Friday, July 15, 2011

தெய்வதிருமக(ன்)ள்!!

தெய்வதிருமக(ன்)ள்!!


இதுவரைக்கும் நான் கணபதிராம் தியேட்டர்ல பார்த்த படங்களிலே தெய்வதிருமகள் படத்துக்கு பார்த்த கூட்டத்தை வேற எந்த படத்துக்கும் பார்த்தது இல்லை....தியேட்டர் உள்ளே என்ட்ரி கொடுக்கும் போதே ஒரு டப்பால மிச்சர், ஸ்வீட் லாம் கொடுத்தாங்க...ரைட் நாம படத்துக்கு
போவோம்...!!

விக்ரம் மன நல குன்றியவர்னு உங்க எல்லாத்துக்கும் தெரியும்,அதுக்கு அப்புறம் வேற எதுவும் சொல்றதா இல்லை. ஏன்னா நாம படம் பார்க்க போகறதுக்கு முன்னாடி சில பல கற்பனைகள் வச்சிரிப்போம். அதை ஏன் நாம லீக் பண்ணனும். உதாரணாம அமலா பால் யார்?? விக்ரம்க்கு ஜோடி யாரு??....


கிருஷ்ணாவாக விக்ரம்... சான்சே இல்லை. செம ஆக்டிங். கண்டிப்பா இப்ப உள்ள எந்த ஹீவும் நடிக்க தயங்குற கேரக்டர். சண்டை இல்லை, ரோமென்ஸ் சாங்
இல்லை...விக்ரம் நடிப்புக்கு பல இடங்களில் தியேட்டரில் செம கைத்தட்டு. நிலாவாக வரும் விக்ரம் பெண் கூட செம அழகு குட்டி. தன் குழந்தை அப்பா சொல்லும் காட்சியில், இன்னும் நிறைய சொல்லணும் மறந்துட்டேன்.

அனுஷ்கா, வக்கீலாக வருகிறார். பொட்டுக்கு கிழே அந்த விபூதி அனுஷ்காக்கு
கொள்ளை அழகு. அனுஷ்கா அப்பாவாக மகேந்திரன். அனுஷ்கா அசிஸ்டன்ட்
ஆக சந்தானம். வழக்கம் போல் டைமிங் காமெடியில் பின்னுகிறார்.
அமலா பால் எப்படி சொல்றது...

அமலா பாலை விட அனுஷ்காக்கு தான் அதிகம் நடிக்கிற வாய்ப்பை தான்
சொல்றேன். எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் கலகலக்க வைக்கிறார்.
ஆனால் முதல் பாதியில் இவரும் பாண்டியும் வர சில காட்சிகள் மொக்கையாக இருக்கு. நாசர் பெரிய வக்கீலாக வருகிறார். பாட்டு பத்தி சொல்லவே வேணாம் ஆரிரோ பாட்டு செம... அப்புறம் கதை சொல்ல போறேன் பாட்டு பிரமாதமா Visualize பண்ணி இருக்காங்க....

படம் எப்படிப்பா...?

படம் கொஞ்சம் பெருசுதான் கிட்டத்தட்ட 2.45 மணி நேரம் ஓடுது...அதே மாதிரி
சில காட்சிகள் நாடகத்தனமா கூட இருந்தது. முக்கியமா நிறைய கொட்டாவி
கூட வந்தது. ஆனா இதையெல்லாம் மீறி கிருஷ்ணாவும் நிலாவும் இணைந்தார்களா?? என்ற பாசத்தில் மேல உள்ளதை கொஞ்சம் ப்ரீயா விட்ரலாம். அட எத்தனை நாள்ங்க கமர்சியல் சினிமா பார்க்கறது... இந்த படத்தையும் பாருங்க... அழகான பாசத்தை காட்டி இருக்கிறார்கள்.

கமர்சியல் இல்லாம படம் வந்திருக்கு. அப்ப ரொம்ப போர் அடிக்குமேனு நீங்க
கேட்கலாம் அப்படியெல்லாம் இல்லை..ஆனா கொஞ்சம் அடிக்கும். அதுவும் சில சமயம் சந்தானம் வந்து சரி பண்ணிடுவார். கண்டிப்பா விக்ரம் இயக்குனர் விஜய் அந்த சின்ன பெண், அப்புறம் அனுஷ்காக்காக கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் தெய்வதிருமகள்.

தெய்வதிருமகள் - வெற்றி திருமகள்!!

தியேட்டர் நொறுக்ஸ்:

# சந்தானம் ஒரு காட்சியில் கோர்ட்க்கு கேஸ் தான் வரும்னு நினைச்சேன்
இவனை மாதிரி லூஸ் வரும்னு எனக்கு எப்படி தெரியும்" அப்படின்னு விக்ரமை பார்த்து அனுச்காவிடம் சொல்லுவார்... இந்த வசனத்துக்கு தியேட்டரில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது....

#கோர்ட் சீனில் ரெண்டு பேரு அடிக்கடி அப்பப்பா...அம்மம்மா..னு சொல்வாங்க...
சில சீனில் காமெடியா இருந்தது ஆனா ஒரு காட்சியில் வெறுப்பான ரசிகர்
ஒருவர்...."யார்ட இவனுங்க..." என்று டென்ஷன் ஆயிட்டார்.

# படம் முக்கா வாசி ஓடி கொண்டிருந்த போது பின்னாடி இருந்த ஒருவர்
அவர் நண்பரிடம் "என்ன மச்சி நாடகம் பார்க்கிற மாதிரி இருக்கு..?"னு
கேட்டார்.

# நாசர் வீட்டில் ஒரு வயதான பெண் டாக்டர் வருவார்...அவரோட வாய் கொஞ்சம் வீங்கி இருந்தது...உடனே கிழே இருந்த ரசிகர்கள்..."மச்சான் மாவா போட்டிருக்குடா..." என்று கத்த ஆரம்பித்தனர்.

#நம்ம அமலா பால் நடிச்ச சிந்து சமவெளி படத்தை திரும்பவும் ரீலீஸ் பண்றாங்க...
இந்த பதிவு பல பேரை சென்று அடைய நீங்க செய்ய வேண்டியதை மறக்காம செய்யுங்க...


நன்றி

ஜெட்லி...(சரவணா...)10 comments:

! சிவகுமார் ! said...

//நம்ம அமலா பால் நடிச்ச சிந்து சமவெளி படத்தை திரும்பவும் ரீலீஸ் பண்றாங்க...//

வாட் அ பிரேக்கிங் நியூஸ். தேங்க்ஸ்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாளைக்கு பாக்க போறேன் மச்சி

பெம்மு குட்டி said...

பார்க்கலாம்ன்னு சொல்றீங்க.......பார்த்துட்டு சொல்கிறேன்
;-))

கார்க்கி said...

எல்லாம் சரி. சிங்கம், அசலுக்கு வந்த கூட்டத்த விடவா அதிகம்? வாய்ப்பில்லையே

Anonymous said...

அருமையான விமர்சனம்...

ஜெட்லி... said...

@கார்க்கி ....


சுறா படத்தோட நல்ல கூட்டம் தான்....

kobiraj said...

நல்ல விமர்சனம் அண்ணா 'எல்லாம் சரி. சிங்கம், அசலுக்கு வந்த கூட்டத்த விடவா அதிகம்? வாய்ப்பில்லையே @கார்க்கி ....
சுறா படத்தோட நல்ல கூட்டம் தான்....' இதை நான் வன்மையாக கண்டிக்க்றேன். வெற்றிஆயுதம் வந்த பின் அண்ணன் கார்க்கி பதில் அளிப்பார்.

D.R.Ashok said...

amala paul anushka... குத்துப்பாட்டு எதுவும் இல்லையா? என்ன படம் எடுக்கறாங்கயா இவங்க?

ஜெட்லி முக்கியமான மேட்ற கடைசியா சொன்னதுக்கு கண்டிக்கிறேன்... :)

இராஜேந்திரன் said...

Sir,
i want your help, please very very urgent please call or missed call
RAJENDRAN P
9941008520
pe.rajendran@yahoo.com

ஜெட்லி... said...

@ இராஜேந்திரன்,,

எதா இருந்தாலும் மெயில் பண்ணுங்க ஜீ,,,