக்ன்னு அவங்க வெப்சைட்ல இருந்துச்சு, நான் வாங்கின மொபைல் ரேட் 5000 இதுக்கு என்ன கிபிட்ன்னு கேட்டா ஒன்னும் இல்லன்னு சொன்னங்க. ஏன்னு கேட்ட ஸ்டாக் இல்லன்னு சொன்னங்க அப்பறம் மொபைல் பவுச் ஒன்னு தந்தாங்க அதோட ரேட் 10 ருபாய் தான். அசிங்கம திட்டிட்டு வந்தேன், அவங்க கஸ்டமர் கேர்க்கு போன் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணா ஓனே வீக்ல தரேன்னு சொன்னங்க பட் ஒரு வருஷம் ஆகா போகுது ஒரு எழவும் நடக்கல..

என்னது நானு யாரா? said...

ஜனங்களை எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கப்பா!!??

//கண்டிஷன்
அப்ளைனாலே அங்கே ஏதோ ஒரு தந்திரம் இருக்கும் என்பது
மட்டும் உண்மை.//

சரியா சொன்னீங்க தலைவரே! நாம தான் ஜாக்கிரதையா இருக்க வேண்டி வருது. Customers Beware -ன்னு சொல்றாங்கப்பா! நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!!!

Unknown said...

அப்பாடா இடுகை போட மேட்டரே இல்லாம யோசிச்சிட்டே இருந்தேன். இப்போ இந்த மேட்டரை வச்சே ஒரு இடுகை தேத்திருவேன்.. நன்றி ஜெட்லி..

எஸ்.கே said...

அழகா இந்த ஆஃபர் அந்த ஆஃபர்னு போட்டுட்டு கடையில கண்டிஷன்ஸ் அப்ளைனு போட்ருவாங்க. இந்த மாதிரில் ஆபர்கள் உண்மையில் கிடைப்பதேயில்லை. வெறும் கஸ்டமர்களை இழுப்பதற்கான தந்திரம் மட்டுமே!

Chitra said...

அப்புறம் ட்ரீட்ல foodles இருந்துச்சா?

Raju said...

ஹோ காட். இஸ் திஸ் நாட் புனைவு...? நவ் எ டேய்ஸ் ஐ ரீட் ஒன்லி புனைவு மேன்! ட்ரை டு ரைட் புனைவு. ஸோ ஸேட்.
:-((

துளசி கோபால் said...

எனக்கு இங்கே இந்தியாவில் இன்னும்புரியாத பரிபாஷை இந்த சிஸ்டம்!

சிஸ்டத்துக்கு வர முடியலை.
சிஸ்டம் முன்னால் உக்காந்துருக்கேன்....

சிஸ்டம் ...???????

இன்னும் இப்படி எதாச்சும் இருந்தா சொல்லுங்க. போறதுக்கு முன்னால் தெரிஞ்சுக்கறேன்.

vasu balaji said...

ம்கும்! ஆடித்தள்ளுபடில அழுக்கானது இத்துப்போனத வச்சி கோடி கோடியா கல்லா கட்டுறானுவளே. அத விடலாமா?:))

Madurai pandi said...

நிறைய பேரு இப்டி தான் அந்த offer இந்த offer nu நம்பி போய் ஏமாந்து போறாங்க !!! என்னையும் சேத்து தான் சொல்றேன்!!! ஹி ஹி ஹி !!

Anonymous said...

பத்து ரூபா ஆஃபர் கிடைக்கலையாம்.அதுக்காக 350 ரூபாய்க்கு சாப்பிட்டாராம்.அந்த வேதனையை பகிர்ந்துக்கிறாராம்.வேண்டாம் வலிக்குது..அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்வ்..கொஞ்சம் கூட இரக்கமில்லாம எழுதுறாய்ங்க...

ஜெட்லி... said...

@ ♥ RomeO ♥


பகிர்வுக்கு நன்றி....



@ என்னது நானு யாரா


நன்றி....

ஜெட்லி... said...

@ முகிலன்

ஹ்ம்...படிக்கிறேன்...


@எஸ்.கே

இதை மொதல்ல ஒழிக்கணும் பாஸ்...

ஜெட்லி... said...

@ Chitra

அந்த ட்ரீட் மேட்டர் எல்லாம் சும்மா...
ஜஸ்ட் பார் பன்..!!



@ ♠ ராஜு ♠


அண்ணே...புனைவு ரைட் பண்ற அளவுக்கு எனக்கு
விவரம் பத்தாது....
நீங்க ஏதாவது புனைவு பட்டறைனு ஆரம்பிச்சா
கத்துக்க வரேன்ங்க...!!

ஜெட்லி... said...

@ துளசி கோபால்


டீச்சர் ஸாரி டீச்சர்...
அதோ அறியா பையன் தப்பா இருந்தா...
மன்னிச்சு விட்ருங்க...
என்ன பண்றது அப்படியே சொல்லி சொல்லி
பழக்கம் ஆயிடுச்சு..மொதல்ல இந்த சிஸ்டத்தை
மாத்தனும்....!!

ஜெட்லி... said...

@ வானம்பாடிகள்


ஆமாம் ஐயா....
200 ரூபாய் துணியை 400 னு போட்டு அதுக்கு
நூறு தள்ளுபடி பண்ணி விப்பாங்க....




@ மதுரை பாண்டி


அட...நாமெல்லாம் ஒண்ணு பாஸ்....

ஜெட்லி... said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்


தலைவரே...சும்மா ஜாலிக்காக எழுதினது...
இலவச foodles விலை 54 ரூபாய் சரியாக
படிக்கவும்....

// அதுக்காக 350 ரூபாய்க்கு சாப்பிட்டாராம்.
அந்த வேதனையை பகிர்ந்துக்கிறாராம்//

வேதனையா?? சத்திய சோதனைடா சரவணா...

VISA said...

Marry Brown??

I have stopped long back. 1 year before.

Thenammai Lakshmanan said...

கண்டிஷன்
அப்ளைனாலே அங்கே ஏதோ ஒரு தந்திரம் இருக்கும் என்பது
மட்டும் உண்மை.
//

நிஜம்தான் ஜெட்லீ...

அட நாங்க போன வாரம் இஸ்பஹானி மேரி ப்ரவுன் ல சாப்பிட்டமே.. ஆஃபர் இருந்துச்சா அப்போ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present

Unknown said...

அது 20% 'OFF' இல்லைங்க 100% ஆப்பு..

சிநேகிதன் அக்பர் said...

ஏமாத்துறதுல நம்மளை அடிச்சுக்கவே முடியாது...

அத்திரி said...

:))))))))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ullen ayyaa!!!

DRACULA said...

boss nan oru vatti mayajaal maryybrown avan kettu pona chicken koduthu engala vanthi edukka vachuthan inime no marry brown only idly kada ayya only wht u think boss

ஜெட்லி... said...

@DRACULA


கண்டிப்பா ஆயா கடை இட்லி தான் பெஸ்ட்....
தொட்டுக்க கெட்டி சட்னி கொடுத்த வேற எதுவுமே வேணாம் பாஸ்...

மதுரை சரவணன் said...

//இதை தான் சொல்வாங்க அப்பாவி கிட்ட ஆயிரம் கேள்வி கேப்பாங்க...
ஆனா தீவிரவாதி பக்காவா வந்து வாங்கிட்டு போவான் அவனை விட்ருவாங்க...//

நல்ல புலம்பல்..ஒரே அலம்பல்.. வாழ்த்துக்கள்