Wednesday, October 26, 2011

ஏழாம் அறிவும் ....போ(தை)தி தர்மரும் ...!!

ஏழாம் அறிவும் ....போ(தை)தி தர்மரும் ...!!

ரெண்டு நாள் முன்னாடி என்னோட FaceBook அப்டேட் இது....

//என்ன கொடுமை சார் இது...ஏழாம் அறிவுக்கு மொதல்ல தீபாவளி அன்னைக்கு ஸ்பெஷல் ஷோனு சொன்னாங்க...அதையும் புக் பண்ணேன்...அப்புறம் 25 தேதி ஸ்பெஷல் ஷோனு
சொன்னாங்க..அதுக்கும் நைட் ஷோ புக் பண்ணேன்....இப்ப என்னடானா ரெண்டு மணிக்கே படத்தை போடுறாங்களாம்.... அதுக்கு பேசாம நாளைக்கு படத்தை ரீலீஸ் பண்ணத்தான் என்ன???//


படம் பார்த்த அப்புறம் தான் புரியுது ஏன் படத்தை ஒரு ஒரு ஷோவா
முன்னாடியே விட்டங்கான்னு....கொய்யலா வெளியே உண்மை
தெரிஞ்சா தீபாவளி அன்னைக்கு மட்டும் தான் படம் ஓடும்னு
முன்னாடியே ரீலீஸ் பண்ணிட்டானுவோ....கதை என்னன்னா
ட்ரைலர் பார்த்தீங்க ல அதே எடிட்டிங் தான் படத்தோட முழு
திரைக்கதையும்...இப்படி ஒரு படத்தை முருகதாஸ் கிட்ட இருந்து
நினைச்சு கூட பார்க்கல...

போதி தர்மர் பத்தி இருபது நிமிஷம் சொல்றாங்க ...பல நூற்ற்றண்டுகள்
முன்னாடியே காஞ்சிபுரத்தில் இருந்து சைனா போய் அங்க மருந்து எல்லாம் கண்டுபிடிக்காரு, குங்பூ கத்து கொடுக்காரு...இதில இருந்து என்ன தெரியுது....
ஒண்ணும் தெரியலையா....சரி விடுங்க...!!அப்புறம் தீடிர்னு முத பாட்டு வருது....
இன்னொரு சூர்யா சர்கஸ்ல வேலை செய்யுறாரு...அங்க சுருதி வாராங்க...
சூர்யாக்கு பார்த்த உடனே லவ் ஆவுது...செல்போன் திருடுராறு...
ஹோட்டல்ல மொக்கை வாங்குறாருனு...முதல் பாதி படம் மொக்கையா போச்சு...

ச்சே...முருகதாஸ் எப்படி இப்படி ஒரு சுவாரசியம் இல்லாத திரைக்கதையை
பண்ணார்னு தெரியலையேப்பா....படம் எப்ப விடும் எப்ப போலாம்னு தான்
இருந்தது... ஏதோ சில சில காட்சிகள் ஓகே... அந்த சீனாக்காரன் வர்ற சீன்ஸ்
ஓகே...ஆனா சூர்யாவையும் ஸ்ருதியையும் சேஸ் பண்ணி கார்,பைக்
மூலமா கொலை பண்ண ட்ரை பண்றது ஏதோ சுட்டி டி.வி பார்த்த எபக்ட்
கொடுத்தது.....

தமிழன் தமிழன்னு சொன்னா போதுமா...அப்படியே மண்டைல நிக்குற மாதிரி
சொல்லி இருந்தா நல்லா இருந்து இருக்கும்... ஆனா சில காட்சிகள் ஓகே...
சுருதி ஹாசன் தான் ஹீரோவா இல்ல அந்த சைனா க்காரன் ஹீரோவானு சில
டைம் கன்புசன் வருது... பாவம் சூர்யா ஆறு நாள் தண்ணீல ஊற போட்டுருறாங்க....

ஏழாம் அறிவு - எட்டாத அறிவு....!!

என்னடா இவன் இப்படியெல்லாம் எழுதுறானே....இவன் தமிழனே
இல்லன்னு சொன்னாலும் சொல்வாங்க ...க்கும்...கவுண்டர் ஸ்டைல
ஒண்ணும் மட்டும் சொல்ல ஆசைப்படுறேன்.... நான் தமிழ்ங்கோ நான்
தமிழ்ங்கோ பச்சை தமிழ்ங்கோ....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

# ஆராதனா நைட் ஷோ போனேன்....அங்கே மட்டும் டிக்கெட் ரேட் கொஞ்சம் சீப்...எழுபது
ரூபாய்....இது மட்டும் தான் படம் பார்த்ததிலே கிடைச்ச ஒரே சந்தோசம்...

# முன் அந்தி சாரலே பாட்டு ஒரு மினி இன்டெர்வல் தான்....

# இன்டெர்வல் டைம்ல மூன்று ஆட்டோகார நண்பர்கள் பேசி கொண்டது...
டேய் போதி தர்மா?? அவரது நண்பர்...டேய் அவன் போதை தர்மர் டா..என்று
கூறியது செம டைமிங் காமெடி...

# இன்னொருவர் தன் நண்பருக்கு போன் மூலம் அப்டேட் கொடுத்தார் இப்படி....
"மாமா கஜினி அளவுக்கு கூட இல்லடா... செம மொக்கையா போது...பஸ்ட் இருபது
நிமிஷம் டிஸ்கவரி சானல் போட்டாங்க டா..அதுல போதி தர்மர் யார்னு ரெண்டு மூணு
சிலையை காமிச்சி"....என்று போனது....

# என் வரிசையிலும் முன் வரிசையிலும் கிட்டத்தட்ட பத்து நண்பர்கள் அஞ்சு அஞ்சாக பிரிந்து உட்கார்ந்து இருந்தனர்.... ரெண்டாவது பாதியில் வந்த ஒரு மொக்கை காட்சிக்கு முன் வரிசையில் இருந்த நண்பர் அவனின் நண்பனை திரும்பி பார்த்தார்..உடனே இவர்..."டேய் நாந்தாண்ட உன்னை பார்க்கணும்...சும்மா உட்கார்ந்து இருந்தவனை கடத்தி கூட்டு வந்துட்டு...லுக்கை பாரு..."என்றார்....

# விரைவில் எங்க பவருதர்மர் நடிக்கும் "எட்டாத அறிவு " படம் திரைக்கு
வந்து பிச்சுக்கிட்டு போகும்னு தென்சென்னை ரசிகர் மன்றம் சார்பா வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்...

# இன்று 225 நாள் காணும் எங்கள் லத்திக்கா படத்தை காண வருபவர்களுக்கு
பிரியாணி பொட்டலமும் பஞ்சும் வழங்கப்படும்...!!


ஜெட்லி...


14 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

செம! :))

jaisankar jaganathan said...

படம் நல்லா இல்லையா நன்பா?

மைந்தன் சிவா said...

:)

ஜெட்லி... said...

@ jaisankar jaganathan ...

என்ன சார் கேள்வி இது....??

facebook update...at 2 a.m

//ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது மாமே....!! ஏழாம் அறிவு படமும் அப்படிதான்....சுத்தமா பிடிக்கல அந்த சைனாகாரனை தவிர... என்னப்பா கஷ்டப்பட்டு படத்தை எடுத்தா மொக்கைனு ஒரே வார்த்தையில சொல்றனு கேட்கறவங்களுக்கு...சாரி மொக்கை, சப்பை...போதுமா..ஜி...!! மோசமான இரவு...நாளைக்கு ப்ளாக் முடிஞ்சா அப்டேட் பண்றேன்... தியேட்டர் நொறுக்ஸ் நிறைய தேறி இருக்கு...!!//

கும்க்கி said...

பவர் இசுடார் இரசிகருக்கு வேற எந்த படமும் பிடிக்காதென்பது இதிலிருந்து தெரிய வருகிறது...

:))))

(இசுமைலி போட்டிருக்கேன் ஸ்வாமி)

வவ்வால் said...

ஜெட்லீ,

என்னய்யா உன்ப்பதிவை வெள்ளாவில வச்சு வெளுத்தீயா ஒன்னுமே சரியா தெரியலை ஒரே வெள்ளையா தெரியுது.

உண்மைல நீர் தான்யா உண்மையான விமர்சகன், ஓசில படம் பார்த்துட்டு ஆஹா ஓஹோனு சொல்றவங்க மத்தில உண்மைய உடைச்சு சொல்லிட்டீர்.பிரார்த்தனாவுக்கு எல்லாம் ஜோடிப்புறாக்களா தானே போவாங்க, அங்கே எப்படி?

ஜெட்லி... said...

@கும்க்கி

ஹி ஹி...இருக்கலாம்...எங்க பவர் ஸ்டார் போதி தர்மரா வந்திருந்தா பிடிச்சு இருக்க வாய்ப்பு இல்ல...

ஜெட்லி... said...

@வவ்வால்...
சதி பண்றாங்க ஜி... அநேகமா அந்த சைனாகாரானதான் இருக்கும்...
ப்ளாக்கர் போய் கலர் மாத்தினாலும் மாற மாட்டிக்குது....
தனியா போய் படம் பார்க்கறது ஒரு தப்பாயா ???

சேட்டைக்காரன் said...

//சுருதி ஹாசன் தான் ஹீரோவா இல்ல அந்த சைனா க்காரன் ஹீரோவானு சில டைம் கன்புசன் வருது//

எம்புட்டு நக்கல்! :-)))

வைரை சதிஷ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

வவ்வால் said...

ஜெட்லீ,

//சதி பண்றாங்க ஜி... அநேகமா அந்த சைனாகாரானதான் இருக்கும்...
ப்ளாக்கர் போய் கலர் மாத்தினாலும் மாற மாட்டிக்குது....//

நாயர் கடைல ஒரு இசுபெசல் சைனா டீ வாங்கிக்கொடுத்து பிரண்டு ஆக்கிடுறது தானே. :-))

கூட பார்ட்னர் இருந்தா படம் போரடிக்கிறதே தெரியாது, கடைசில 3 மணி நேரம் போனதும் தெரியாம என்ன அதுக்குள்ள படம் முடிஞ்சிடுத்தானும் கேட்பிங்க! :-))

L Kirubaharan MCA said...

நல்ல விமர்சனம்!!... இதயும் படிங்க.. http://pothinimalai.blogspot.com

தமிழினி said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

http://www.tamil10.com/

ஒட்டுப்பட்டை பெறநன்றி

Dinesh said...

padam neenga sonna madri avlo mokkaiyellam illa.. naduvula konjam scenes edit panni irukalam.But neenga sonnatha paarthu na bayandu thaan ponen