Friday, June 17, 2011

அவன் இவன் ... எவன்..??

அவன் இவன் ... எவன்..??





சில பல மாசங்கள் கழிச்சு மொத நா மொத ஷோ அவன் இவன் படத்துக்கு போற வாய்ப்பு கிடைச்சுடுச்சுடோய்னு கொஞ்சம் சந்தோசம். ஆனா சந்தோசம் படம் பார்த்த அப்புறம் இருந்ததா இல்லையான்னு தான் இப்ப முக்கியம். அதை பத்தி நாம பின்னாடி டிஸ்கஸ் பண்ணுவோம்.

அவன் இவன் என்ன கதை....

அவன் இவனின் அப்பாவாக சூப்பர் சிங்கர்ல ஒருத்தர் தாடி வச்சி வருவாரே அவரு....அண்ணனாக விஷால் அவர் அம்மாவாக அம்பிகா தம்பியாக ஆர்யா அவர் அம்மாவாக தெலுங்கு அம்மாயி ஒண்ணு. நொடிஞ்சு இடிஞ்ச ஜமீனாக ஜி.எம்.குமார் ஏதோ ஐநஸ்னு சொல்றாங்க....எப்படி கதையே சொல்றது....?? அண்ணன் தம்பி ரெண்டு பேரும் முதல்ல அடிச்சுப்பாங்க... குமார் ஒரு வேலையை ரெண்டு போரையும் செய்ய சொல்வார்...செய்வாங்க..
அப்போ அப்போ...ஹா அப்போதான் தீடிர்னு வில்லன் ஆர்.கே வருவார்...ரெண்டு பேரும் வில்லனை அடிப்பாங்க. அப்புறம் படம் முடிஞ்சு Film by bala னு கார்ட் வரும்.....!!


அவன் இவன் படத்துல என்ன ஸ்பெஷல்னு உங்களுக்கே தெரியும் அது ஒன்றை கண்ணாக வரும் நம்ம விஷால் தான்னு. ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்கிறார். பயங்கரமான உழைப்பு. இந்த படத்தில விஷால்க்கு அப்புறம் நான் சொல்ல போறது ஆர்யானு நீங்க நினைக்கலாம் ஆனா அது தான் இல்லை...அவர் ஜி.எம்.குமார்... மனிதர் பின்னி எடுத்து இருக்கிறார். ஒரு காட்சியில் அம்மணமாக கூட வருகிறார். ஆர்யாவும் நல்லா தான் பண்ணி இருக்கிறார்.என்ன சில காட்சியில் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆனா மாதிரி இருக்குது...சில பல
காட்சிகள் பிதாமகன் மாதிரி தான் இருந்தது.படம் முதலில் இருந்தே காமெடியில் டாப் கீர்ல தான் போச்சு. வசனங்கள் செம.விஷால் மற்றும் ஆர்யாவின் அறிமுக காட்சி சூப்பர்.


பாலாவோட படம் கண்டிப்பா வித்தியாசமான களமா இருக்கும்னு நம்பி போனேன்..இருந்துச்சு...ஆனா சில பல காட்சிகள் அப்படியே அவரோட பழைய படத்தை நினைவு படுத்தியது கொஞ்சம் போர் ஆக இருந்தது. அப்புறம் படத்தோட பல காட்சிகளில் ஒன்ற முடியலை. போலீஸ்காரரை முதலில் ஓட்டும் போது நன்றாக தான் இருந்தது ஆனால் அதற்கு அப்புறம் ஆர்யா ப்ளேட் சாப்பிட்டு ஹாஸ்பிடல் போகும் காட்சி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் இருந்தது.

நான் ரொம்ப ரசிச்சு கை தட்டி சிரிச்ச சீன் டுடோரியல் எக்ஸாம் காட்சி...ரெண்டாவது காந்தி யார் கேள்விக்கு பதில் கிடைத்தவுடன் வாத்தியார் சொல்லும் "ஏசப்பா".. வாக்கியம்.அப்புறம் நாடக மேடையில் பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும்னு? விஷால் கேட்கும் போது. ஆர்யா "அவனுக்கு என்ன வேணும்னே உனக்கு தெரியல என்னையா நீ கடவுள்..." னு கேட்கும் காட்சி.


சூர்யா வரும் காட்சி கூட எதுக்குனு நான் யோசிச்சப்ப அங்கே விஷாலோட ஆக்டிங் உண்மையிலே சூப்பர். அந்த காட்சியில் மட்டும் தான் கொஞ்சம் மண்டை கீர்னுச்சு....அப்புறம் கடைசில் ஜி.எம்.குமாரை பார்த்து விஷால் அழுகும் காட்சி ..மற்றபடி வேற எதுவும் மனசை தொடலை. ரெண்டு நாயகி..ஒண்ணும் சொல்லும் படியா பெருசா இல்லை..ஆனா ஆர்யா டாவு கட்டுற பொண்ணோட ஏட்டாக வரும் பெண்ணுக்கு வேலை அதிகம் தான். யுவன் மியூசிக் ராசாத்தி ஓகே...ஆர்.கே வை காட்டும் போது ஒரு மியூசிக் அடிக்கடி வரும் அதை எங்கையோ கேட்ட மாதிரி இருந்தது...எங்கனு சொல்லுங்கப்பு...

அது சரி படம் எப்படி...தேறுமானு கேட்டா...என்னத்த சொல்றது..தியேட்டர்ல
கலவையான விமர்சனம் தான். என்னை கேட்டா கஷ்டம்னு தான் சொல்வேன்...
ஒரு தடவை தாரளமா பார்க்கலாம். ரீப்பீட் ஆடியன்ஸ் கிடைக்கிறது ரொம்ப
கஷ்டம். ஆமா படத்தோட கதை என்னனே சரியா எனக்கு விளங்கல...ரெண்டு திருடங்க ஜாலிய காமெடி பண்றாங்க போலீஸ்காரனை கலாய்க்கிறாங்க.. .தீடிர்னு ஒரு வில்லன் வரான்... தீடிர்னு பழி வாங்குறாங்க.... ...டீடைல்லா பார்த்தா படத்துல பல விஷயங்கள் இருக்குனு மட்டும் புரியுது....என்னமோ போங்க..


அவன் இவன் - எவனா இருந்தா எனக்கென்ன...!!





தியேட்டர் நொறுக்ஸ்:


# வழக்கம் போல நம்ம கணபதிராம்ல தான் படம் பார்த்தேன்...படுபாவிங்க ஏ.சி.யே போடல...ஆபரேட்டர் தான் பாவம் என்னா திட்டு...

# அம்பிகா ஆர்யாவை பார்த்து "அவனுக்கு குஞ்சுமணியை புடிச்சு ஒழுங்காவே ஒன்னுக்கு போக தெரியாது "என்ற காட்சிக்கு செம ரெஸ்பான்ஸ்...

# ஆர்யாவும் அவர் அம்மாவும் ஆடும் கூத்து ஆட்டத்துக்கு தியேட்டரில் செம விசில்.....

# படம் முடிந்து வண்டி எடுக்கும் போது..ரெண்டு நண்பர்கள் பேசிகொண்டது..

படம் எப்படி...
எனக்கு புடிக்கல...
உனக்கு எப்பவுமே இப்படி தான்...
என்னா கதைன்னு சொல்லு பார்ப்போம்...
என்று பேசி கொண்டே சென்றார்கள்....


இந்த பதிவு பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான வாக்கினை செலுத்த மறவாதீர்....


உங்கள்
ஜெட்லி...(சரவணா...)



14 comments:

CS. Mohan Kumar said...

Jetli Back to form.

Senthil said...

gud

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sunday will watch maamooo

rajamelaiyur said...

Pakkalama? Veyndama?

ஜெட்லி... said...

@"என் ராஜபாட்டை"- ராஜா...

அது உங்க இஷ்டம் பாஸ்...

காவேரிகணேஷ் said...

படம் பார்த்து மண்ட காஞ்சு போய் இருக்கீங்கன்றது நல்லா தெரியுது...

கிருபாநந்தினி said...

//என்னா கதைன்னு சொல்லு பார்ப்போம்...
என்று பேசிக்கொண்டே சென்றார்கள்// ஆமாங்ணா! படம் பார்த்துட்டு வந்த எந்தம்பிய என்னாடா கதைன்னு கேட்டேன். அட, போக்கா! ஒண்ணுமே புரியலைங்கிறான்!

Short Stories Collection said...
This comment has been removed by the author.
DREAMER said...

என் நண்பர்கள் வட்டத்திலும் படத்தை பற்றி கலவையான கருத்துக்களே வருகின்றன. இந்த பதிவு, உங்கள் பார்வையை மட்டுமே பகிரும் நடுநிலையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி..! மீண்டும் முழுவீச்சுல களமிறங்குங்க பாஸ்..!

பின்னோக்கி said...

எதாவது பின்நவீனத்துவக் கருத்து படத்துல இருக்குமுங்க. கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடுங்க. தேடினா கிடைக்காமலா போய்டும்.

ஜெட்லி... said...

நன்றி..நன்றி..
\\

@பின்னோக்கி ... pothum boss...

உணவு உலகம் said...

சினி விமரிசனம் சிறப்பா இருக்குங்க.

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

Unknown said...

Nice Maapla!