பாஸ் படத்தை வெள்ளிக்கிழமை நைட் ஷோவே பார்த்தாச்சு...ஆனா
அதை பத்தி எழுத நேரம் கிடைக்கல.... சந்தானம் மீண்டும் கலக்கி
இருக்கிறார். இந்நேரம் எல்லாரும் பார்த்து இருப்பீங்கனு நினைக்கிறேன்...
படம் செம டைம்பாஸ்...ஆர்யா கண்ணாடி மாட்டும் சீனே செம...
நயன்தாரா ஏன் இப்படி ஆகிட்டாங்கனு தெரியல...கொஞ்சம் கிழடு
தட்டிடுச்சுனு தான் சொல்லணும்....
சந்தானம் அண்ட் சுவாமிநாதன் அரியர் எக்ஸாம் காமெடி செம....
ஆர்யா அண்ணனாக வருபவர் பஞ்சு அருணச்சலம் அவர்களின் மகனாம்,
நல்லாவே பண்ணி இருக்கிறார். அதே போல் பால் பாண்டி பாத்திரம்
கூட இன்ட்ரஸ்டிங்....கடைசியில் ஜீவா வருவது லக லக காமெடி....!!
பாட்டு பத்தி சொல்லவே வேண்டாம்...அய்லா என்ற ஒரு பாட்டு தவிர
மீதி எல்லாமே சூப்பர்...
தியேட்டர் நொறுக்ஸ்:
மைனா படத்தின் ட்ரைலர் போட்டார்கள்.... கொஞ்சம் டரியலாக தான்
எனக்கு இருந்தது... கடைசியில் ஒரு வசனம் வரும்..அது...
"லவ் பண்ண லைப் அழகா ஆயிடும்..." என்று வரும்னு நினைக்கிறேன்...
ஆனா பின்னாடி இருந்த நம்ம ஆளு... லவ் பண்ண லைப் நாசமா போய்டும்
என்று கத்தினார்....ஹ்ம்..அவருக்கு என்ன பிரச்சனையோ...!!
துரோகி பார்க்காத கதை....!!
அப்புறம் நேத்து நைட் செம மழை....சரி ஜெயந்தி தியேட்டர்ல துரோகி
பார்க்கலாம்னு ஒரு ஆர்வத்துல போனேன்...செம கூட்டம்...கூட்டம்
எல்லாம் தியேட்டரில் வேலை செய்பவர்களின் கூட்டம் தான், மழையால்
படம் ரத்தானால் சீக்கரம் வீட்டுக்கு போலாம்னு வெளியே காத்துகிட்டு
இருந்தாங்க....பால்கனி டிக்கெட் வாங்க ஒரு ஆள் கூட இல்லை....
கிழே டிக்கெட் வாங்க ஒரு பத்து பேரு இருந்தாங்க அவங்களும் பாஸ்
படத்துக்கு டிக்கெட் கிடைக்காம வந்தவங்க தான்...எனக்கு என்னமோ
அவங்க படம் ஆரம்பிக்கிற மாதிரி தெரியல என்பதால் திரும்பவும்
வீட்டுக்கு வந்து விட்டேன்.....
சரி திங்கள் என்ன படம் போலாம்னு யோசிச்சு யோசிச்சு...துரோகி போலாம்னு தான் பார்த்தேன் ஆனா ஏற்கனவே துரோகம் நடந்தது என்ன?? படம் பார்த்தே பஞ்சர் ஆகி போனதுனாலே ப்ரீயா விட்டுடேன்....
ரெசிடண்ட் ஈவில்....!!
அப்படியே நம்ம பைலட் தியேட்டர் பக்கம் போன ரெசிடண்ட் ஈவில் படம்
ஸ்டில் பார்த்தேன்...அப்படியே வண்டியே நிறுத்திட்டு டிக்கெட் எடுத்து
உள்ளே போய்ட்டேன்...மூணாம் பாகம் ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்ததாக நினைவு... ரெண்டாம் பாகம் சுத்தமா மறந்து போச்சு....இருந்தாலும் படம் செம ஸ்பீட்... மில்லா ஜோவிச் தான் நாயகி...சும்மா பறந்து பறந்து அடிக்கறாங்க...இதில் பத்து பேராக முதல் காட்சியில் வருகிறார்...ஏன் வர்றாங்க எப்படி வர்றாங்கனு எனக்கு புரியலை... இந்த பார்ட் ஜப்பான் டோக்யோவில் ஆரம்பம் ஆகிறது...முந்தைய பார்ட்டில் வந்த ஒரு பெண் இதிலும் வருகிறார் அவருக்கு பழசெல்லாம் மறந்து விடுகிறது....
இருவரும் சிறு விமானத்தில் மீண்டும் அமெரிக்காவை ஒரு ரவுண்ட் அடிக்கிறார்கள்..அங்கு ஒரு ஐந்து பேர் உயிருடன் இருக்கிறார்கள்,...அவர்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் என்பதே மீதி படம்... தமிழ் டப்பிங் என்பதால் நான் 3-D யில் பார்க்க வில்லை... அதில் எனக்கு விருப்பமும் இல்லை... எனக்கு ஒரு சந்தேகம் அது ஏன் இந்த படத்துக்கு தமிழில் பெயர் வைக்கவில்லை?? ஒரு வேளை வரி விலக்கு எல்லாம் இப்போது இல்லையா.... இல்லனா நம்ம ஆளுங்க ரத்த காட்டேரி...இல்ல ருத்ர காட்டேரினு ஏதாவது பேர் வச்சி இருப்பாங்களே......
இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளர் வருவார் செம காமெடி வசனம்...எல்லாமே
டைமிங் காமெடி ஆனால் அவர் நல்லவர் அல்ல... மறதி பெண் அவள் அண்ணனை பார்த்ததும் அவள் அண்ணன் உருகுவான்...உடனே நம்ம தயாரிப்பாளர்...
"என்ன பாசமலர் ரீமிக்ஸ்ஆ...மொதல்ல இங்கே இருந்து தப்பிப்போம்..."
என்று காமெடி வசனத்துக்கு பலத்த கைத்தட்டு....அதே போல் மில்லாவின்
சண்டை காட்சிகளுக்கும் விசில் பறந்தது.... அந்த மாபெரும் பேய் ஒன்றை
அந்த பெண் வீழ்த்தும் போதும் தியேட்டரில் செம விசில்....
அநேகமா பார்ட் 5 , 6 கூட வரும் வாய்ப்பு இருக்கு... எத்தனை பார்ட் வந்தாலும் அதை நாம போய் பார்க்கிறோம்.... நான் ரெசிடண்ட் ஈவில் 4 கேமை நான் எனது play station இல் விளையாடி இருக்கிறேன் அது வேறு மாதிரியான கதை...படத்தில் வருவது வேறு கதை.... கேம் விளையாடுவது செம த்ரில்லிங்ஆக இருக்கும்.....!!
ஜெட்லி...(சரவணா...)
24 comments:
throki
மாமு..ஒழுங்கா துரோகி பட விமர்சனம் எழுதலைன்னா நான் உங்களுக்கு துரோகி ஆயிடுவேன்...
நயன்தாரா ஏன் இப்படி ஆகிட்டாங்கனு தெரியல...கொஞ்சம் கிழடு
தட்டிடுச்சுனு தான் சொல்லணும்....
..... hello, she is only in her 20's . அதுக்குள்ள இப்படி சொல்லிட்டீங்களே ...... பாவம்!
ஆமாங்க.. நயன் சூப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி டொக்கு விழுந்து இருக்கு.
resident evil கேம் ரொம்ப நல்லயிருக்கும். அனிமேஷனும் பக்காவா இருக்கும். படம் பார்க்கணும் கதை மற்ற பார்ட்களோட தொடர்ச்சியான்னு பார்க்கனும்!
long long ago இந்த படத்தின் முதல் பாகத்தை பார்த்தேன், பிறகு வந்த வேறெதையும் பார்க்கவில்லை ...இந்த படத்தை முடிந்தால் பார்கிறேன்
துரோகி, வந்தே மாதரம் விமர்சனம் எழுதாத ஜெட்லியை வன்மையாக கண்டிக்கிறோம் :))
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாமு..ஒழுங்கா துரோகி பட விமர்சனம் எழுதலைன்னா நான் உங்களுக்கு துரோகி ஆயிடுவேன்...
//
அய்யோயோ...தனியா பார்க்க பயமா இருக்குப்பா....
நல்லவர் நீங்க துணைக்கு வந்தா போலாம்...
@ Chitra
படத்தை பார்த்தா உங்களுக்கே தெரியும்....
@பின்னோக்கி
சரி தான்...
@எஸ்.கே
சி.ஜி..உண்மையிலே செம பாஸ்...
பாத்துட்டு சொல்லுங்க
@ டம்பி மேவீ
hmmm...பாத்துட்டு சொல்லுங்க
@ Balaji saravana said...
துரோகி, வந்தே மாதரம் விமர்சனம் எழுதாத ஜெட்லியை வன்மையாக கண்டிக்கிறோம் :))
தலைவரே...வந்தே மாதரம் ரீலீஸ் ஆகல..ஏங்க போய்
பார்க்கிறது.... துரோகி பார்க்க நீங்க ரெடியா...??
//தலைவரே...வந்தே மாதரம் ரீலீஸ் ஆகல..ஏங்க போய்
பார்க்கிறது.... துரோகி பார்க்க நீங்க ரெடியா...??//
எங்கள் தன்மானச் சிங்கம், அஞ்சா நெஞ்சர் ஜெட்லி அவர்களின் தைரியம் எமக்கு கிடையாது என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன் ;)
உங்களிடமிருந்து 'துரோகி' பட விமர்சனத்திற்காக வெயிட்டிங்!
நானும் ரெசிடென்ட் ஈவில் பார்த்தேன்.. நல்லா இருந்துச்சு... முக்கியமா அலுப்பு தட்டாம இருந்துச்சு...
@ Balaji saravana
// எங்கள் தன்மானச் சிங்கம், அஞ்சா நெஞ்சர் ஜெட்லி அவர்களின் தைரியம் எமக்கு கிடையாது என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன் ;)
//
ரைட்...இப்படி உசுபேத்தி உசுபேத்தி ரணகளம் ஆக்குரிங்க....
@Mohan
எங்க ஆயா மேல சத்தியமா நான் துரோகி படத்துக்கு போகமாட்டேன்....
@ஜாக்கி சேகர்
கரெக்ட்ஆ சொன்னீங்க....
பாஸ் கொஞ்சம் நயன்தார கொஞ்சம் டொக்கு விழுதசு என்பது ஊருடி அனா பிரபு தேவ ப்ரேஅஹ் விடல போல அது தன இப்படி கிழவி மேரி தெரயுடு
பாஸ்... செம ஹிட்!
மைனா சூப்பராதானே இருந்தது. அதுல நானும் இருக்கேன்.
@DRACULA
ஏதோ ஒண்ணு சொல்றீங்க ஆனா சரியா புரியலை....
@ஆடுமாடு
மைனா...ட்ரைலர்... ஹீரோ கத்துவது வெட்டுவதுனு, அனாகா பேசுவதும்.
எல்லாம் பல படத்தில் பார்த்த பீலிங்... இருந்தாலும் பிரபு சாலமன் மேல
நம்பிக்கை இருக்கு.... நீங்க வேற இருக்கீங்க கண்டிப்பா பார்ப்பேன்.....
noting man i think prabudeva is not leaving her free u knw wht i mean ;)
@ DRACULA
புரியுது....நல்லா புரியுது....
adhu!! apparam boss eppo next plz boss i need some fun
@ DRACULA
என்ன தலைவா பண்றது....கொஞ்ச நாளா வேலை அதிகம்
ஆயிருச்சு....சீக்கரம் பதிவு போடுறேன்....
Post a Comment